2. முதலில் குருவின் படத்திற்கும் தீப ஆராதனை செய்ய வேண்டும். பின் எலுமிச்சம் பழத்தில் குங்குமம் போட்டு குருவிற்கும் அம்மாவிற்கும் திருஷ்டி கழிக்க வேண்டும். குரு படம் அம்மா படம் இரண்டிற்கும் சேர்த்து ஒரு எலுமிச்சம் பழம் கொண்டு திருஷ்டி கழித்தால் போதுமானது.

பின் தாய் விளக்கில் இருந்து ஒரு அகல் விளக்கிற்கு தீபத்தை மாற்றி விட்டு, பூஜைக்கு வேண்டிய சாமான்களைத் தாய் விளக்கு உட்பட நன்கு தேய்த்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும். தாய்க் கலசம் சுத்தம் செய்யும் முன் அதிலுள்ள தீர்த்தத்தை ஒரு சுத்தமான பாத்திரத்தில் எடுத்து வைத்துவிட்டு சுத்தம் செய்து நூல் சுற்றி தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். அன்றைய பூஜைக்கு வேண்டிய சாமான்களை அதாவது வெற்றிலை, மஞ்சள் கிழங்கு, புஸ்பம், பழம், தேங்காய், எலுமிச்சம் பழம், வேப்பிலை முதலிய பொருட்களைத் தயார் செய்து கொள்ள வேண்டும். அம்மாவிற்கு வைக்கப்பட வேண்டிய உப்பில்லா வெண் பொங்கல் மன்றத்திலேயே தயார் செய்து, அதன் மீது பழம், தயிர் கரும்பு சர்க்கரையுடன் வேப்பிலை போட்டு அதே பாத்திரத்தை தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

3. முதலில் குரு படத்திற்கு அலங்காரம் கலைக்கவும்.

4. பின் அம்மா படத்திற்கு அலங்காரம் கலைக்கவும்.5. முதலில் குரு படத்தை மஞ்சள் நீரில் சுத்தமான துணியை நனைத்து நன்றாக சுத்தம் செய்யவும்.

6. பின் அம்மா படத்தையும் சுத்தமான துணியை மஞ்சள் நீரில் நனைத்து சுத்தம் செய்யவும். மேடை இருந்தால் மேடையை நீரினால் சுத்தம் செய்யவும்.

7. முதலில் குரு படத்திற்கு அலங்காரம் செய்ய வேண்டும். ஒரு பொட்டு வைக்கவும். பின் வேப்பிலை வைத்து மலர்மாலை போட வேண்டும்.

8. பின் அம்மா படத்தை அலங்காரம் செய்ய வேண்டும். சுயம்பு, அம்மா, அடிகளார் ஆக மூன்று பொட்டு வைத்தால் போதுமானது. பின் வேப்பிலை வைத்து மலர் மாலை போட வேண்டும்.

9. சுத்தம் செய்த தாய் விளக்கிற்குப் பொட்டு வைத்து அகலில் இருந்து தீபத்தை ஏற்றிவைக்கவும். தாய் விளக்கின் மூலம் காமாட்சி விளக்கை ஏற்றி அம்மாவின் மையத்தில் வைக்கவும். பின் மற்ற தீபங்கள் இருந்தால் ஏற்றிக் கொள்ளவும்.

10. முதலில் குருவின் படத்திற்கு முன்பாக பிரசாதம் வைக்க வேண்டும். பிரசாதம் என்பது காம்பு கிள்ளிய இரண்டு வெற்றிலை [வெற்றிலையின் காம்பு கிள்ளிய பகுதி குருவின் வலதுகை புறம் இருக்கும்படி வைக்க வேண்டும்] வெற்றிலையின் மீது இரண்டு கிழங்கு மஞ்சள் அதன் மீது உதிரி புஸ்பம் வைத்து இரண்டு வாழைப்பழம் வைக்க வேண்டும். [வாழைப்பழம் இரண்டும் தனித்தனியாக காம்புடன் இருந்தால் காம்பைக் கிள்ளி வைக்க வேண்டும். வாழைப்பழம் இரண்டும் காம்போடு ஒட்டி இருந்தால் காம்பு இருக்கும் பகுதி குருவின் வலப்பக்கம் இருக்கும்படி வைக்கவும். பின் ஒரு எலுமிச்சம் பழம் இருந்தால் வைக்கவும். ஊது பக்தி 2 ஏற்றி வைக்க வேண்டும்.

