ஒவ்வொரு வீட்டிலும் சக்தி ஒளி இருக்க வேண்டும். எந்த வீட்டில் அது இருக்கிறதோ அங்கே நான் இருக்கிறேன் என்று பொருள்.அது வியாபாரப் பொருள் அல்ல! தெய்வீகப் பொருள் என்பது அன்னையின் அருள்வாக்கு.

அன்னையின் இந்த அருள் வாக்கின் நுட்பம் பலருக்குப் புரிவதில்லை.கண்ணணின் அவதார காலத்து நிகழ்ச்சிகளை விளக்குவது பாகவதம். வைணவர்கள் பாகவத நுாலைப் புனிதமாகப் போற்றி வருகின்றனர்.

பகவான் இராமகிருஷ்ணர் வாழ்வில் நடைபெற்ற சம்பவம் இது!

ஒரு நாள் பகவான் இராமகிருஷ்ணர் விஷ்ணு கோயிலின் முன் அமர்ந்து பாகவத பாராயணம் கேட்டுக் கொண்டிருந்தாராம். கேட்டபடியே பரவச நிலையில் ஆழ்ந்தார். அப்போது பேரொளியுடன் கண்ணன் அவர் முன் தோன்றினானாம். அந்த நீலவண்ணக் கண்ணனின் திருவடிகளிலிருந்து ஓர் ஒளிக்கற்றை வெளிப்பட்டுப் பாகவத புத்தகத்தில் மேல் பட்டது.

பின்னர், குருதேவரின் மார்பில் படிந்து கண்ணனின் திருவடிகள் பாகவத நுால், குருதேவரின் மார்பு, ஆகிய மூன்றையும் சிறிது நேரம் இணைத்து நின்றதாம்.

இந்தக் காட்சி அவர் மனதில் ஓர் உறுதியை உண்டாக்கிற்று. அதாவது பாகவதம், பக்தன், பகவான் ஆகிய மூன்றும் தனித்தனியே தோன்றினாலும் மூன்றும் ஒன்றே! அல்லது ஒன்றின் வெளிப்பாடுகளே மூன்றும் என்ற நம்பிக்கையே அது.

வைணவர்கள், தெய்வ நினைவு மனதில் ஊறிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக நாள்தோறும் கொஞ்சம் கொஞ்சம் இராமாயணம் படித்து வருவார்கள். நுால் முழுவதும் படித்து முடித்த பிறகு பாராயணம் நிறைவு பெற்றதாகப் பொருள். சிலர் பாகவதம் படித்துப் பாராயணம் செய்வார்கள்.

அம்மாவின் பக்தர்கள் அன்றாடம் அம்மாவின் அவதாரகால நிகழ்ச்சிகளைக் தினம் தினம் பாராயணம் செய்து தெய்வ நினைப்பை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதனால் அவ்வப்போது மனம் புத்துணர்ச்சி அடையும். சந்தேகங்கள் நீங்கும். மனச் சுமை குறையும். மனம் இலேசாகும்.

அம்மாவின் அவதார கால வரலாற்று நிகழ்ச்சிகளை வெளியிடுவது சக்தி ஒளி மட்டுமா?

1. திருமதி. அடிகளார் எழுதிய ’ஒரு ஆத்மாவின் அனுபவங்கள்’ என்ற நுால் அம்மாவின் இளமைக்கால வரலாற்றைக் கூறும் நுால்.

2. ’மேல் மருவத்துார் அன்னையின் அற்புதங்கள்’ என்ற நுால் அம்மாவின் பல்வேறு பரிமாணங்களை விளக்கும் நுால்.

3. ’மேல்மருவத்துார் தல வரலாறு’ முதல் பாகம் அம்மாவின் அருள்வாக்கு கேட்ட பக்தர்களின் அனுபவங்களைக் கூறும் நுால்.

4. ’மேல் மருவத்துார் தல வரலாறு- இரண்டாம் பாகம் அம்மா நடத்திய ஆன்மிக மாநாடுகள் – அம்மா மேற்கொண்ட ஆன்மிகப் பயணங்கள் -சக்தி பீடங்கள் – அங்கு நடத்திய அற்புதங்கள் பற்றிக் கூறும் நுால்.

இவற்றையெல்லாம் வாங்கி வைத்துக் கொண்டு சிறிது சிறிதாகப் படித்துப் பாராயணம் செய்து வாருங்கள்! பாராயணம் என்றால் மனப்பாடம் செய்வது என்ற பொருள் அல்ல!

தினந்தோறும் ஒவ்வொரு அத்தியாயமாகப் படித்து நுாலை முடிப்பது. அவ்வாறு செய்து பாருங்களேன்! மனம் தெளிவடையும். தெய்வ நினைப்பு ஊறும்! மேலும் சூக்குமமான பலன் விளையும்.

இவையெல்லாம் அம்மாவிடம் பக்தியை வளர்த்துக்கொள்ளும் வழிகள்!

 ஓம் சக்தி!

நன்றி

 சக்தி ஒளி – அக்டோபர் 2007

]]>

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here