14-09-82  செவ்வாய்க் கிழமையன்று காலை செங்கம் வட்டத்தில் உள்ள புதூர் என்னும் ஊரில் எழுந்தருளிய அருள்மிகு
மாரியம்மன் கோயிலுக்கு நானும், என் மனைவியும் குழந்தையும் சென்றிருந்தோம். புதூர் மாரியம்மன் கோயில் மிகவும் புகழ்வாய்ந்த பழமை வாய்ந்த திருக்கோயிலாகும்.  ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் ஜந்து செவ்வாய்க்கிழமைகளிலும் மாரியம்மன் திருவீதி உலாக்காட்சியும் திருவிழாக்களும் இன்றும் சிறப்பான முறையில் நடைபெறுகின்றன.

 
நாங்கள் புதூர் மாரியம்மனுக்குப் பொங்கல் வைத்து, வழிபாடுகள் செய்து அம்மனை வணங்கிவிட்டு வீடு திரும்புகையில் என் மனைவியின் இரு கண்களிலும் நீர் வடிந்தது. இரு கண்களிலும் வெள்ளையான அழுக்குப் படிந்தவாறு வந்தது. இதை பார்த்து என் மனைவிக்குப் கண்நோய் வருமா என அஞ்சி அம்மனை வேண்டிக் கொண்டு கோயிலில் இருந்து புறப்பட்டு வந்தோம். வண்டியை விட்டு இறங்கிக் கிராமம் வருவதற்குள் என் மனைவியின் இரண்டு கண்களும் சிவப்பு நிற்மாக மாறிக் கண்களில் இரு இமைகளிலும் வெண்ணிற அழுக்கும் படிந்து கண்ணையே மூடிக் கொண்டது. வீட்டை அடைந்ததும் இது கண்நோய் என அறிந்ததும் அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரிடம் காட்டி மருந்தும் பெற்றுச் சிகிச்சை அளித்தோம். அப்படியும் சீராகவில்லை. நாளுக்கு நாள் கண்வலி அதிகரித்ததே தவிரக் குறைந்த பாடில்லை. நான் மனம் வருந்தி ஒருவேளை இது தெய்வக் குற்றமாக ஏதேனும் இருக்குமோ என்று எண்ணி மேல்மருவத்தூர் அன்னையை நாடி வந்தால் நிவர்த்தியாகலாமோ என்றெண்ணி மேல்மருவத்தூர் வந்தேன்.
 
அன்று செவ்வாய்க்கிழமை அன்னையின் வேப்பிலையின் மந்திரிப்பு நடந்தது. நான், மனைவி, குழந்தை மூவரும் மந்திரிப்பு பெற்றோம். அன்று கோயிலிலேயே தங்கினோம்.அப்போது ஆலயத்தில் நவராத்திரி விழா நடைபெற்றுக் கொண்டு வந்தது. தினமும் காலையில் லட்சார்ச்சனை நடைபெற்றுக்
கொண்டு வந்தது.
 
நவராத்திரிப் பெருவிழாவில் அன்னையின் ஆலயத்தில்- கருவறையில் ஓர் அகண்ட விளக்கு ஏற்றி வைத்திருப்பதைத் தெரிந்து கொண்டு வெளியில் இருந்த கடையில் எண்ணெய் சிறிது வாங்கிக் கொண்டு வந்து அகண்ட விளக்கில் எண்ணெய் ஊற்றி ‘ஓம் சக்தி ‘ என்று மூன்று முறை சொல்லி, மூன்று முறை அகண்ட விளக்கினை எங்கள் கைகளால் கும்பிட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டு வெளியில் வந்தோம். என்ன வியம்பு! ஆலயத்திலேயே என் மனைவியின் கண்வலி கண்ணிலிருந்த சிவப்பு நிறம்- வெளியே தள்ளிய வெள்ளையான அழுக்குகள் எல்லாம் நீங்கி விட்டன! கண் பார்வை சரியாயிற்று! பின்னர் மகிழ்ச்சியோடு அன்னைக்கு அர்ச்சனை செய்துவிட்டு திருப்தியுடன் வீடு திரும்பினோம்! கண் கொடுத்த தெய்வமான ஆதிபராசக்தியை நாங்கள் என்றும் மறக்க மாட்டோம்.
 
                                                           ஓம் சக்தி
 
நன்றி
சக்தி ஒளி ஏப்ரல் 1983
பக்கம் 27-28.
 
 

2 COMMENTS

  1. ஓம் சக்தி
    குருவடி சரணம் திருவடி சரணம்
    ஓம் சக்தி நான் இன்றுதான் இந்த site கண்டேன். மிக நன்றாக இருக்கிறது.இந்த site உருவாக்கிய உங்களுக்கும் . உருவாக்க அருள் வழங்கிய அம்மா விற்கும் மிக்க நன்றி . ஓம்சக்தி
    ஓம்சக்தி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here