11. தாய்க் கலசத்திற்கு நூல் சுற்றி திசைக்கு ஒரு பொட்டு விதம் 4 பொட்டுகளும் இந்த 4 பொட்டுகளில் ஏதாவது ஒரு பொட்டிற்கு நேராக கலசத்தின் மேல் முகப்பில் ஒரு பொட்டும் ஆக மொத்தம் ஜந்து பொட்டுகள் வைக்க வேண்டும். பின் கலசத்தின் உள் ஊதிபக்தி புகை காண்பித்து ஏற்கனவே எடுத்து வைத்துள்ள பழைய தீர்த்தத்தில் சிறிதளவு கலசத்தில் ஊற்றி அத்துடன் தேவையான அளவிற்கு மஞ்சள் நீர் கலந்து தீர்த்தம் தயார் செய்து கொள்ளவும். தீர்த்தப்பொடி இருந்தால் கலந்து கொள்ளலாம். கலசத்தில் சிறிதளவு விட்டது போக மீதமுள்ள பழைய தீர்த்தத்தை அன்றைய வழிபாடு முடிந்து பிரசாதமாக விநியோகம் செய்ய வைத்துக் கொள்ளவும்.

ஏற்கனவே தாய் கலசத்தில் இருந்த தேங்காயை அன்றைய பிரசாதமாக அம்மாவின் முன் வைப்பதற்கு உடைத்து வைத்துக் கொள்ளவும் உபயதாரர்  கொண்டு வரும் பஞ்சுடன் கூடிய தேங்காயை மஞ்சள் பூசி பின்னர் தேங்காய்க்கு ஏதாவது ஒரு திசையில் ஒரே நேர்கோட்டில் மூன்று பொட்டுகளும் பக்க வாட்டில் நடு பொட்டிற்கு சரியான நேராக இரண்டு பொட்டுகள் ஆக மொத்தம் ஜந்து பொட்டுகள் வைக்க வேண்டும். கலசத்தின் மீது 5 மாவிலை இதழ் அல்லது 9  மாவிலை இதழ் வைத்து தேங்காயைக் கலசத்தின் மீது வைக்க வேண்டும். அவ்வாறு வைக்கும் போது தேங்காயில் நேர்கோட்டில் அமையுமாறு வைக்க வேண்டும். [மாவிலை இல்லையெனில் வேப்பிலை வைத்துக் கொள்ளலாம்] தேங்காயின் மேல் புஸ்பம் வைக்கவும். அம்மா படத்திற்கு முன்பாக சிறிய பித்தளைத் தட்டில் பச்சரிசி பரப்பி அதன் மீது தாய்க்கலசம் வைக்க வேண்டும்.

12. முதலில் குரு படத்திற்கும் பின் அம்மாவின் படத்திற்கும் தீப ஆராதனை செய்து குங்குமம் போட்ட எலுமிச்சம் பழம் கொண்டு திருஷ்டி கழிக்கவும்.

13. மந்திரம் படிப்பவர்கள் அம்மா படம் கிழக்கு நோக்கியிருந்தால் வடக்கு நோக்கியும், படம் வடக்கு நோக்கி இருந்தால் கிழக்கு நோக்கியும் ஒற்றைப்பட எண்ணிக்கையில் ஒருவர் உடல் மற்றவர் மீது படாமல் இடைவெளி விட்டு அமர வேண்டும். மற்ற சக்திகளும் பொது மக்களும் சற்று தள்ளி அம்மாவின் படத்திற்கு நேராக இடைவெளி விட்டு இரு புறங்களில் அமர்ந்து வழிபாட்டில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யவும்.

