நம் மனதில் தோன்றும் கருத்துக்கள் அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சிகள், காணும் காட்சிகள் இவற்றை நீண்ட நாட்கள் மனதிலும், மூளையிலும் பதிய வைத்துத் தகுந்த நேரத்தில் வெளிப்படுவது என்பது இளலாத காரியம்.  ஒரு சில நாடகளில் அவை நம் நினைவிலிருந்து மறைந்து விடும்.



        கம்யுட்டரில் தேக்கி வைக்கும் விஷயங்கள் வைரஸ்வந்தால் அழிந்து விடுவதுபோல, மனிதனுக்கு வயதாக, ஆக மறதி நோயாகவே வந்து எல்லா விஷயங்களும் மறந்து விடுகிறது.         இதற்காக எழுத்து வடிவத்தில் தோன்றிய கலைதான் இலக்கியம், அலக்கணம், நாடகம், புதினம் பொன்ற நூல்கள்.  இவை காலத்தால் அழியாது பல சந்தநியருக்கும் பயன் அளிக்கின்றன.  அதுபோல பல அறிஞ்ஞர்களின் பயணக் கட்டுரைகள் இன்றைக்கம் அந்நாட்டு மக்களின் அன்றைய கலாச்சாராத்தையும். நாகரிகத்தையும். ஆட்சி முறைகளைப் பற்றியும் தெரிந்து கொள்ளப் யன்படுகின்றன. பழமையான விஷயங்களை நாம் புத்தகங்களின் வாயிலாகப் படித்தறிய முடிகிறது.

        அதுபோல நான் ஏதோ எனக்கத் தெரிந்த வரையில் பார்த்த இடங்களைப் பற்றி ‘சக்தி ஒளி’யில் எழுத ஆரம்பித்தேன். அதைப் படிப்பதில் சக்திகளுக்கும் ஆர்வம் இருக்கிறது என்ற தெரிந்தவுடன்.  எனக்கம் எழுத வெண்டும் என்ற எண்ணம் ஏற்றபட்டது.

        சமீபத்தில் சீனாவுக்கச் சென்றிருந்தேன்.  இந்தச் சீனப் பயணம் மற்ற பயணங்களைவிட எனக்கு வித்தியாசமாக இருந்தது.  மற்ற பயணங்கள் வெளிநாட்டு பக்தர்கள். ஆன்மிகம் இவற்றோடு தொடர்வுடையதாய் இருந்தது.  சில நேரங்களில் அங்கிருப்பவர்களில் சிலர் அவர்களுக்கள் இருந்த உட்புசலில் நம்மைத் தொடர்பு படுத்தி நமக்க மனவருத்தம் ஏற்படும்படி நடந்து கொண்டார்கள்.

        வெளிநாட்டுக்குச் சென்று வந்தாலும் மன வருத்தத்தோடுதான், சில பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டி இருந்தது.  அனால் இப்பயணம், தன்னிச்சையான முடிவுடனும் மகிழ்ச்சியாகவும் கழி்ந்த பயணமாக அமைந்தது. பக்கத்து நாடான சீனாவைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்குப் பல நாடகளாக இருந்து வந்தது.  அம்மாவிடம் அனுமதி கேட்கும்பபோது, “நீங்களெல்லாம் உலகம் சுற்றும் முதியோர்களா? போய் வாங்க!” என்று சிரித்துக் கொண்டே உத்தரவு கொடுத்தார்கள்.  அதன் பிறகு மாப்பிள்ளை டாக்டர். த. ரமேஷ் பயண ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தார்.  பத்துப் பேர் கொண்ட குழுவினர் கடந்த நவம்பர் பதினேழாம் திகதி சீனாவுக்க பயணமானோம்.

        சென்னை விமான நிலைத்திலிருந்து புறப்பட்ட துபாய் விமான நிலையத்தில் இறங்கி, பிறகு அங்கிருந்த புறப்பட்டு ஷங்காய், புடாங் சர்வதேச விமான நிலையத்தை  அடைந்தோம். ஒரு நாள் முழவதும் விமானப் பயணம், சற்று சோர்வாகத்தான் இருந்தது. போகும்போதே எங்கள் உடமைகளை ஒட்டல் அறைக்கு அனுப்பிவிட்டு நாங்கள் விரைவு இரயில் பயணம் செய்தோம்.  450 கி.மீ தூரத்தை ஒருமணி நேரத்தில் கடக்கும் வேகமான துரித இரயில் அது.  அதுபோன்ற இரயில் பயணம் நம்முடைய அடுத்த சந்ததியர்க்குக் கிடைக்குமா? என்பதே சந்தேகம். இரவு ஓய்வுக்குப் பிறகு அடுத்த நாள் பயணத்திற்குத் தயாரானோம். சீனாவைப் பார்க்கும்போது. சீனாவைப் பற்றி நம்மடைய கருத்துக்கணிப்பு தவறானத என்று நினைக்கிறேன்.

