துவக்கம்: ‘எதற்கும் காலந்தான் பதில் சொல்ல வேண்டும்; அக்காலந்தான் மனிதனை மாற்றவல்லது” – என்பது ஆன்றோர் உரை. என்வாழ்விலும் நாத்திக வேகத்திலிருந்தும் ஞான தாகத்திலிருந்தும் பக்தி வேகத்திற்கும் – சத்தி பாதத்திற்கும் நான் மாற்றம் பெற்றதற்கும் காலந்தான் காரணம்!
பத்து ஆண்டுகளுக்கு முன்: அச்சிறுபாக்கம் உயர்நிலைப் பள்ளியில் அப்போது பணியாற்றிக் கொண்டிருந்த நான், உடன் பணியாற்றும் வாரியார் சுவாமிகளின் மிக நெருங்கிய உகறவினரும், உன் ஆருயிர் நண்பருமாகிய திரு.புலவர். க.முனிரத்தினம் அவர்கள் மூலம், மருவத்தூர் ஆலயம் பற்றி அறிந்தேன். அப்போது என் மூன்றாவது குழந்தை ‘உள்ளொளி” என்பான் இளம்பிள்ளை வாதநோயால் பீடிக்கப்பட்டிருந்த நிலை! அவர் முதலில் என்னை மட்டும் ஆலயம் வரச்சொல்லியிருந்தார். அன்று வியாழக்கிழமை ஆலயத்தில் அருள்வாக்கு உண்டு. மருவத்தூர் மண்ணுக்கு நடந்தே ‘ஏதோ போய்ப் பார்ப்போமே” என்றே வந்தேன். அப்போது நான் ஞானவள்ளல் பரஞ்சோதி மகானின் மெய்யுணர்வுத் தீட்சையும் குண்டலினி யோகமும் தீவிரமாகப் பயின்று வந்த நேரம்! அத்துடன் அமையாமல் – வடகரை (கேரளா) தித்தாதிரமத் தந்தை சிவானந்தா அவர்களின் ‘அசபா காயத்திரி” உபதேசமும், புதுக்கோட்டைச் சாலை ஆண்டவரின் பொருளறி உபதேசமும் கூடப்பெற்றுப் பயிற்சி செய்துவந்த நேரமாகும்! ஆலயத்தில் அமர்ந்திருந்த பக்தர் கூட்டத்தின் பின்னால் நானும் வந்து அமைதியாக அமர்ந்திருந்தேன்! அன்று ஆலயம் வளராத நிலை! அன்னை அருட்கோலந்தாங்கி வெளியே ‘மயிலென ஒசித்தும் – அன்னமென நடைபாவுதல் செய்தும் வந்தாள்! சுற்றிலும் கடைக்கண் ஒட்டிக் கூட்டத்தினரைப் பார்த்தாள்! என்பக்கம் திரும்பி விரல்காட்டி அழைத்தான். நான், ‘நம்மையா அம்மா கூப்பிடப் போகிறாள்? வேறு யாரையோ” என்று தாமதித்தேன்; மீண்டும் அன்னை என்னையே குறிப்பிட்டாள்! நான் உடனே, ‘ஞாலம் விளக்க 2007 ஆண்டுகளாகச் சுயம்பாய் உள்ள கருவறை நோக்கிச் சென்று அமர்ந்தேன்! அன்னை தண்நெற்றிப் பொட்டில் (இலவாடத்தானம்) தன் பெருவிரலை வைத்து அழுத்திக்கொண்டே சிறிது நேரம் மௌனமாக அப்படியே இருந்தாள்! பின் கடல்மடை திறந்ததுபோல் அருள்வாக்குக் கூறினாள். எனக்குப் பெரும் வியப்பு! நான் குருமூலம் நெற்றிக்கண் திறந்து உபதேசம் பெற்ற நிலையை அம்மா ஏன் காட்ட வேண்டும்? நாம் பெற்ற உபதேசத்தை அம்மா ஏற்றுக்கொள்ளும் நிலையோ? என எண்ணினேன்!