14. மந்திரம் படிப்பவர்களுக்கு ஆராதனை செய்து குங்குமம் போட்ட எலுமிச்சம் பழத்தினால் திருஷ்டி கழிக்க வேண்டும். படிப்பவர்களுக்கு முன்னால் ஒரு அகல் விளக்கு ஏற்றி வைக்க வேண்டும்.

15. குரு பூஜை ஆரம்பிக்க வேண்டும். முறையே மூலமந்திரம், குரு தோத்திரம், குரு போற்றி ஆகியவை படிக்க வேண்டும். குரு போற்றி படிக்கும் போது மலரினால் குருவிற்கு அர்ச்சனை செய்ய வேண்டும். தொடர் கற்பூரம் எரிந்து கொண்டிருக்க வேண்டும்.அர்ச்சனை செய்யும் மலர், பீடம் இருந்தால் பீடத்தின் மேலோ அல்லது தரையின் மீது விழுமாறு அர்ச்சனை செய்ய வேண்டும். மந்திர முடிவில் ஓம் சக்தியே பங்காரு அடிகளே ஓம் என்று மூன்று முறை சொல்லும் போது தீப ஆராதனை செய்ய வேண்டும்.

16.குரு பூஜை முடிந்தவுடன் அம்மா படத்திற்கு முன்பாக இரண்டு வெற்றிலை இரண்டு மஞ்சள் கிழங்கு, புஸ்பம், இரண்டு வாழைப்பழம், உடைத்த கலசத் தேங்காய் ஆகியவற்றுடன் ஒரு எலுமிச்சம் பழம் இருந்தால் வைக்கவும். 2 ஊதுபக்தி ஏற்றி வைக்கவும்.  [குருவிற்கு பிரசாதம் வைத்த முறையாலேயே அம்மா படத்திற்கு முன் வெற்றிலை, பழம் ஆகியவை வைக்க வேண்டும்.

17. மன்றத்தில் ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள வெண்பொங்கல் பிரசாதத்தை அம்மாபடத்திற்கு முன் அதே பாத்திரத்தில் வைக்க வேண்டும்.

18. பின் அம்மா படத்திற்கு தீப ஆராதனை செய்தல் வேண்டும்.

19. வழிபாட்டு முறையே பின் வருமாறு செய்ய வேண்டும். 1. மூல மந்திரம் 2. வேண்டுதற்கூறு [ தொடர் கற்பூரம் அவசியம்] 3. தீப ஆராதனை 4. அன்றைய உபயதாரர் சங்கல்பம் 5. மூல மந்திரம் 6. 1008 மந்திரங்கள் [அன்றைய தினத்திற்குரியது]  7. 1008 மந்திரங்கள் படிக்கும் போது சக்திகளில் ஒருவர் ஒவ்வொரு மந்திரத்தின் கடைசியில் ஓம் என முடியும் போது மணி அடிக்க வேண்டும். 1008 மந்திரங்களுக்கு வசதியிருந்தால் மலர் அர்ச்சனை செய்யலாம். தொடர் கற்பூரம் அவசியம் இல்லை.

999 மந்திரங்கள் வரும் போது கற்பூரம் ஏற்றி ஆராதனை செய்ய தயாராக இருக்க வேண்டும். 1001 முதல் 1008 மந்திரம் வரை தொடர்ந்து மணியடிக்க வேண்டும். 1008 மந்திரங்கள் முடிந்த உடன் தீபாராதனை செய்ய வேண்டும். பின் இடைவெளி விடாமல் 108 மந்திரங்கள் படிக்கும் பொழுது தொடர் கற்பூரம் எரிந்து கொண்டிருக்க வேண்டும்.

