பாகம் – 2

கண்முன் கடவுள் தோன்றுவது உண்டா?

கடவுளைக் கண்ணால் காண முடியுமா? அவரோடு பேச முடியுமா? நெடுங்காலமாகவே இந்தக் கேள்வி எழுந்ததுண்டு! அண்மைக் காலத்தில் வாழ்ந்த விவேகானந்தரும் இராமகிருஷ்ணரைப் பார்த்து இந்தக் கேள்வியைக் கேட்டவர்தான்! அப்படிக் கேட்ட விவேகானந்தருக்குக் கடவுட் காட்சியை ‘‘ஒரு தீட்சை” மூலமாகக் காட்டியருளினார் இராமகிருஷ்ணர். கள்ளமில்லாத உள்ளத்தோர்க்கே கடவுள் காட்சி கிடைக்கும் என்கின்றனர். கசிந்துருகி அழுகின்ற பக்தர்கட்கே கடவுள் காட்சி கிட்டும் என்கின்றனர். முற்பிறவியில் பக்தியின் தொடர்பினால் அடுத்த பிறவியில் கடவுள் காட்சி கிடைக்கும் என்கின்றனர். கடவுளைக் கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர் என்றும் சொல்கின்றனர். கடவுளுக்குத் தான் உருவம் இல்லையே! அவர் உருவத்தோடு வந்து காட்சி கொடுப்பது எங்ஙனம்? அண்ட சராசரங்களையும் காக்கின்ற அந்தப் பரம்பொருள் சைவர்கட்குச் சிவனாகத் தோன்றுவான்; வைணவர்கட்குத் திருமாலாகக் காட்சி அளிப்பான். தாயாக வழிபடுவர்கட்குத் தாய் உருவில் காட்சி கிடைக்கும் என்றெல்லாம் சொல்கின்றனர். ‘‘யாதொரு தெய்வங் கண்டீர் அத்தெய்வமாகி ஆங்கே மாதொரு பாகனார்தாம் வருவர்” – என்று எல்லா உருவிலும் தன்னை வெளிப்படுத்திக் காட்டிக்கொள்பவன் எங்கள் சிவபெருமானே என்று சைவ சித்தாந்தம் அடித்துப் பேசுகிறது! ஆழ்வார்கள் எங்கள் திருமாலே ‘‘ஆதிமூலம்” என்கின்றார்கள். தன்னுடைய இஸ்ரேல் நாட்டு மக்கள்! எகிப்து நாட்டு மக்களிடையே அடிமையாகச் சிக்குண்டு வாடிய வாட்டத்தை நீக்கக் கருதிய மோசசுக்கு சினாய் மலையில் கடவுள் ஒளியுருவில் காட்சி தந்ததாகவும், அவனோடு பேசியதாகவும் பைபிள் சொல்கின்றது. இறைவன் பெண்ணுருவில் தன் அண்ணியாரைப் போல உருவங் கொண்டு பாற்சோறு பரிமாறியதாக வள்ளலாரே கூறியிருக்கின்றார். நாயன்மார் பாடல்களிலும், ஆழ்வார் பாடல்களிலும் இறைவன் காட்சி கொடுத்தமைக்கான ஆதாரங்கள் உள்ளன. அகச் சான்றிகள் உள்ளன.

இவற்றையெல்லாம் படித்திருந்தும், கேட்டிருந்தும் – பல்வேறு விதமான முரண்பட்ட அச்செய்திகளால் நம்பிக்கை தோன்றவில்லை. ஏதோ ஒவ்வொரு சமயத்தைச் சார்ந்த அடியாரும், அந்தந்தச் சமயம் சொல்கின்ற வடிவமுடைய கடவுளையே கண்டதாகப் பாடி இருக்கின்றனர். ஆகவே, இவையெல்லாம் நம்பக்கூடியதாக இல்லை என்பதே அவன் முடிவு! அவனுடைய சிற்றறிவு பரம்பொருள் என்றால் இப்படி இருக்க வேண்டும்; அப்படி இருக்க வேண்டும் என்று தானே ஒரு விதியை வகுத்துக் கொண்டது. தெய்வம் நடத்துகின்ற அற்புதச் செயல்களைக் கண்டு வியப்படையலாம்; பக்தி இருந்தால் அந்த அனுபவத்தைக் கேட்டு இன்புறலாம்! அதை விட்டு விட்டு அதை விமர்சிக்கின்ற தகுதியோ, திறனோ, அறிவோ, பக்தியோ நமக்குக் கிடையாது என்று எண்ணி அமைதியாக இருந்து விடுவது மேல்; இந்த ‘‘ஞானம்” அவனுக்கு இன்றுதான் வந்ததே தவிர அந்த நாளில் வரவில்லை.

