அடிகளாரின் செயலும் அன்னை உபதேசமும்

0
2782

 5-6-82ம் தேதி ஆனி மாதம் 1ம் தேதி இன்று அதிகாலை சுமார், 5.00 மணிமுதற் கொண்டே உடுமலைப்பேட்டையில் ஆனி மாதம் பிறந்ததோ மழை பிறக்ததோ என்ற வண்ணம் மழை தொடங்கிவிட்டது. எங்களுடைய ஊருக்கு இது புதியதன்று இதைவிட பெரும மழையையும், கடும் குளிரையும் காற்றையும் சந்தித்தவர்கள் இதனாலன்றோ எங்களூர் ஏழைகளின் ஊட்டி (Poor Mans Ooty) என ஆங்கிலேயர்களால் வர்ணிக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு இம்மழையும், காற்றும் புதிதல்ல.

ஆனால் இன்று திடீரென துவங்கிய மழையும், காற்றையும், குளிரையும் பொருட்படுத்தாமல் ஆடவரும் பண்டிரும் காலை 8.00 மணி முதற் கொண்டே ஸ்ரீ ஆதிபராசக்தி அம்மன் தன் மைந்தர் ஸ்ரீ பங்காரு அடிகளார் அவர்கள் மூலம் இம்மண் மீது அடி எடுத்து வைக்கும் செய்தி கேட்டு கோவிலில் குழுவி விட்டனர்.

திடீரென நண்பகல் 1.00 மணியளவில் மழை நின்றது. குளிர் நின்றது வெயில் அடிக்க ஆரம்பித்ததற்குக் காரணம் என்னவென்று ஒருவருக்கொருவர் கேட்கு முன்னேமே – ஆதி பராசக்தி தன் மைந்தன் மூலம் மண்ணை மிதித்தார் என்ற ஆரவாரமே கேட்டது. இதை எழுத்திலோ, சொல்லிலோ சொல்ல முடியாது. எல்லோருக்கும் மன அதிர்ச்சி அவ்வளவு தூரம் இருந்தது. அபூர்வ நிகழ்ச்சி, ஆடைபாதி மனிதன் பாதி என்ற பழமொழிக் கேற்ப ஸ்ரீ ஆதி பராசக்தி தன் மைந்தர் ஸ்ரீ பங்காரு அடிகளார் விழா மேடையேறியதும் அருள்பாலித்த காட்சி, எங்கள் எல்லோருக்குமே நாமனைவரும் பலிலே குருடர்களாகி விட்டோமே என்று, என்ற எண்ணம் எண்ணும் வகையில் ஸ்ரீ அடிகளார் அவர்கள் குளிருக்கும், பசிக்கும் அஞ்சிய வறுமைக் கோட்டுக்கு கீழ் இருக்கும் வயதான பெண்மணியை அழைத்து தமக்களிக்கப்பட்ட பொன்னாடையையும், ரோஜா மலர் மாலையையும் அணிவித்து உண்ண உணவும் அளித்த காட்சி தாய் தன் கடமையை தன் மைந்தர் ஸ்ரீ அடிகளார் மூலம் செய்து வருகிறார்கள் என்ற உண்மையை உணர்ந்தோம்.

ஓம் சக்தி!

நன்றி: சக்தி ஒளி
விளக்கு -1 சுடர் 7 (1982)
பக்கம்: 43

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here