அன்னை ஆதிபராசக்தியே தூணிலும் இருக்கின்றாள், துரும்பிலும் இருக்கின்றாள். அவளின்றி அணுவும் அசையாது. எல்லாம் சக்தி மயம்! உயிர் உள்ள எல்லா வடிவிலும் இருக்கின்றாள். ஆட்டவே உயிர்களைப் படைக்கின்றாள்; ஆட்டி வைக்கின்றாள், மின்சக்தியாக இருந்தே செயல்படுகின்றாள் – அன்னை ஆதிபராசக்தி!

மின்சாரம் நமக்கு உகந்த நண்பனாகவும் சொல் மீறாத் தொண்ட னாகவும் இருப்பதுடன், இரக்கமில்லா அரக்கனாகவும் இருப்பதை நாம் நன்கு அறிவோம். இம்மின்சக்தி ஒலியாகவும், ஒளியாகவும், கொதி கலங்களாகவும், குளிர்ச்சாதனப் பெட்டியாகவும், காற்றாடியாகவும், மின்மோட்டாராகவும் பல தொழிலுக்கும் உபயோகப்படுவது தெரிந்ததே . தரைவாகனங்கள் முதல் ஆகாயத்தில் செயற்கைக் கோள்கள் வரை மின்சக்தி இன்றி இயங்க இயலாது. திரையரங்கங்கள் முதல் பலவித தொழிற்கூடங்கள் ஆலைகள் வரை மின்சக்தி எவ்வளவு அத்தியாவசியமாகின்றது. இயங்குவதற்கு மின்சக்தியே உயிர்நாடியாகின்றது. மின்சக்தி இல்லையேல் உலகில் வாழ்வில்லை; சில வருடங்களுக்கு முன் அமெரிக்காவில் தொழில் வளம் செழிக்கும் நியூயார்க் நகரத்திலும், அதைச் சார்ந்த மற்ற மாநிலங்களிலும் பல மணிநேரம் மின்சக்தித் தடைபடவே வாழ்க்கையே நடைபெறாது போனதுமல்லாமல், பல கோடி ரூபாய்களுக்கும் கூட நட்டமேற்பட்டது. அளவில்லாத் துன்பமும் நேரிட்டது. ‘லிப்டில்” சென்றவர்கள் பல மாளிகைகளிலும் மத்தியிலேயே நின்றதனால், மேலேயும் கீழேயும் செல்ல முடியாமல் பல மணி நேரம் தவித்தனர். கொலை, களவு, சூரையாடல், கற்பழித்தல் இன்னும் என்ன என்னவோ நடந்து, மக்கள் அளவில்லாத் துயரடைந்தனர். மின்சக்தியின் முக்கியத்துவத்தை இதனால் உணரலாம்.

ஆனால் மின்சக்தி நமது வாழ்விற்கு மட்டுமின்றி நமது உயிர் நிலையாக இருப்பதற்கும் இன்றியமையாதது. நமது உயிர் ஓட்டமும் மின்ஓட்டமும் ஒன்றுக்கொன்று மிகவும் நெருங்கிய உறவும், தொடர்புமுடையன. மரம், செடி, கொடி, புல்பூண்டு, கன்று, மாடு, மான் மனிதன் எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். அவற்றின் உடலில் தண்டில் அல்லது தசைகளில், கிழங்குகளில் மின் அழுத்த வித்தியாசமிருக்கின்றது, மிகவும் குறைந்த அளவில் மின்னோட்டம் இருக்கின்றது. அதாவது நம் உடலில் உள்ள தசைகளின் மேல் பாகத்திலிருந்து உள் மத்திய பாகத்திற்கு மின்ஓட்டம் இருக்கின்றது. ஒரு புதுக் கிழங்கையோ, காயையோ எடுத்துக் குறுக்காக இரண்டு துண்டுகளாக வெட்டி அதன் மேல் பாயத்தையும், நடுப்பாகத்தையும் நுண்ணிய பின் அளவுக் கருவிகளால் சோதனை செய்தால், மின் அழுத்த வித்தியாசமும், சிறிய அளவில் மின் ஓட்டமும் இருப்பது விளங்கும். இது போலவே நமது தசையைத் துண் டாக்கிச் சோதித்தால், வெளியாகத் திற்கும் மத்திய உள்பாகத்திற்கும் மின்னோட்டம் இருப்பது புலனாகும். எனவே விஞ்ஞான ரீதியாக நம் உடலில் மின அழுத்தமும், மின் ஓட்டமும் இருக்கின்றன என்று அறிகிறோம். தசைகளிலும், நரம்பு மண்டலங்களிலும் மின் அழுத்தம் இருக்கின்றது. நரம்புகளும், தசைகளும் இயங்கும் போது மின்சக்தி உற்பத்தியாகின்றது. நரம்புகளும், தசைகளும் இயங்கும் போது மின்சக்தி உற்பத்தியாகின்றது. இருதயம் துடிக்கும் போதும் மூளை வேலை செய்யும்போதும் மின்சக்தி வெளிப்படுகின்றது.

ஆனால் இந்த மின் அழுத்த வித்தியாசம் உடலில் உயிர் உள்ள வரையில்தான் இருக்கின்றது. உயிர் போனபின் இல்லை. செடி, கொடிகள், உயிர் இனங்கள் மடிந்தபின், மண்ணாங்கட்டி, கருங்கல்போல மின்அழுத்தம் இவற்றில் இல்லை. இதனால் என்ன புலனாகின்றது? மின்சக்தி இருந் தால், உயிர் உண்டு மின்சக்தி இல்லையேல் உயிரில்லை?. எனவே பராசக்தியே மின்சக்தியாக ஒவ்வோர் உயிரிலும் இருக்கின்றாள். எவ்விதம் சக்தி இல்லையேல் சிவமும் சவமாகின்றதோ, அதேபோல் மின்சக்தி இல்லாவிடில், இவ்வுயிரினங்கள் யாவும் சடமாகின்றன. பராசக்தி ஆக்கல் காத்தல் தொழில்களோடு அழித்தல் தொழிலையும் செய்கின்றான். அதேபோல் மின்சக்தியும் அழித்தல் தொழிலையும் மிகவும் நாசுக்காகச் செய்கின்றது. மருந்தைச் சரியான அளவில் சாப்பிட்டால் தான் வியாதி குணமாகின்றது. அதே மருந்தை அளவிற்குமேல் அதிகமாகச் சாப்பிட்டுவிட்டால் நஞ்சாக மாறுகின்றது. நமது உடலில் மின்சக்தி சிறிய அளவில் இருக்கின்றது. ஆனால் மின்சக்தி நமது உடலில் பாய்ச்சப்பட்டால் ஒரு மிகச் சிறிய அளவுக்கு மேல் மின் ஓட்டத்தைத் தாங்க இயலாமல் உயிர் பிரிக்கப்படுகின்றது. எவ்விதம் அன்னை ஆதிபராசக்தி குழந்தை குட்டி என்றும் சிறியவர் பொpயவர், அரசன் ஆண்டி என்றும், சாதி மதபேதமின்றியும், சமய வேறுபாடின்றியும் செயல்படுகின்றா ளோ? அவ்விதமே மின்சக்தியும் மின் அதிர்ச்சியைக் கொடுத்து உயிரைப் பிரிக்கின்றது. உயிர்வாழ எச்சக்தி தேவையோ, அதே மின்சக்தி உயிரைப்பிரித்து விடுகின்றது.

தொடரும்…

ஓம் சக்தி

நன்றி: சக்தி ஒளி 1982 ஜனவரி

(பக்:11-12)

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here