        சீனா என்றால் உலகத்தின் மக்கள் தொகையில் முதலிடம் வகிக்கும் நாடு.  சீனர்கள் தவளை, பாம்பு, சாப்பிடுவாங்க! நம் இந்தியர்களைப் போல பல நாடுகளில் பரவி வேலை செய்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

        சீனர்களிடம் நம்மைப் போல தெய்வ நம்பிக்கையும் உண்டு, மூடநம்பிக்கையும் உண்டு.  இந்திய அரசியல் நம் முன்னேற்றத்திற்குத் தடையாக அதிக மக்கள் தொகையைக் காரணம் காட்டுகிறது.  ஆனால் எலகத்தின் மக்கள் தொகையில் முதலிடம் பெற்றது சீனா.  அந்த மக்கள் தொகையை வைத்துக் கொண்டெ அந்த நாடு கடந்த இருபது ஆண்டுகளில் இவ்வளவு முன்னேற்றம் அடைந்திருப்பதைப் பார்க்கும்போது.  ஆச்சரியமாக உள்ளது.  இன்னம் நூறு ஆண்டுகள் சென்றாலும் நாம அந்த அளவுக்கு முன்னேற முடியுமா என்று மனதில் ஒரு கேள்விக்குறி எழுகிறது.

        டில்லி, முப்பை, கல்கத்தா என்ற இந்தியாவின் முக்கிய நகரங்களைப் போல ஷங்காய். சியான், பெய்ஜிங் என்ற மூன்று முக்கியப் பெருநகரங்கள் வளர்ச்சி பெற்று வருகின்றன.  அவ்வளவு மக்கள் தொகை இருந்தாலும் நாடு தூய்மையாக உள்ளது.  மக்கள் தொகை அதிகமிருந்தாலும், நெரிசல் கிடையாது.  சுறுப்பான மக்கள், பெண்கள் எல்லா இடங்களிலும் வேலை செய்கிறார்கள்.  இதையெல்லாம் பார்க்குபோது குடியரசு நாடான நம் இந்தியா, கம்யுனிஸ்டு நாடான சீனாவைப் போல முன்னேறுவது எப்போது?  மக்கள் தொகையில் வேண்டுமானால் ஒருவேளை நாம் முன்னெறிவிடுவோமோ என்னவோ..!?

        சரி, நம்ம பயணத்தைத் தொடரலாமா?  காலை உணவுக்குப் பிறகு ஷங்காய் பழைய நகரத்தைச்  சுற்றி பார்க்கச் சென்றோம்  எங்களுக்கு வழிகாட்டியாக வந்த ஷெங் (Mr.Chang) என்ற இளைஞர் பற்றி முதலில் சொல்ல வேண்டும்.  பல்கலைக் கழகத்தில் படித்து ஆங்கிலம் சரளமாகப் பேசத் தெரிந்த இளைஞர் அவர்.  எங்களுக்கு மிகவும் உறுதுணையாக இருந்து எல்லா இடங்களையும் சற்றிக் காட்டி விளக்கம் தந்தார்.   அவர்  ஷங்காய் நகரத்தைப் பற்றி கூறிய செய்திகளைத்தான் எங்களுக்க கூறப் பொகிறேன்.

        ஷங்காய் 1.9 கோடி மக்கள் தொகை கொண்டது.  6000 சதர கி.மீ பரப்பளவு கொண்டத.   ஷங்காய் ஒரு யுனியன் பிரதெசம்.  ஒலிம்பிக் பொட்டியை மன்னிட்டு இந்நகரம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.  சீனா ழுழுவதும் பல யுனியன் பிர தேசங்கள் உள்ளன.  “யுவான் சுவாங் ” என்ற சீனா யாத்திரிகரின் நினைவாக சீனாவின் பணத்திற்கு “யுவான்” என்று பெயரிட்டுள்ளார்கள். சீனாவில் கார் வாங்கவதைவிட நம்பர் பிளேட் வாங்குவதற்குத்தான் பணம் அதிகம் செலவாகும்.  ஒரு கார் பதிவுக்க, 35,000 யுவான் செலவாகுமாம்.  சீனமக்கள் 8 வையான உணவு வகைளைச் சாப்பிடுவார்களாம்.  ஏறக்குறைய நம்மடைய பணம் 8 ரூபாய்க்கு 1 யுவான் கிடைக்கிறது.

        சீனாவில் 1000 வகையான சீனமொழி பேசுகிறார்களாம்.  நம் நாட்டில் ஒவ்வொருமாநிலம் ஒவ்வொரு மொழி பேசுவதுபோல. அதிலும் பல உட்பிரிவுகள் இருப்பதபோ. சீன மொழியிலும் பல வகைகள் உண்டு.  அவர்களின் தேசிய மொழி மந்தாரின் (Mandarin).    99 சதவித மக்கள் இந்த மொழியைப் பேசுகின்றனர்.  சீன மொழியில் 3000 ஒரு எழுத்து சொற்கள் உள்ளனவாம்.

                                                                                                      பயணம் தொடரும்….!
                                                                                                          பகுதி 1 நிறைவு
                                                                                                         திருமதி அடிகளார்
நன்றி சக்தி ஒளி
ஜனவரி 2009பக்கம் (5-8)

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here