அம்மாவின் கோயிலுக்கு அடுத்த முறை வந்தபோது, முஸ்லிம் அன்பர் ஒருவரது அனுபவம் பற்றிக் கேள்விப் பட்டான். அந்த அன்பர் ஒருநாள் இரவு லாரியில் திண்டிவனம் நோக்கிச் சென்று கொண்டு இருக்கின்றார்; நல்ல நிலாக் கலாம்! மருவத்தூர் ஆலய எல்லையின் அருகே லாரி வரும்போது, அவர் கண்முன் அற்புதக் காட்சி ஒன்று தெரிகின்றது. சூலமும் வேலும் ஏந்தியவாறு நீண்ட நெடிய உருவில் வெள்ளை உடை அணிந்த கோலத்தில் அன்னையின் திருக்காட்சி தெரிகின்றது! வண்டியில் தன் பக்கத்தே அமர்ந்திருந்த அந்துமதத்தைச் சேர்ந்த ஒருவரைத் தட்டி அந்தக் காட்சியைக் காட்டுகின்றார்! இந்துமத அன்பர் தன் கண்ணுக்கு எதுவுமே தெரியவில்லையே என்று கூறுகின்றார்! என்ன இது! நம் கண்ணுக்குத் தெரிவது இவருக்கு ஏன் தெரியவில்லை என்று அந்த முஸ்லிம் அன்பருக்கு ஒரே வியப்பு! தன்னை வணங்கும் இந்து மதத் தானுக்குத் தன் உருவைக் காட்டாமல் நமக்கு மட்டும் இப்படி ஒரு தெய்வீகக் காட்சி தெரிகின்றதே என்ன? என்ற புதிர் அவருக்கு ஏற்பட்டது போலும்! ஆயினும் இந்த இடத்தில் – இந்த எல்லையில் – ஏதோ ஒரு மகிமை இருக்கின்றது என்று மட்டும் தனக்குள் நினைத்துக் கொண்டார். இது ஏதோ குறி சொல்கிற இடம் என்று பலரும் நினைப்பது போல் நினைத்த அவர் இதைப் பற்றிக் கேட்டுத்தான் பார்ப்போமே என்று அருள்வாக்குக் கேட்க வந்தாராம். அம்மா அவருக்குப் பின்வருமாறு கூறினாளாம்.

‘‘மகனே! நீ முற்பிறவியில் முருக பக்தனாக இருந்தவன் திருத்தணிக்கு நீ காவடி எடுத்துச் சென்றவன்; அவ்வாறு காவடி எடுத்துச் சென்ற போது பக்திப் பரவத்தோடு ஆடிய போதே உன் உயிர் பிரிந்தது, அவ்வாறு அன்று நீ கொண்டிருந்த பக்தியின் காரணமாகவே உனக்குக் காட்சி கொடுத்தேன்” – என்றாளாம்.