அருள்வாக்கு: (அப்போது அஞ்சனம்) அருள்வாக்கில் அன்னை, என் குடும்பநிலை – வாழ்க்கைப் போராட்டம் கல்லூரியில் நான் படித்துக்கொண்டிருந்த நேரம் எனக்கு அம்மை வார்த்து ஏற்பட்ட பெரும் சோதனை அப்போது நான் என் முன்பிறவித் தொடர்பு விளக்கம் அறிந்து அம்பிகை காட்சி தந்தது. அப்போது ஏற்பட்ட பேரொளிக்காட்சி – அதைத் தாங்காமல் என் அறிவு மாறுபட்ட நிலை – கனவில் காளிதேவி என் நாவைப் பிடித்து விரதலால் அழுத்தி ஆசீர்வாதம் செய்தது – பல ஆன்மாக்கள் ஏதோ ஒரு பொpய ஆலயம் நோக்கிச் சூக்கும உடலில் படை படையாக ஓடிச்செல்வது போலக் கண்டது – என் உயிரும் சூக்கும உடலில் செல்வது போலக் கண்டறிந்தமை என எனக்கு மட்டுமே தொpந்த எல்லாவற்றையும் கூறினாள்! ‘தற்போது உள குழந்தையின் பொருட்டு இங்கே வந்துள்ளாய்; குழந்தையைப் பற்றிக் கவலை வேண்டாம்! நான் கவனித்துக் கொள்கிறேன்” என்று சில கட்டளைகளையும் இட்டான்! அதையும் நிறைவேற்றி முடித்தேன்!
ஆலயக்குழு உறுப்பினன்: என் குழந்தைக்காகக் கட்டளை நிறைவேற்றிக் கொண்டிருந்த நாளில் அன்னை என்னை அழைத்து உன்னை இன்று முதல் ஆலயக் குழுவில் சேர்த்துக்கொண்டேன்! என்றான். அது முதல் என் உள்ளத்திலிருந்த அனைத்துச் சந்தேகங்களையும் தீர்த்துக் கொண்டேன். அதனால் என் உள்ளம் ஓரளவு தெளிவடைந்தது. அதுமுதற் கொண்டே என் உள்ளம் சக்தி வழிபாட்டிலும் பக்தி நெறியிலும் திரும்பியது. அப்போது அன்னையைப் பாடலால் மனமுருகிப் படித்துநிக்க வேண்டும் என்றே ‘வேண்டுதற்கூறு” பதிகத்தை (10 பாடல்கள் மட்டும்) எழுதி அன்னை படியில் வைத்தேன். அன்னை அதனை ஏற்றுக்கொண்டு திரு.முனிரத்தினம் அவர்களை 11 பாடல்கள் இருக்கவேண்டும். அப்பாலகனிடம் வேறு பாடல்கள் தயாராக இருக்கின்றன் அவற்றில் ஒன்று சேர்த்துப் பதினொன்றாக்கி நூலாக வெளியிட ஏற்பாடு செய்” என்று கூறினாள்! அவ்விதம் அன்னையின் ஆணைவண்ணம் சேர்த்த பாடல்தான், ‘இன்னமும் என்மனம்” – எனத்துவங்கும் பாடலாகும்!
மனப்போராட்டம்: ஆலய வழிபாட்டிலும் பக்தி நெறியிலும் நான் இருந்துவந்தாலும், ‘நாம் பெற்ற உபதேசமும், ஞான மார்க்கமும், யோகப் பயிற்சியும் என்னாவது”? என அடிக்கடி என் மனத்தில் ஐயப்பாடுகள் எழுந்த வண்ணமே இருந்தன! ஒருநாள் நான் அன்னையிடம், ‘நான் யோகத்தில் எந்த முறையைக் கடைப்பிடிப்பது? என்று கேட்டேன். அதற்கு அன்னை விளக்கமாக நேரிய பதில் தரவில்லை! அதற்குரிய விளக்கத்தைப் போகப்போக விளக்குவான் போலும் என்று இருந்து விட்டேன். அதற்குப்பின் அன்னை, ‘உனக்கு அருள்தரப் போகிறோன்! சித்தனாக்கப் போகிறேன்! ஆலயம் வந்தால், நீமௌனம் காத்து, ஆலய எல்லையில் அமைதியாக இருந்துவிடு”என்று அடிக்கடி கூறிவந்தான்! ஆனால் நான் இதுவரை மெனத்தைக் கடைப்பிடிக்க முடியாதவனாய் ஆகிவிட்டேன்! எப்போதாவது தியானத்தில் அமர்வது வழக்கம். அப்போதும் எனக்கு மனம் சரியாக ஒன்றாமல் சோதனை செய்யும்!
சவுக்கடி: நான் சாக்த மத நுணுக்கங்களையும் – யோக, ஞானம் பற்றிய நூற்களையும் படிக்கும்போது – யோகிகட்கும் – ஞானிகட்கும் – சித்தர்கட்கும் திருவருள் கிட்டுவது சக்தியின் திருவருளால்தான் என்ற உண்மை எனக்குத் தெரிந்தது!
சித்தர் பாடல்களை ஆய்ந்தபோது ‘18 சித்தர்களும் மறைமுகமாகவே சக்தி வழிபாடு செய்தவர்களே” – என்று அறிந்தேன்! எல்லா ஞானிகளுமே, ‘மனமோகினியாம் மாயை”யைப் பற்றியே அதிகம் பாடும் உண்மை புலப்பட்டது.
