"என் அன்னை!”

என்னைப் பத்துமாதம் சுமந்து ஈன்றெடுத்த என் தாய் என்றோ என்னை விட்டுப் பிரிந்துவிட்டாள். என் குறைகளைக் கேட்டு ஆறுதல் கூற யாரும் இல்லையே என ஏங்கிய என்னை, மேல்மருவத்தூர் தாய் அன்போது ஏற்றுக்கொண்டு விட்டாள்!

என் குறைகளைக் கேட்பதோடு நில்லாமல், நான் மேலும் துயருறா வண்ணம் உடனுக்குடன் என் துயரங்களையெல்லாம் நீக்கி வருகிறாள் அன்போடு பேசுகிறாள். உறுதியோடு ஆறுதல் மொழி கூறுகிறாள். என் தேவைகளையெல்லாம் அவ்வப்போது பூர்த்தி செய்வதாகவும் அருள்வாக்கிற்காகக் காத்து நிற்க வேண்டாமெனவும் அன்புக் கட்டளையிட்டு விட்டான்!

ஒரு சமயம் அருள்வாக்கு கேட்டபோது “மகனே! என்னை நாடி வந்து விட்டாய். இனி வேறு இடங்களுக்குச் சென்று உன் நேரத்தையும் பொருளையும் செலவிடாதே. நான் உன்கூடவே இருப்பேன். உன் உடல் இந்த உலகை விட்டுப் பிரிந்த பின்பும் உன் குடும்பத்தைக் காப்பேன்” என உறுதி மொழி கொடுத்தான். ஆனால் மடமை காரணமாக எங்கள் கடமை முடிய வேண்டுமே என்ற ஆதங்கத்தில், எங்கள் மகளின் திருமண விஷயமாக ஓரிருமுறை மறுபடியும் அருள்வாக்குக் கேட்டேன். நான் கொண்டு சென்ற பல ஜாதகங்களையும் நிராகரித்து விட்டு, “உன் மகளுக்கு மேல் படிப்பு கொடுக்கப் போகிறேன். பையன் மூன்றாவது வீட்டில் இருக்கிறான். இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடங்களில் தேடுகிறாய்” என்று கூறினாள். அதன்படி மூன்றாவது வீட்டில் இருக்கும் பையனையே தேர்ந்து எடுத்தோம். திருமணம் கூடியது. மேல் படிப்பும் கிட்டியது. மேல் படிப்பிற்காகத் தேர்வு எழுதியவர்களில் எல்லாம் முதல் மதிப்பு எண்பெற்று, தேர்வு கிடைத்து இருக்கிறது.

திருமண அழைப்பிதழ் அச்சாகும் சமயம் – ஓர் இரவு பாதி உறக்கமும் பாதி விழிப்புமாக இருந்த நிலையில் ஒரு திருமண அழைப்பிதழும், மேல் உறையும் கண்முன் தோன்றியது. எந்தமாதிரி அழைப்பிதழ் அச்சிட வேண்டுமென “என் அன்னை” கூறுகிறாள் என்பதை உணர்ந்த நான் அதன்படியே அன்னையின் திருவுருவப் படத்தோடு அழைப்பிதழ் அச்சாக ஏற்பாடு செய்யும்படி என் கணவரிடம் கூறினேன். முதல் அழைப்பிதழ் அன்னைக்குக் கொடுத்த பின்னரே மற்றவர்களுக்கு என முடிவு செய்து, என் கணவர், என் மகள், நான் மூவரும் மேல் மருவத்தூர் ஆலயத்திற்குச் சென்று பகல் 2 1/2 மணிவரை (காலையிலிருந்து ஒன்றும் சாப்பிடாமல்) காத்து இருந்தோம். பணம் கட்டியவர்கள் பலர் காத்திருக்க எங்களை உள்ளே வரும்படி அன்னை அழைத்தாள்.