அம்மாவின் அருள் வாக்கினால் ஈர்க்கப்பட்டு ஓரளவு தெய்வ நம்பிக்கை வந்த போதும், இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு அவனால் நம்பவும் முடியவில்லை; நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. தன்னை வணங்குகின்ற இந்து மதத்தைச் சேர்ந்த அன்பன் ஒருவனை விட்டு விட்டுக் வேறு மதத்தில் பற்று கொண்ட அந்த அன்பருக்கு தெய்வகாட்சி கிடைப்பது எப்படி நியாயமாகும்? முருக பக்தனாக இருந்த அன்பரை முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த குடும்பத்தில் பிறக்க வைப்பானேன்? என்று அவன் சிற்றறிவு கேள்வி கேட்டுக் கொண்டது! பிறவி ரகசியங்களை எல்லாம் அறிந்தவன் இந்த அம்மா! இது தொpந்து நமக்கு ஆகப்போவது என்ன? என்று அப்போது அவன் நினைக்கவில்லை; அப்படியானால் முற்பிறவி – மறுபிறவி என்பதெல்லாம் உண்மைதான் போல் இருக்கின்றது என்று மட்டும் நினைக்கத் தொடங்கினான். ஆயினும் அந்த முஸ்லிம் அன்பர்க்குக் கிடைத்த அனுபவம் அம்மாவின் திருவாயாலேயே வெளிப்பட்டால் நம்பலாம் என்று மனத்துக்குள் அடக்கி வைத்துக் கொண்டான். ஆயினும் ஆன்மிக விஷயங்கள், சமய நூல்களிலும், தத்துவ நூல்களிலும், உள்ள முரண்பட்ட சில செய்திகளை எல்லாம் அம்மாவிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்; அவற்றையெல்லாம் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்னும் ஆர்வமும் ஆவலும் அவனுக்கு ஏற்பட்டன. ஆயினும் அவனுடைய சொந்தப் பிரச்சினைகள் அந்த ஆர்வத்தைப் பின்தள்ளி விட்டன. தொடக்க நாட்களில் அம்மாவிடம் எவ்வளவோ செய்திகளைக் கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கலாம்; மற்றவர்கட்கும் தெரிவித்திருக்கலாம். அன்றைய நாட்களில் அம்மா அவ்வளவு எளியவளாக இருந்தாள். அவள் விளையாட்டுப் பிள்ளைபோல அடிக்கடி சந்தேகம் கேட்பாள். அன்னை எளிமையாகச் சொல்வாள். இன்று இலட்சக் கணக்கான அன்பர்கள் அம்மாவின் அருள்வாக்குக்காக ஏங்கித் தவிக்கின்றார்கள்; அம்மா இன்று அவனுக்கு அரியவளாகிவிட்டாள். அம்மாவின் அருள்வாக்கு எளிமையாகக் கிடைத்த போதெல்லாம் அவள் அருமை பெருமை புரியவில்லை. அவள் அருமை பெருமை மெல்ல மெல்லப் புரிந்து கொண்டு வரும் வேளையில் அம்மாவின் அருள்வாக்கு அடிக்கடி கிடைக்கவில்லை.

ஆன்மிக விஷயங்கள் சிலவற்றை எல்லாம் கேட்டுத் தொpந்து கொண்டது அவள் ஆலயக் குழுவை வைத்துக் கொண்டு அருள்வாக்குச் சொன்ன அந்த நேரத்தில்தான்! அம்மாவே ஒருமுறை ஆலயக் குழுவினர் எதிhpல் வைத்துக் கொண்டு அவள் மானத்தை வாங்கினாள்.

‘‘ஏ மகனே! இரண்டு ரூபாய் செலுத்தி ஆன்மிகம் பற்றிய கேள்விகளைக் கேட்பதை விட்டு விட்டு உன் சொந்தப் பிரச்சினைகளைத் தானே கேட்கிறாய்? அதுவும் நான் ஆலயக் குழுவுக்கு அருள் வாக்குச் சொல்லும் இந்த நேரத்திற்குத் தானே கேட்கிறாய்? உண்மையிலேயே ஆன்மிகம் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற அக்கறை இருக்குமானால் உன் சொந்தப் பிரச்சினையை கேட்பாயா – என்றாள். ஆம்! அன்னை சொன்னது உண்மைதான்!