இதற்குச் சான்றாக: கருவூர்ச் சித்தர் ‘ஆதியந்த வாலையவள் இருந்தவீடு; ஆச்சரியம் அதுமெத்த ஆகும் பாரு! சோதியந்த நடுவீடு பீட மாகிச் சொகுசுபெற வீற்றிருந்தாள் துரைப்பெண்ணாத்தாள்!”
அழுகணிச்சித்தர்: ‘மூலப் பதியடியோ மூவிரண்டு வீடதிலே கோலப் பதியடியோ குதர்க்கத் தெருநடுவே சாலப் பதிதனிலே தணலாய் வளர்ந்த கம்பம் மேலப் பதிதனிலே என்கண்ணம்மா! விளையாட்டைப் பாரேனோ?”
வாலைச்சாமி: (ஞானக்கும்மி) ‘ஓங்காரமான பிரணவந்தாள் எங்கும் உயர்ந்த சோடி கலைதிறந்தாள்! ரீ ங்காரமான பராசத்தியை நீங்கள் நேர்ந்து கும்மி யடியுங்கடி?”
கைலாயக் கம்பனிச் சட்டைமுனி n‘பாரப்பா செகமனைத்தும் அண்ட மெல்லாம் பங்கான சூழ்ச்சியில் வைத்திருந்த கன்னி! ஆரப்பா அவளைவிட்டு ஞானங் கண்டோர்? அலைச்சுழிக்கும் ஆசை என்ற பாம்பு தானே!”
காகபுகண்டர்: ‘ஆதியெனை ஈன்ற குருபாதம் காப்பு! அத்துவிதம் பிரணவத்தின் அருளே காப்பு”
தற்கால யோகி – ஞானியர்: அரவிந்தர்: ‘உலகுவிர்களை ஈன்ற அன்னை தானும் தன் திருப்பணிக்கு அநுகூலமாகத் திருவுருவங்கள் பலவற்றைத் தாங்குகிறாள். அவற்றுள் நான்கு திருவுருவங்களே சிறப்புடன் விளங்குகின்றன. மகேசுவரி, மகாகாளி, மகாலட்சுமி, மகாசரசுவதி என்பவை.
– மீனாட்சி அம்மன் ஆலயம் கும்பாபிடேக மலர். (அரவிந்தரின் தத்துவவிக்கம் – ப.23)
இரமண பகவான்: ‘திருவண்ணாமலை இரமண இரகசியமாகச் (ஆத்மார்த்தமாக) சக்திவழிபாடு செய்தவர்; இவர் அம்பாளின் சீசக்கரத்தை வைத்து வழிபட்டவர் எனும் உண்மை மாத்துரு பூதேச்சுவரர் சிவலிங்கப் பிரதிட்டை செய்தபோது வெளிப்பட்டது”
….’அருணாசலஜோதி” (வேலவன்) இவைகளைப் படித்ததும் என் சந்தேகங்கள் மனப்போராட்டங்கள் அனைத்தும் அவனருளால் நீங்கின! ‘எங்கும் சத்தியே! எதிலும் சத்தியே! எவர் வழிபாட்டிலும் எவர் வழிபாட்டிற்கும் சத்தியே!” எனும் பேருண்மை தெளிவாயிற்று.
அடிகளாரும் மூலமந்திரமும்: ஆரம்ப நாட்களில் விழா நாள் ஒன்றில், ‘பக்தர்கள் அனைவரும் பாலகன் (அடிகளார்) கையில் விபூதி பிரசாதம் வாங்கிக்கொள்ள வேண்டும்” என்று அன்னை கூறினாள்! ‘ஏன் எனில், ‘மூலமதந்திரம் அறிந்தவன் இப்பாலகன் என்றும் குறிப்பிட்டான். ஆலயத்தில் நாம் அன்றாடம் பயன்படுத்திவரும் ‘ஓம் சத்தி” மந்திரத்திற்கும் மூலமந்திரம் ஒன்றை அன்னை அருளாள் இவர் அறிந்தவர் போலும் என்று எண்ணினேன். தாரகமந்திரம் பற்றித் தொpந்தபின்தான் இது தெளிவாயிற்று. மந்திரத்திற்குத் சக்தியை இவ்வன்னையே – கூட்டுபவன் என்னும் உண்மையைப் பின்னால் 1008 மந்திரத்திற்கும் அன்னை உருவேற்றியபோது தெரிந்து கொண்டேன்! (தொடரும்)
புலவர் மா.சொக்கலிங்கம் எம்.ஏ..
ஓம் சக்தி நன்றி: சக்திஒளி ஜனவரி. பக் 13-16 (1982)
]]>