அருள்வாக்கு எனும் இலக்கியப் பெட்டகம்
கல்வி கற்பது மாணவனின் தர்மம்.கற்பிப்பது ஆசிரிய தர்மம். இல்லற வாழ்க்கையை உள்ளபடி நடத்துவது இல்லற தர்மம். நீதி தவறாமல் ஆட்சி நடத்துவது அரச தர்மம். துறவு வாழ்க்கை மேற்கொண்டால், அந்த மரபுப்படி வாழ்வது துறவு தர்மம். நல்லவர்களையும், நல்லவைகளையும் காத்து தீயவர்களையும், தீயவைகளையும் அழிககப் போர் தொடுப்பது அவதார தர்மம். தர்மம் தலை காக்கும் என்பது முதுமொழி.
பசி தீர்க்கிற தர்மத்தை ‘பசிப்பிணி மருத்துவம்’ என்றே வடலூர் இராமலிங்க வள்ளலார் அழைக்கிறார்.
பசி என்று கேட்டு நிற்பவர்களைப் புறக்கணிக்கக் கூடாது. உண்ணுவதற்கு ஏதாவது கொடுத்தே ஆகவேண்டும். அன்னையேகூட நம்மை வந்து சோதிக்கக் கூடும்.
ஒரு பக்தர் பெற்ற அனுபவம் இதைச் சொல்ல வைக்கிறது. அன்னை மற்றும் அருள்திரு அம்மா அவர்களின் வாக்குகள் வார்த்தை இலக்கியங்கள் மட்டும் அல்ல, அவை வாழ்க்கை இலக்கியங்கள். வாழ்க்கை அனுபவம் சொல்லும் வளமான இலக்கியங்கள். அப்படியோர் அனுபவ இலக்கியம் இங்கே இப்போது பதிவு செய்யப்படுகிறது.
ஒரு சந்தர்ப்பம் அந்த பக்தர் தினந்தோறும் 108 முறை ‘ஓம் சக்தி ஓம் சக்தி ‘ எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அநேகமாக, அதிகாலை வேளையில் ‘ஓம் சக்தி’ எழுதுவது வழக்கம்.
இன்னொரு வழக்கமும் அந்த வீட்டில் இருந்தது. ‘பசி ‘ என்று யார் வந்து கேட்டாலும் அந்த வீட்டில் இல்லை என்று சொல்வதில்லை.இருக்கின்ற உணவு ஏதாவது கொடுத்து அனுப்புவதே அந்த வீட்டின் வழக்கம்.
ஒருநாள் காலை சுமார் 6.30 மணி இருக்கும். இந்த அன்பர் வீட்டுக்குள் சன்னலருகே உட்கார்ந்து ‘ ஓம் சக்தி ‘ எழுதிக் கொண்டு இருக்கிறார்.வாசலில் ஒருவர் வந்து நிற்கிறார். ‘ வழக்கமாக வருபவர்தான் ‘.
வந்து நிற்பவர்க்கு ஒரு வழக்கம் உண்டு. அவராக வாய்திறந்து எதுவும் கேட்க மாட்டார். ஆனால் உணவோ, வேறு எதுவோ, உணவுக்கு வகை செய்யாமல், வாங்காமல் போகவும் மாட்டார்.
‘ ஓம் சக்தி ‘ எழுதிக் கொண்டு இருப்பவர் அவரைப் பார்க்கிறார். பார்த்தவர்தன் மனைவியை அழைத்து ‘வழக்கமாக வருகிற அந்த ஆள் வந்து இருக்கிறார். ஏதாவது கொடுத்து அனுப்பு ‘ என்று உத்தரவு போடுகிறார்.
அவர் மனைவி சொல்கிறார், ‘நாலு நாளா வெளியூர் போயிட்டு நேத்து ராத்திரி தானே லேட்டா வந்தோம். அவரை வேறு இடம் பார்ககச் சொல்லுங்க ‘.
அந்தப் பக்தர் வெளியில் நின்றிருந்த அவரை பார்த்துச் சொல்கிறார் , “ ஐயா ! வேறு இடம் பாருங்க. “ இவர் ஓம் சக்தி எழுதிக் கொண்டே இருக்கிறார்.
வந்தவர் சொல்கிறார் , “ வேறு இடம் பார்க்க விருப்பம் இல்லை” நம் அன்பரின் காதுகளில் இந்த வார்த்தை விழுந்தன. அந்தக் கணத்தில் அவர் மனதில் அவை பதியவில்லை. அவர்தான் மும்முரமாக ஓம் சக்தி எழுதிக் கொண்டிருக்கிறாரே !
அன்றைய கணக்குக்கு அந்தக் கணத்தில் 100 முறை எழுதிவிட்டார். இன்னும் எட்டு எண்ணிக்கைதான் பாக்கி. அதைஎழுதி முடித்து விடுவதில் மும்முரம்.
மீதம் உள்ள எட்டையும் எழுதி முடித்திவிட்டு வாசலைப் பார்க்கிறார். “வேறு இடம் பார்க்க விருப்பம் இல்லை “ என்று சொன்ன அவரைக் காணவில்லையே !
அந்த ஆளைத் தேடிக்கொண்டு வெளியில் வந்து பார்த்தார் பக்தர். அடுத்த வீட்டு வாசலில் காணோம். அந்தத் தெருவில் காணோம்.
சைக்கிளை எடுத்துக் கொண்டு அந்த ஊரின் திருக்கோயிலைச் சுற்றி உள்ள நான்கு மட விளாகங்களிலும் பார்த்தார். பக்தரின் வீடு கீழே மடவிளாகத்தில் இருந்தது. அந்த ஆள் தென்படவில்லை.
திருக்கோயிலின் தேரோடும் நான்கு வீதிகளிலும் சைக்கிளில் ஏறிச் சுற்றிப் பார்த்தார். வந்தவர் தென்படவே இல்லை.
தன் எதிரில் கண்டவரை எல்லாம், வந்தவரின் அடையாளம் சொல்லி விசாரித்தார். பொதுவாக அந்த ஆளை அந்த ஊரில் எல்லாருக்கும் தெரியும். அவ்வளவு சீக்கிரம் அவர் ஊருக்குள் எங்கேயும் போயிருக்க முடியாது.
சந்தித் தெருவில் இருந்த இன்னொரு பக்தரிடம் இந்தத் தகவலைச் சொன்னார். அவர் எதையும் எளிதில் நம்பாதவர். ‘சக்தி நானே இதைத் தீர விசாரித்துக் கொள்கிறேன். இரண்டு நாள் பொறுங்கள் ‘ என்றார்.
வந்தவரை விட்டுவிட்ட பக்தரும் ஒத்துக் கொண்டார்.
நன்றி சக்தி ஒளி பக்கம்-54 ஏப்ரல் 2009]]>