மேல்மருவத்தூரில் நடைபெற்ற ஆங்கில புத்தாண்டு விழாவில், ரூ1.5 கோடி மதி்பபிலான நலத்திட்ட உதவிகளை பங்காரு அடிகளார் வழங்கினார்
மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் 2015ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு விழா, கலசவிளக்கு வேள்வி பூஜைகள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் ரூ1.5 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவினை முன்னிட்டு சித்தர் பீடம் மலர்களாலும், ஒளிவிளக்குகளாலும் மிக சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில் கருவரையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன.
அன்று மாலை 4 மணியளவில் நடைபெற்ற கலசவிளக்கு வேள்வியை ஆதிபராசக்தி ஆன்மீக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து சித்தர்பீட ஓம் சக்தி மேடை அருகே நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை ஆன்மிக இயக்க துணை தலைவர் கோ.ப. செந்தில்குமார் தொடங்கி வைத்தார். இரவு 11 மணி அளவில் சிறப்பு வழிபாடு துவங்கியது. நேற்று காலை 9 மணியளவில் சித்தர் பீடத்திற்கு வருகை தந்த ஆன்மிக குரு பங்காரு அடிகளாருக்கு பக்தர்கள் பாதபூஜை செய்து வரவேற்பளித்தனர். அங்குள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கர்நாடக மாநில செவ்வாடை பக்தர்கள் நடத்திய நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் கர்நாடக மாநில போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, மேலவை உறுப்பினர் மோத்தம்மா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
]]>