சொந்தப் பிரச்சினை ஊழ்வினை தடை:

அவன், தான் பணியாற்றும் துறையில் பதவி உயர்வு பெற வேண்டும் என்று எண்ணினாள்! பணம், பெண், பதவி, பட்டம், பேர், புகழ், வசதி, வாய்ப்பு இவை எல்லாவற்றிலும் அவனுக்கு மோகம் இருந்தது! பொருள்தான் சமுதாயத்தில் மதிப்பை அளிக்கிறது! இவற்றை எல்லாம் விரும்பாத மனிதன் எவன்? சிலரிடம் ஒன்று இரண்டு குறையலாம். அவ்வளவே! பணத்தில் நாட்டம் இல்லாதவன் பெண்ணிடம் பலவீனமாக இருக்கிறான்; பெண் மோகம் இல்லாதவன் பட்டம் பதவிக்காவது அஇலைகின்றான்; பணமும் பெண்ணும் வேண்டாவிட்டாலும் பேரும் புகழும் வேண்டும் என்றாவது அலைகிறான்! எல்லா மனிதர்களிடமும் இந்தப் பலவீனங்கள் புதைந்து கிடக்கின்றன! இவற்றையெல்லாம் எவ்வளவுக்கெவ்வளவு மறைத்துக்கொண்டு நடமாட முடிகின்றதோ அவ்வளவுக் கவ்வளவு அவரவர்கள் கெட்டுக்காரர்கள்! ஏதோ பிறந்தோம்! வாழ்ந்தாக வேண்டும்! அதிகம் கிடைத்தால் இன்னும் சற்று வசதியாக வாழலாமே! இம்மை வாழ்க்கைக்கு வேண்டியவற்றை அம்மாவிடம் கேட்பதில் தவறு என்ன இருக்கிறது?

‘‘பொன்னும் மெய்ப்பொருளும் தருவானைப் போகமும் திருவும் புணர்ப்பானைப் பிள்ளை என் பிழைகள் தவிர்ப்பானை” – என்றல்லவோ நாவுக்கரசரும் ஆண்டவன் பெருமையைச் சொல்கின்றார்!

ஆகவே, அம்மாவிடம் தான் பணியாற்றும் துறையில் பதவி உயர்வு கேட்டுப் பெற எண்ணினான் அந்தப் பதவி உயர்வுக்காக அவன் பல நாள் அலைந்து திரிந்தது உண்டு. பணமும், செல்வாக்கும் இருந்தால் போதும். உலகத்தில் எதனையும் சாதித்து விடலாம் என்ற நம்பிக்கையை அவனுக்கு நண்பர்கள் ஊட்டினார்கள். ஆனாலும் அவன் அலைச்சல் எல்லாம் வீணாயின! தகுந்தவர்களை எல்லாம் பார்த்துப் பார்த்துச் சலிப்படைந்தான், முயற்சிகள் பலன் தரவில்லை.

அம்மாவிடம் இது குறித்து ஒருநாள் கேட்டான், ‘‘மகனே! உனக்கு உத்தியோக மாற்றம் தருகிறேன்! பதவி உயர்வு தருகிறேன்! நான் தரத் தயார் மகனே! ஆனால் நீ அதற்கான முயற்சியைச் செய்ய வேண்டும் அல்லவா? நீ தினந்தோறும் படுக்கைக்குச் செல்லும் போது ஒன்பது முறை ஓம்சத்தி! என்று எழுதி விட்டுப் பிறகு உறங்கச் செல்!” என்றாள்.

‘‘முயற்சி” – என்பதற்கு அவன் கொண்ட பொருள்; அன்னையின் பொருள்;

பணம்; செல்வாக்கு இவற்றைக் கொண்டே எதையும் சாதித்துக் கொள்ளலாம் என்று நினைத்தும் முயன்று பார்த்தும் பதவி உயர்வு கிடைக்காத நிலையில் ஒன்பது முறை ஓம் சத்தி என்று எழுதிவிட்டால் மட்டும் எப்படி கிடைத்து விடும்? அவன் படித்த எம்.ஏ.படிப்பு இப்படித்தான் குறுக்குக் கேள்வி கேட்டுக் கொண்டதே தவிர அம்மா எதைச் சொல்கிறாளோ அதனை அப்படியே கடைப்பிடித்து நடப்போம் என்ற புத்தி வரவில்லை, அம்மா சொன்ன முயற்சி ‘‘ஒன்பது முறை ஓம் சத்தி எழுது” என்பது! அவனுடைய அகராதியில் முயற்சி என்பது பணத்தை வைத்துக் கொண்டு காரியத்தை முடிப்பது; செல்வாக்குள்ள ஆட்களைத் தேடிச் சிபாரிசுக்கு அலைவது!

