அதுகேட்டு மனம் சோர்ந்த நிலையில் மருத்துவ மனையில் கிடந்தேன். அப்போது ஊட்டியில் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தைச் சேர்ந்த ஒருவர் என்னைப் பார்க்க வந்தார். என் நிலையைக் கூறினேன். அவர் என்னை அருகில் உள்ள வழிபாட்டு மன்றத்திற்கு அழைத்துச் சென்று குங்குமம் கொடுத்து அனுப்பினார். அடிக்கடி வழிபாட்டில் கலந்து கொள்ளும்படி அறிவுறுத்தினார். நானும் விடாமல் மன்றம் சென்று வந்தேன்.
நீயும் விடாமல் ஓம் சக்தியைக் கும்பிடுகிறாயே, அந்த ஓம் சக்தி உனக்குக் குழந்தையைக் கொடுப்பதுதானே…! ஏன் இன்னும் அங்கே போகிறாய் ? என்று எனக்கு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கேலியும் கிண்டலும் செய்தார்கள்.
அதையெல்லாம் பொறுத்துக் கொண்டு அம்மாவிடம் வைத்த நம்பிக்கை குறையாமல் மன்றத்திற்குச் சென்று தொண்டு செய்து வந்தேன்.
நான்காம் முறை சக்தி மாலை அணிந்து இருமுடி செலுத்திவிட்டு வந்தேன். ஐம்பதாம் நாள் கருவுற்றேன்.என்ன ஊழ்வினையோ, யார் கொடுத்த சாபமோ மீண்டும் கருச்சிதைவு ஏற்பட்டது.
என்னைச் சார்ந்த அனைவரும், என் கணவர் வீட்டைச் சார்ந்தவர்களும் எனக்கு மலடி என்ற பட்டத்தைக் கொடுத்து விட்டார்கள். இந்நிலையில் எங்கள் பக்கத்து வீட்டில் குழந்தைக்குப் பெயர் சூட்டுவிழா நடந்தது. என்னையும் அழைத்தார்கள். அழைத்தார்களே என்று போனேன். எல்லாரும் குழந்தைக்கு நாக்கில்தேன் வைத்துக் கொண்டிருந்தார்கள். குழந்தையின் தாய் என்னையும் அழைத்தார்கள். நானும் குழந்தையின் நாக்கில்தேன் வைத்து வாழ்த்தினேன்.
அந்தப் பெண்ணின் கணவர் அவளுக்குக் குழந்தை கிடையாது. அவளை ஏன் அழைத்தாய் ? என்று எல்லார் முன்பும் கூறிவிட்டார். எனக்கு மிகவும் அவமானமாகப் போய்விட்டது.
நன்றி சக்தி. சுதா, அரவன்காடு, நீலகிரி.
சக்தி ஒளி ஜனவரி 2009, பக்கம் – 19, 20.
]]>