இந்த 108 போற்றி திருவுருவிற்கு அம்மாவிற்குக் குங்கும அர்ச்சனை அன்றைய உபயதாரரைக் கொண்டு செய்யவும். ஆகையால் 1008 மந்திரங்கள் முடிந்தவுடன் 108 போற்றி திருவுருவிற்கு அர்ச்சனை செய்ய வேண்டிய அன்றைய உபயதாரர் 1008 மந்திரங்கள் முடியும் போது தயாராக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். 108 மந்திர முடிவில் தீப ஆராதனை செய்யவும்.

20. அடுத்து கவசம் படிக்க வேண்டும்.  9. பின் மந்திரக்கூறு சக்தி வழிபாடு,  கூட்டு வழிபாடாகப் படிக்க வேண்டும். அதாவது மந்திரங்கள் படிப்பவர்களில் ஒருவர் ஒவ்வொரு மந்திர வரிகளைப் படித்தவுடன் அங்குள்ள அனைவரும் திரும்ப அம் மந்திரத்தைச் சொல்ல வேண்டும். மந்திரக் கூறு படிக்கும் போது ஆரம்பத்தில் ஓம் சக்தி, ஓம் சக்தி, ஓம் சக்தி, ஓம் என்ற மந்திரத்தை இரண்டு முறையும் முடிவில் [ஒவ்வொரு மூன்று முறையும் படிக்க வேண்டும்] 10. தியானம். 11. மன்றச் செய்தி இருப்பின் அறிவித்தல் 12. சரணம் முறைப்படியாகக் கூட்டு வழிபாடாகப் படிக்க வேண்டும்.

21. மந்திரம் படித்தவர்கள் பாத பூஜை தெரிவித்த முறைப்படி செய்து கொள்ளுங்கள். அம்மாவிற்கு தீப ஆராதனை செய்தல், பின் மன்ற வாசலில் தீப ஆராதனை செய்தல்.

22.முதலில் உபயதாரருக்கு பிரசாதம் வழங்குதல், பின் மற்றவர்களுக்கு பிரசாதம் வழங்குதல்.

முக்கிய குறிப்பு

வழிபாடு ஆரம்பிப்பதற்கு முன்பாக பக்தர்கள் கொண்டு வரும் புஸ்பம், பிரசாதம் ஆகியவற்றை அம்மாவிற்குப் படைத்து வழிபாடு தொடங்கலாம். வழிபாடு தொடங்கிய பின் பக்தர்கள் சரணம் முடிந்து ஆராதனை செய்து உபயதாரருக்குப் பிரசாதம் கொடுத்த பின் அம்மாவிற்குப் படைத்து தீபாராதனை செய்து கொடுக்கலாம். விரும்புபவர்களுக்கு சங்கல்பம் செய்து [108 போற்றி திருவுரு மந்திரங்கள்] கொடுக்கலாம்.

23. பிரசாதம் பின்வரும் முறைப்படி கொடுக்க வேண்டும்.

தீப ஆராதனை விபூதி, வேப்பிலை, தீர்த்தம், மஞ்சள், அல்லது சந்தனம் [இருந்தால்] குங்குமம், புஸ்பம், வெண் பொங்கல் , பின் மற்ற பிரசாதங்கள்.

24. மன்றத்தை விட்டு கடைசியில் செல்பவர்கள் வாழ்த்து சொல்லி திரை இருந்தால் போட்டு விட வேண்டும்.

25. வாழ்த்து படித்த பின் அன்றைய தினம் மறுபடியும் அம்மாவிற்கு தீப ஆராதனை செய்யவோ திரையை விலக்கவோ கூடாது.

26. மன்றத்தில் பிரதிதினம் காலை, அல்லது மாலை குறைந்தது ஒரு மணி நேரமாவது விளக்கேற்றி மன்றத்தைப் பொதுமக்கள் தரிசனத்திற்கு அவசியம் திறந்து வைக்க வேண்டும்.

                                                                ஓம் சக்தி

நன்றி சக்தி ஒளி 1989 நவம்பர் பக்கம் 51-55.

 

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here