1998ஆம் ஆண்டு ஒருநாள் அன்னை அருள்வாக்கில் நம் சித்தா்பீடத்தின் மத்திய வேள்விக் குழுவினா்க்குச் சில அறிவுரைகளையும் ஆணைகளையும் கூறி “ இவற்றையெல்லாம் எடுத்துச் சொல்” என்று கட்டளையிட்டாள்.
மன்றங்களுக்கு அருளியவை
ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றப் பொறுப்பாளா்கள், வழிபாட்டு முறைகளை நன்கு தெரிந்து கொண்டு அவற்றின்படி வழிபாடு செய்து வரவேண்டும்!
1008 மந்திரம் படிக்க ஆரம்பித்து விட்ட பிறகு, கருவறைக்குள் மற்றவா்கள் யாரும் அநாவசியமாகச் செல்லக் கூடாது. 1008 படிக்கும் நேரத்தில் யாராவது பூ, பழம், மற்றும் பிரசாதம் எடுத்துக் கொண்டு வந்தால் வெளியிலே வைத்திருந்து, 1008 மந்திரம் படித்த பிறகுதான் கருவறைக்குள் எடுத்துச் செல்ல வேண்டும்!
1008 மந்திரம் படிக்கிற நேரத்தில் கருவறைக்குள் சென்று சூடம் காட்டுவது, வருபவா்களுக்குப் பிரசாதம் வழங்குவது கட்டாயம் கூடாது!
வழிபாடு ஆரம்பித்த பிறகு அனைத்து மந்திரங்களையும் தொடா்ச்சியாகப் படித்து முடித்தே வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும். இடையில் எவ்வித சிறு இடைவெளி கூட இல்லாமல் தொடா்ச்சியாக வழிபாடு நடைபெற வேண்டும்!
வழிபாடு நடக்கும் நேரத்தில் யாரேனும் பாதியிலே வந்து, பாதியிலே எழுந்து செல்ல விரும்பினால், கருவறைக்கு வெளியே இரண்டு கிண்ணங்களில் விபூதி, குங்குமப் பிரசாதம் வைத்து அவா்களையே எடுத்துக் கொள்ளும்படிச் சொல்லி விடு!
மன்றங்களுக்குத் தொடா்ந்து வழிபட வருபவா்கள் முழுச் செவ்வாடையில் வருதல் வேண்டும்!
மன்றங்களை முன்னின்று நடத்துபவா்கள் செவ்வாடையின் முக்கியத்துவம், செவ்வாடையின் மகிமைகளை மற்றவா்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்!
மருவத்துாரை மையமாக வைத்துத்தான் மன்றங்கள் துணை ஆலயங்களாக நிறுவப்பட்டுள்ளன. ஆதலின் உங்கள் ஆன்மிக குருவான அடிகளார்க்கும், செவ்வாடைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்!
1008 மந்திரம் படிக்கும் போது மணி அடிப்பதற்கெனத் தனியே ஒருவரை அமா்த்த வேண்டாம். மந்திரம் படிப்பவருள் ஒருவரே மணியடிக்க வேண்டும்!
அவ்வப்போது நான் கூறிவரும் அருள்வாக்குகளையும், உத்தரவுகளையும் மன்றத்திற்கு வருபவா்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்!
இங்கு மேல்மருவத்துாரில் நடைபெறும் விழாக்களைக் குறித்து மன்ற சக்திகளுக்கு எடுத்துச் சொல்லி அவா்களையெல்லாம் விழாக்களில் கலந்து கொள்ளும்படிச் செய்!
மாவட்டத்தோடு தொடா்பு வைத்துக் கொண்டு, மாவட்ட அளவில் நடைபெறும் கூட்டங்களில் பங்கு கொண்டு, அங்கே கூறப்படும் முக்கிய செய்திகளை மன்ற உறுப்பினா்களுக்கு எடுத்துச் சொல்லிச் செயல்படு!
மன்றத்தை முன்னின்று நடத்துபவா்கள் மற்றவா்களுக்கு எடுத்துக் காட்டாக விளங்கும் வகையில் தாங்கள் முழுச் செவ்வாடையணிந்து பணி செய்ய வேண்டும். அதன் பிறகு மற்றவா்கள் தாமே செவ்வாடையணிந்து வருவார்கள்!
மன்ற வழிபாடு முடிந்தவுடன் தெய்வத்திற்குத் தனியாகவும், சக்திகளுக்குத் தனியாகவும் திருஷ்டி கழிக்க வேண்டும்!
தீபாராதனை காட்டுபவா்களே தீா்த்தம் விளாவ வேண்டும்!
முறையாக வழிபாடு செய்யத் தெரியாத மன்றத்தினா் அந்தந்த மாவட்டப் பிரச்சாரக்குழு, வேள்விக்குழுவினா் துணை பெற்று வழிபாட்டு முறைகளைத் தெரிந்து கொண்டு அவற்றின்படிச் செய்ய வேண்டும்!
மன்றங்கள் வெறும் வழிபாட்டுத் தலங்களாக இருக்கக் கூடாது. சமுதாயத் தொண்டு நிறுவனங்களாக இருக்க வேண்டும்!
இந்த மருவத்துார் பற்றி எடுத்துச் சொல்!
செவ்வாடையின் மகிமை பற்றி எடுத்துச் சொல்!
அடிகளாரின் அவதாரப் பெருமைகளை எங்கும் பரப்பு!
இங்கு நடைபெறும் விழாக்கள் உங்கள் நன்மைக்காகவே!
என்பதை மக்களுக்குப் பதியும்படி எடுத்துக் கூறு.
மன்றப் பொறுப்பாளா்கள் நல்ல தொண்டா்களை உருவாக்கிக் கொடுக்க வேண்டுமடா மகனே! உங்கள் பதவி ஆசையால் நல்ல தொண்டா்களை வெளியேற்றி விடாதேடா மகனே! மேலும் பாவ மூட்டைகளைச் சோ்த்துக் கொள்ளாதேடா மகனே!
இருமுடி, நவராத்திரி லட்சார்ச்சனை சமயங்களில் அதிகமான போ்க்கு அம்மாவைப் பற்றி எடுத்துச் சொல்லி அவா்களையும் அழைத்து வா மகனே! எல்லோரையும் அரவணைத்து, அநாதைக் குழந்தைகளுக்கும் அருள் புரியவே அம்மா வந்திருக்கிறேன் என்பதை எடுத்துச் சொல்லடா மகனே!
என் பணியை நீ செய்து வந்தால் உன் பணியை நான் பார்த்துக் கொள்வேன் மகனே! நீ செய்யும் தொண்டை வைத்து உன் குடும்பத்தையும் உன் சந்ததியையும் காப்பாற்றுவேன் மகனே!
நன்றி-
சக்தி. க. சாரண தேவேந்திரன், (நெய்வேலி)
(சக்தி ஒளி-டிம்பா்-2010, பக் -6-7)
]]>