உவகையுடன் உள்ளே ஓடி அழைப்பு இதழை அன்னையின் காலடியில் வைத்து, சிரம் பாதங்களில் பட வணங்கி, “அம்மா! உங்கள் சொல்லை நிறைவேற்றி விட்டீர்கள்” என நான் கூற, மகனே! இப்பொழுது திருப்தி தானே? திருமணம் நல்லபடியாக நடக்கும், ஆனால் ஆன்மிக மாநாட்டிற்கு “உன்னால் முடிந்ததைச் செய்” என்றார்கள். கண்டிப்பாகச் செய்கிறேன் என்றுகூறி, திருமணத்திற்கு உங்கள் பாலகனை அழைத்து இருக்கிறோம். அவர் மூலமாக நீங்கள் நேரில் வந்து மணமக்களை ஆசீர்வதிக்க வேண்டும்” என வேண்டினேன். “மகனே! நான் பார்த்து ஏற்பாடு செய்த திருமணம், நான் கண்டிப்பாக வருவேன். நீ உணருவாய், இனி அருள் வாக்கிற்காக நீ காத்து நிற்க வேண்டாம். உனக்கு வேண்டியவைகளை அவ்வப்பொழுது நானே நிறைவேற்றி வைப்பேன். என்னை நினைத்துக் கொண்டாலே போதும்” என்கிறார்கள்.

இந்த அன்பான – ஆணித்தரமான உறுதியான உள்ளன்போடு கூடிய வார்த்தைகளை என் அன்னையைத் தவிர வேறுயாரால் கூற முடியும்?

திருமண நாள் குறித்த நேரத்தில் அன்னையின் அருட்செல்வன் தாமாகவே திருமண மண்டபத்திற்கு வந்து விட்டார். அன்னையின் அருளால் முடிந்த திருமணமாதலால் மணப் பெண் உள்பட நாங்கள் எல்லோரும் சிவப்புப் புடவைகளே உடுத்தி இருந்தோம். அன்னையின் அன்புக்கு பாத்திரமான ஆலயத்தைச் சேர்ந்த பலரும் கூடி இருந்த காட்சி. இந்த மண்ணுலகில் இருப்பதாகவே எனக்குத் தோன்றவில்லை. திருமாங்கல்யத்தைத் தவத்திரு அடிகளார் கையில் எடுத்தவுடன் அன்னை வந்து விட்டான். உடனே என்வேண்டுகோளுக்கு இணங்க, அன்னையின் அன்பர் ஒருவர் “ஓம் சக்தி” என்று கூற “பராசக்தி” என்ற குரல் விண்ணதிர்ந்தது. கோஷம் தொடர, பூவும் அட்சதையுமாக மாரி பொழிய, அன்னையின் அருளோடு திருமாங்கல்ய தாரணம் இனிதே முடிந்தது.

அன்னையே மணமக்களுக்கு ஆசி கூறினாள். சரித்திரத்திலேயே நடக்காத நிகழ்ச்சியை அன்னை, என் பொருட்டு என் இல்லத்தில் நடத்தி விட்டான். இதை நினைக்கும் போது, நான் என் அன்னையின் அன்புக்கு எவ்வளவு பாத்திரமாகி விட்டேன் என்ற உவகை மேலிடுகிறது.

முதல் முறை சக்தி மாலை அணிந்து இருமுடி ஏற்றபோது மகளின் திருமணம் முடிய வேண்டுமென வேண்டினேன்.

இரண்டாம் முறை மாலை அணிந்த போது நிச்சயிக்கப்பட்ட திருமணம் நல்லபடியாக முடிய வேண்டுமென வேண்டினேன்.

மூன்றாம் முறை – திருமணம் மிக மிக நல்லபடியாக முடிந்ததால் மணமக்கள் இருவரும், என் கணவரும் நானுமாக (நால்வரும்) மாலை அணிந்து, இருமுடி ஏந்தி உருள்வலம் வந்து நன்றியைத் தொpவித்தோம்.

ஏழை மகனிடம் அன்புகொண்ட “என் அன்னை” இந்த மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி அன்னையயன்றி வேறு யாராக இருக்க முடியும்? இனி என் பேச்சு, செயல், மூச்சு எல்லாம். “ஓம் சக்தி – பராசக்தியே”

ஓம் சக்தி! நன்றி: சக்தி ஒளி விளக்கு -1 சுடர் 8 (1982) பக்கம்: 36-38

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here