அம்மா கேட்ட கேள்வி:

இறுதியில் அவன் முயற்சி எல்லாம் தோற்றன. ஆனாலும் அம்மா சொன்னவாறு ஒன்பது முறை ஓம்சத்தி என்று எழுதவில்லை, தன் முயற்சிகள் எல்லாம் தோற்றுப் போன நிலையில், அம்மாவிடம் முறையிட்டான். ‘‘நான் சொன்னதை நம்பி நீ முயற்சி செய்தாயே மகனே?” என்று கேட்டாள். எந்த முயற்சியும் பலிக்கவில்லை என்றான். ‘‘ஒன்பது முறை ஓம் சத்தி என்று எழுதச் சொன்னேனே செய்தாயா?” என்று கேட்டாள். ஒன்பது முறை எழுதுவதால் மட்டும் எப்படி நடக்கும்? என்று கேட்கத் தைரியம் இல்லை, ‘‘சொன்னபடி செய்; உத்தரவு” என்று அனுப்பிவிட்டான்.

மீண்டும் தோல்வி:

அம்மா சொன்னபடி செய்துதான் பார்ப்போமே என்று உறங்கச் செல்வதற்கு முன்பாக ஒன்பது முறை ஓம் சத்தி என்று எழுதிவிட்டுச் செல்வான் நாட்கள் ஆயின் காரியம் கைகூடவில்லை. அவனுக்கு அவசரம்! அம்மா சொல்லிவிட்டால் அடுத்த நாளே நடந்தாக வேண்டுமே! மீண்டும் அம்மாவிடம் வந்து முறையிட்டான்; ‘‘பொறு மகனே? உன் ஊழ்வினை தடுக்கிறது” என்று சொன்னாள். அது எப்படி? அம்மா கொடுக்க நினைப்பதை ஊழ்வினை எப்படி தடுக்க முடியும்? தெய்வம் பெரிதா? ஊழ்வினை பெரிதா? அண்ட சராசரம் எல்லாம் படைத்த பராசக்திக்கு, ஒரு சின்ன பதவி உயர்வைத் தருவதற்குக் கூட ஊழ்வினை தடையாக இருக்கிறதாமே? இது என்ன புதிராக இருக்கிறதே! என்று அவன் சிற்றறிவு அப்போது குழம்பியதுண்டு! இதுபற்றி விளக்கமாகக் கேட்க முயன்ற போதெல்லாம் அம்மாவிடம் பயம் வந்து கேட்பதற்கு வாய் வராது! ஆயினும், அம்மா சொன்ன கட்டளைப்படி ஒன்பது முறை ஓம் சத்தி எழுதி வந்தான். அரைகுறை நம்பிக்கையோடுதான் அதைச் செய்தான். ஆனாலும் அம்மா அவனுக்குப் புத்தி புகட்டிக் கருணை காட்டினாள்.

ஒருநாள், ‘‘மகனே! உனக்கு உத்தியோக மாற்றம் ஏற்பாடு செய்து இருக்கிறேன்” என்நாள். சில நாள் கழித்து அவன் பணி உயர்வு பெறுவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆணை வந்தது. அவன் வாழ்க்கையில் நினைத்த அந்தப் பெரிய குறிக்கோளும் நிறைவேறும் வாய்ப்பு வந்தது. எல்லோரும் துன்பம் வந்த காலத்தில் தெய்வத்திடம் பக்தி செலுத்துவார்கள். இன்பம் வந்தால் தெய்வத்தை மறப்பார்கள். அவனுக்கோ இன்பம் வந்தால் ஆகா! அம்மாவின் கருணையே கருணை என்று மனம் வாழ்த்தும்! துன்பம் வந்தால் அம்மாவை நிந்திக்கும்! சிறு துன்பம் வந்தால்கூடப் பொறுத்துக் கொள்ள முடியாத பலவீனம் அவனுக்கு! அம்மாவை கும்பிடுகின்ற அந்த ஒரு காரணத்தாலேயே அவனுக்கு எந்தத் துன்பமும் வரக்கூடாது என்றால் எப்படி? இதுபற்றி அம்மாவிடமே ஒருமுறை கேட்டான்.

