அன்னைக்கு
குங்கும அர்ச்சனை செய்யும் போது நம் ஆள்காட்டி விரலையும் பெருவிரலையும்
இணைத்த நிலையில் குங்குமத்தை எடுக்க வேண்டும்.மற்ற மூன்று விரல்களும்
நீட்டிய நிலையில் அமைதல் வேண்டும்.
அர்ச்சனைக்குரிய குங்குமத்தை
எடுத்து,அன்னையின் திருமுகத்திற்கு நேராக ஒருமுறை
நிமிர்த்திக்காட்டி”அம்மா! உன் அருளைத்தா!”என்று கேக்கிற பாவனையில் ஒரே ஒரு
முறை காட்ட வேண்டும்.”சுயம்பாக எழுந்தருளிய உனக்கே இந்தக் குங்கும
அர்ப்பணம்” என்கின்ற பாவனையில் இரண்டாவது முறை அமைய வேண்டும்.
மூன்றாவது
முறையாக கையை நிமிர்த்தியபடி அன்னையின் திருவடிகளுக்கு அர்ச்சனை செய்வது
போல காட்டி,கீழே வைக்கப்பட்டுள்ள தட்டிலோ அல்லது இலையிலோ அந்தக் குங்குமம்
விழுமாறு செய்ய
வேண்டும்.”உன் திருப்பாதக் கமலங்களுக்குச் சரணம்” என்று
சொல்கிற முறையில் இந்த அர்ச்சனையைக் கீழே இட வேண்டும்:
]]>