அன்னை அருளிய பஞ்ச பூத வழிபாட்டு முறை 1. இருகரங்களையும் தலைக்கு மேல் குவித்து, பின் வருமாறு கூறவேண்டும்: “ஓம்சக்தியே நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களும் அருள் புரிய வேண்டும் ஓம்சக்தியே” 2. கைகளின் இரு கட்டை விரல்களையும், இரு ஆள்காட்டி விரல்களையும் முக்கோணவடிவில் ஒன்றாகச் சேர்த்து அந்த துவாரத்தின் வழியே விளக்கின் சுடரை பார்த்துக் கொண்டே பின்வருமாறு கூற வேண்டும். “ஓம்சக்க்தியே அருவுருவான அனைத்து தெய்வங்களும் அருள்புரியவேண்டும் ஓம்சக்தியே” 3. மண்டியிட்டு இரண்டு கைகளையும், தலையையும் தரையின் மீது வைத்து பின்வருமாறு கூற வேண்டும். ” ஓம்சக்தியே பூமாதேவியே எங்களை காத்து அருள்புரிய வேண்டும் ஓம்சக்தியே” 4. மண்டியிட்ட நிலையிலே நிமிந்து இரண்டு கைகளைவும் மார்பின் மீது வைத்து பின்வருமாறு கூறவேண்டும்: “ஓம்சக்தியே இதயம் பரிசுத்தமாக இருக்கவேண்டும் ஓம்சக்தியே” 5. அதே நிலையில் இடது கையை மட்டும் மார்பின் மீது வைத்துக்கொண்டு, வலது கையால் இரண்டு கண்களையும் தொட்டு பின்வருமாறு கூற வேண்டும்: “ஓம்சக்தியே நல்லதையே பார்க்க வேண்டும் ஓம்சக்தியே” 6.அதே நிலையில் இடது கையை மட்டும் மார்பின் மீது வைத்துக்கொண்டு, வலது கையால் இரண்டு காதுகளையும் தொட்டு பின்வருமாறு கூற வேண்டும்: “ஓம்சக்தியே நல்லதையே கேட்க வேண்டும் ஓம்சக்தியே” 7. அதே நிலையில் இடது கையை மட்டும் மார்பின் மீது வைத்துக்கொண்டு, வலது கையை தலை மீது வைத்து பின்வருமாறு கூற வேண்டும்: “ஓம்சக்தியே நினைவு நல்லதாக இருக்க வேண்டும் ஓம்சக்தியே” 8.அதே நிலையில் இடது கையை மட்டும் மார்பின் மீது வைத்துக்கொண்டு, வலது கையால் மூக்கைத் தொட்டு பின்வருமாறு கூற வேண்டும்: “ஓம்சக்தியே நல்லதையே சுவாசிக்க வேண்டும் ஓம்சக்தியே” 9.அதே நிலையில் இடது கையை மட்டும் மார்பின் மீது வைத்துக்கொண்டு, வலது கையால் வாயைத் தொட்டு பின்வருமாறு கூற வேண்டும்: “ஓம்சக்தியே நல்லதையே பேச வேண்டும் ஓம்சக்தியே” 10.அதே நிலையில் இடது கையை மட்டும் மார்பின் மீது வைத்துக்கொண்டு, வலது கையால் நாக்கைத் தொட்டு பின்வருமாறு கூற வேண்டும்: “ஓம்சக்தியே நல்லதையே ரூசிக்க வேண்டும் ஓம்சக்தியே” 12. எழுந்து தன்னைதானே மூன்றுமுறை சுற்றி நம் ஆன்மாவை வணங்க வேண்டும்.
]]>