(அம்மா)
அல்லும் பகலும் உன்னை வணங்குகின்றோம் – நாங்கள் ஆயரத் தெட்டுப் பெயர் போற்றுகின்றோம்! கண்ணிலும், கருத்திலும் உனைக்காணுகின்றோம் – எங்கள் காலத்தில் மாறுதல் வேண்டுகின்றோம்! உள்ளம் திறந்து சொல்லுகின்றோம் – பராசத்தி! உன்னருள் எமக்குத் தந்திடம்மா!(அம்மா)
குற்றங்கள் ஆயிரம் புரிந்திருப்போம் – வாழ்வில் குறைகள் பலவும் செய்திருப்போம் எத்தனை தவறுகள் செய்தாலும் – தாயே! அத்தனையும் மன்னித்து ஆள்வாயம்மா! கற்றவளே காலத்தை வென்றவளே! பராசத்தி! கடைக் கண்ணால் எம்மையும் பார்த்திடம்மா! (அம்மா) காலடிப் பாங்கினில் கலையைக் கண்டோம் – நின் கைவிரல் அசைவினில் கனியைக் கண்டோம்! கண்ணொளிப் பார்வையில் கருணை கண்டோம்- நாவில் கனிந்திடும் சொற்களில் இனிமை கண்டோம்! எத்தனை கோடித்தவம் செய்து வந்தோம் – உன்னை இத்தரை மீதினில் காண வந்தோம்!(அம்மா)
‘‘கோட்டையில்” வாழ்ந்திட எண்ணவில்லை – நாங்கள் ‘‘நாட்டினை” யானவும் நினைக்கவில்லை! ‘‘வீட்டை” யடையவும் வழி வேண்டுகின்றோம்! – அந்த வழியினில் ஒளிவீசக் கோருகின்றோம்! ஊட்டி வளர்ந்திடும் ‘‘சக்தி” யம்மா! -உன் ‘‘ஒளி” தனைக் காட்டிடு மருவூரம்மா!(அம்மா)
ஓம் சக்தி! நன்றி: சக்தி ஒளி விளக்கு -1 சுடர் 2 (1982) பக்கம்: 26]]>