மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா நேற்று துவஙகியது. கலசவிளக்கு வேள்வி பூஜை, கஞ்சிவார்த்தல் மற்றும் பால் அபிஷேகம் நிகழ்ச்சிகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்

ஆடிப்பூர பெருவிழாவை முன்னிட்டு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் திங்கள் கிழமை அதிகாலை 3 மணிக்கு மங்கள இசையுடன் நிகழ்ச்சிகள் துவங்கியது. பின்னர் கருவறையில் உள்ள அன்னை ஆதிபராசக்திக்கும், சுயம்புவிற்கும் அபிலேகம் அலங்காரத்துடன் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு சித்தர்பீடம் வருகை தந்த ஆன்மீககுரு பங்காரு அடிகளாருக்கு மேள, தாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. மாலை 4 மணி முதல் அம்மனுக்கு வேண்டுதலை நிறைவேற்ற தீச்சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்;மாலை 5 மணிக்கு கருவறை முன்பாகவும், புற்று மண்டபம் முன்பாகவும் அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில் கலசவிளக்கு வேள்வி பூஜையை ஆன்மீக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் துவக்கி வைத்தார். இயக்க துணைத்தலைவர் ஸ்ரீதேவிரமேஷ் முன்னிலை வகித்தார். செவ்வாய்க்கிழமை காலை 7 மணி அளவில் மேல்மருவத்தூர் மாரியம்மன் கோவில் வீதியில் உள்ள ஆன்மீக குரு பங்காரு அடிகளார் வீட்டில் இருந்து தாய்வீட்டு கஞ்சியை லட்சுமி பங்காரு அடிகளார் சிததர்பீடத்துக்கு ஊர்வலமாக கொண்டு வந்தார். அங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வரவேற்பு அளித்தனர்.

பின்னர் பக்தர்கள் கொண்டு வந்த கஞ்சி ஒன்று சேர்க்கப்பட்டு அனைத்து பக்தர்களுக்கும் கஞ்சி வார்க்கும் நிகழ்ச்சியை கோ.காளிதாஸ் துவக்கி வைத்தார். இதையடுத்து ஆரப்பூர நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வான சுயம்புவிற்கு பால்அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சியை ஆன்மீக இயக்க துணைத்தலைவர் கோ.ப.செந்தில்குமார் முன்னிலையில் ஆன்மீக குரு பங்காரு அடிகளார் துவக்கி வைத்தார். விழாவிற்கு வந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியை ஸ்ரீதேவி ரமேஷ் துவக்கி வைத்தார். பால் அபிஷேக நிகழ்ச்சி நாளை மாலை வரை நடைபெறும் என்று சித்தர் பீட நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஆடிப்பூர விழாவை முன்னிட்டு உலகம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மேல்மருவத்தூரில் குவிந்தனர். சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் நீண்ட வரிசையில் நின்று அன்னை ஆதிபராசக்தியை தரிசனம் செய்தனர். இன்று துவங்கிய பால்அபிஷேகம் நிகழ்ச்சி நாளை மாலை வரை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஆதிபராசக்தி ஆன்மீக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையில், கோவை மாவட்ட பிரசார குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி, திருப்பூர் மாவட்ட பிரசாரக்குழு தலைவர் சரஸ்வதி தலைமையில் செவ்வாடை பக்தர்கள் செய்திருந்தனர்.

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here