அன்னை அன்பு வடிவானவாள். இவ்வண்ட சராசரம் அனைத்திற்கும் அவனே தாயாவான். நாம் அனைவரும் அவளுடைய அருமைக் குழந்தைகள் அல்லவா? என்றாலும் என்ன வேடிக்கை? நம்மைப் பெற்றதாய் நம் அனைவரையும் அடையாளம் கண்டுகொள்கிறான். ஆனால் அவன் குழந்தைகளாகிய
நாம் அவனை யாரென்று அறிந்துகொள்ளத் தவறி விடுகிறோம். நாம் அவனை நம் தாயென்று அறிந்துகொள்ளத் தவறிவிட்டாலும், அவள் நம்மை மறப்பதும் இல்லை; அருள்புரியாமல் விடுவதும் இல்லை.
நம்மில் பலர் பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருக்கிறோம். மருத்துவர், பொறியாளர், கட்டட நிபுணர், பொருளியல் வல்லுநர் என்று எந்தத் துறையில் சிறப்படைந்து இருந்தாலும், அச்சிறப்பனைத்தும் அன்னையின் திருவருளால் கிடைப்பனவேயாகும்.
வேறுபட்ட பணிகளில் இருக்கும் இவர்கள் அனைவருக்கும் அன்னை வழங்கும் ஒரே சீரான அருள் எப்படிப் பயன்படும் என்று கேட்கத் தோன்றுகிறதா? ஒரு செடியின் வேரிலிருந்து சத்து நீர்ச் (sap) செடி முழுவதும் பரவுகிறது. சத்துநீர் ஒன்றுதான்! அது பூவினிடம் சொல்லும் போது அது சிறந்த முறையில் பூக்கவும், இலையில் செல்லும் போது செழுமையான இலையாக துளிர்க்கவும் செய்கிறது. அது போலத் தான் அன்னையும் தன் திருவருளாகிய ஒன்றை இவர்கட்குத் தந்து அவ்வத் துறையில் சிறப்புப் பெற உதவுகிறாள்.
இந்த அருளைப்பெற நாம் என்ன செய்ய வேண்டும்? நேர்மையான வாழ்க்கை மேற்கொண்டு பிறவுயிர்கட்கு உதவி செய்யும் நோக்கத்துடன் சமூக சேவை செய்வதும் தம்முடைய கடமையாகும். நான் என்ற எண்ணத்தை அறவே ஒழித்து எல்லாம் அவள் அருள்! அவனன்றி ஓரளவும் அசையாது என்ற எண்ணத்துடன் எப்போ தும் அருள்நாடி எந்த வேலை செய்தாலும் அவை ஓங்கி வளர்ந்து சிறப்புறும்.
அன்னை அருள்மாரி பொழிவாள், யாருக்கு? எவர்கள் சுயநலம் கருதாது அன்னையைப் பயபக்தியுடன் உண் மையுடன் பணிகிறார்களோ அவர்கட்கு அன்னை இலட்சங்களையும், இலட்சியங்களையும் வழங்குவாள்.
அன்னையின் ஆசியால் ஆன்மிக அருள்கிட்டும். ஆன்மிக அருள்பெற்ற மக்கள் பெருகப் பெருக உலகநலன் உண்டாகும்.
ஓம் சக்தி நன்றி: சக்தி ஒளி விளக்கு – 1 சுடர்-1 1982 பக்கம் : 37
]]>