‘‘இறையுணர்வையூட்டவும் பக்தி நெறியை வளர்க்கவும் பக்தியின் மூலம் இறையருட் காட்சி பெறவுமே ஆலய வழிபாடு ஏற்பட்டது” என்பவர் அறிஞர்! ஆலய வழிபாட்டை உலகில் முதன்முதலில் ஏற்படுத்திக் கருவறை மூர்த்திகட்கு உயிர் ஊட்டியவர்கள் சித்தர்களும், ஞானியர்களுமே ஆவர்! அங்ஙனம் எழுந்த ஆலயங்கள் கட்டாயம் ஒரு ஞான சித்தரோடு எவ்வகையிலாவது தொடர்பு கொண்டிருப்பதைக் காணலாம்.
மருவத்தூர் மண்! ‘மருவத்தூர் ஆலய எல்லையில் 21 சித்தர்கள் அடங்கியுள்ளார்கள்” என்பது அன்னையின் அருள்வாக்கு. இம்மண்ணையே அன்னை ஆதிபராசக்தி தேர்ந்தெடுத்து, உலகம் முழுவதும் வழிபாட்டு மன்றங்களை அமைத்து இன்றைய மக்கள் பிரச்சனைகளைத் தீர்க்க இங்கே சித்தர் தலைவியாகிப் பல அற்புதங்களை நிகழ்த்தி வருதல் யாவரும் அறிந்ததே! அன்னை சக்தி உபாசகர் அருள்திரு அடிகளார் மூலம் வெளிப்பட்டு நோய் நீக்கம், கடவுள் பக்தி, ஆன்மிக விளக்கம் அனைத்துயும் செய்து வருகிறாள்! சிலருக்குச் சித்துக்களையும் காட்டுகிறான்! அவற்றில் சிலவற்றைக் காட்டுவதே இக்கட்டுரை.
சித்து என்பது எது? சித்தி பெற்ற காரணத்தால் வெளிப்படுவதே சித்து. ஞானிகள் சித்தி பெற்றால், சித்தர்கள் என அழைக்கப்படுகின்றனர். ஆனால் இவர்கள் அதிகமாகச் சித்தாடலை விரும்பவேமாட்டார்கள். ஏனெனில், அதுவே புகழ் ஆசைக்கு வித்திட்டுமேல் நிலை எய்தும் அவர்கள் நோக்கத்திற்குத் தடையாருமாம்! திருவருள் கூட்டி நின்றால் மட்டுமே ஓரிரு சித்துக்களை இவர்கள் ஆடுவார்கள். வள்ளலார் ஆடிய சித்துக்களும் இப்படிப்பட்டனவே.
மருவூரில் சித்து: இம்மருவத்தூரில் ஞானிகள் யாரும் சித்தாடவில்லை. மாறாக இங்கே அன்னையே சித்தாடுகின்றாள்! இது தான் இங்கே பெருத்த வேறுபாடு! இம்மண்ணில் அன்னை. மக்களைத் திருத்திக் கடவுள் நம்பிக்கையூட்டவும், ஆன்மிக உண்மை உணர்த்தவுமே சித்தாடுகிறாள்! அத்துடன் எல்லோருக்குமே சித்துக்கள் காட்டுவதும் இப்பெருமாட்டியிடம் இல்லை!
மழைச்சித்து: ஆறு மாதத்திற்கு முன் சென்னை அன்பர் ஒருவருக்கு, அன்னை மழைச் சித்தைக்காட்டினாள்! அன்பர் பல ஆயிர ரூபாய்களைக் கொட்டிப் புது வீடு ஒன்றைக் கட்டினார்! அன்றைக்குத்தான் பூச்சு வேலை முடிந்தது! அவருக்கு என்ன துன்ப ரேமோ தெரியவில்லை! உடனே வானத்தில் மழை மேகம் தொடர்ந்து மின்னல்! இன்னம் ஒரு சில நிமிடங்களில் மழை கொட்டோ கொட்டென்று கொட்டப்போகிறது! அவர் என் செய்வார் பாவம்! அம்மனை, வேறுவழியொன்றும் தென்படாமல் வேண்டிக்கொண்டு 1008 மந்திரத்தைப் படிக்கத் தொடங்கினார்! என்னே அதிசயம் அவர் வீட்டு எல்லை தாண்டியே எல்லா மழையும் பெய்து அன்னையின் திருவருளால் வீடு காப்பாற்றப்பட்டது! அன்பர் ‘மாமழை நோக்கி”யின் கருணைகண்டு உள்ளம் பூரித்து விட்டார்! இது பக்தனைக் காக்க எழுந்த மழைச் சித்தல்லவா? பக்தனுக்காக வேண்டியே இயற்கையையும் தடுத்த சித்தல்லவா?
வேண்டுதல் பலித்த சித்து: சென்னையைச் சேர்ந்த மற்றோர் அன்பரின் தம்பி, ஏதோ மன வருத்தத்தில் நஞ்சைக் குடித்து விட்டார்! உடனே குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அவரை மிகுந்த அபாயகரமான சூழ்நிலையில் எடுத்துச் சென்றனர்! ‘டாக்டர்ர்கள் இதுவரை நல்ல பதிலைச் சொல்லவில்லையே” என அன்பருக்கு வருத்தம்! அடுத்துப் படுக்கையில் இருந்த நோயாளி ஒருவர் அன்னையின் பெருமையைக் கூறி உடன் அன்பரை மருத்தூருக்குப் போய் வேண்டிக்கொண்டு வரக்கட்டாயப்படுத்தினாராம்” அன்பருக்கு அப்போதிருந்த மனநிலையில் சரி! இதையாவது செய்து பார்ப்போம் என்று ஆலயம் வந்து அம்மனை வேண்டிக்கொண்டு விபூதி பிரசாதம் எடுத்துக் கொண்டு நேரேமருத்துவமனை சென்று தம்பியைப் பார்த்தார். விபூதி போகும் முன்பே அன்னை அவர் தம்பிக்கை அருள் பாலித்து மயக்கம் நீக்கிப் படுக்கையில் எந்த மாற்றமும் இன்றி உட்கார வைத்து விட்டான்! அன்பர் அடைந்த வியப்பிற்கும் மகிழ்ச்சிக்கும் எல்லையே இல்லை! மறுநாள் இருவரும் ஆலயம் வந்து ஆலயப்பக்தர்கட்கு இந்த நிகழ்ச்சியைக் கூறினார்!
பக்தர்கள் இந்த அன்னையிடம் அருள்வாக்குக்கேட்டே தம்குறையை தணித்துக்கொள்ள வேண்டும் என்ற நிலை இல்லை! ‘ஆலயம் வந்து மண்ணை மிதித்து வேண்டிக்கொண்டாலுமே இம் மருவத்தூர் சித்தாசி உள்ளத்தின் குறைகளைக் களைந்து, எல்லா நலன்களையும் சேர்ப்பான் என்று இதன்மூலம் தொpகிறது. ஆகவே, ‘எல்லாம் வல்ல இவ்வன்னை தன்பக்தர்கள் துயர் துடைக்கவே இம் மண்ணில் சித்தாடல் செய்கிறாள் என்று நாம் தெரிந்து கொள்கிறோம்.
ஓம் சக்தி
எஸ்.ஜோசப்
நன்றி: சக்திஒளி ஜனவரி. பக் 21-22 (1982)
]]>