‘‘ஏன் தாயே! நீயோ பெரிய சக்தி. அடிக்கடி இந்த மண்ணை மிதித்து விட்டுச்செல் என்கின்றாய்! உன் கோயிலில் இருக்கும்போது மட்டும் உலகமே கவலையில்லாதது போலவும், மற்றவை எல்லாம் துச்சமாகவும்படுகிறது. கோயில் எல்லையை நீங்கிவிட்டால் மற்ற கவலைகள் எல்லாம் சூழ்ந்து கொள்கின்றனவே” உன் நிழலில்தானே நான் ஒதுங்கியிருக்கிறேன்! என் துன்பம் வருகிறது? என்று கேட்டாள்.

அம்மா சொன்னாள், ‘‘மகனே! வெயிலில் அலைந்துவிட்டு மரத்தின் நிழலில் ஒதுங்கினாலும் புழுக்கம் உண்டு அல்லவா? ஆர அமர ஓய்வு எடுத்த பிறகுதானே புழுக்கம் போகும்! இன்பம், துன்பம், பகல் – இரவு; வெயில் – நிழல்; ஒளி – இருள் என்று இந்தப் பிரபஞ்சத்தையே இப்படித்தானேடா படைத்திருக்கிறேன் எல்லா ஆன்மாக்களையும் ஈர்க்கின்ற சக்தியாக நான் இருப்பதால் இந்த எல்லைக்குள் வரும் போது மற்றவற்றையெல்லாம் மறக்க வைக்கிறேன் ஆலய எல்லையைத் தாண்டும் போது உன்னை உன் போக்கில் விடுகிறேன்” என்றாள். அவன் அறிவுக்குக் கிடைத்த தெளிவு சிறிதே! அறிவுடையார் அம்மாவின் மேற்குறித்த அருள்வாக்கின் ஆழமான பொருள்களை உய்த்துணர்ந்து கொள்க!

வலியக் கேட்டதன் விளைவு: புரிந்துகொண்ட பாடம்:

அம்மா சொன்னபடியே பதவி உயர்வும் கொடுத்தாள்; அதனை மீண்டும் பறிக்கவும் செய்தாள்; மீண்டும் கவலையோடு வந்து முறையிட்ட போது மீண்டும் பணி உயர்வில் அமர்த்தினாள் அவையெல்லாம் எழுத புகுந்தால் சுய புராணமாகப் போய்விடும். ஆனால் ஒன்றை மட்டும் புரிந்து கொண்டாள். அவன் தெய்வத்தை நிந்தித்துப் பேசிய பேச்சுகளினால் துன்பத்தை அனுபவிக்க வேண்டும்; தாயிடமம் வந்து அடைக்கலமானதால் அவன் காப்பாற்றப்படவும் வேண்டும்; அடம்பிடித்து வலியச் சென்று அம்மாவை இது கொடு என்று கேட்கக் கூடாது. நமக்கு இது நல்லது என்று நம் அறிவுக்குப் படுவது அம்மாவின் பார்வைக்குத் தீதாகப் படுவதும் உண்டு. ஆகவே அவனாக நமக்கு நல்லது இது என்று தேர்ந்து பார்த்துச் செய்வான். இனி தாமாக எதுவும் கேட்டுவலிய வாங்கக் கூடாது என்று புரிந்து கொண்டான். ஆனாலும், ஒரு சிறிய பதவி உயர்வு தருவதற்குக்கூட ‘‘ஊழ்வினை தடையாக இருக்கிறது” என்று சொன்னாளே! ஊழ்வினை பற்றி அறிஞர் உலகம் பலவாறு விளக்கம் சொல்லி மருள வைக்கின்றதே அதுபற்றி விளக்கம் கேட்டுத் தெளிவு பெற வேண்டும் என்று எண்ணினான். அம்மாவிடம் அது பற்றிக் கேட்கும் வாய்ப்பும் ஒருமுறை வந்தது.

தொடரும்…

ஓம் சக்தி!

நன்றி: சக்தி ஒளி விளக்கு -1 சுடர் 5 (1982) பக்கம்: 27-32

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here