தன் கிராமத்துப் பெரியவா்களிடம் சென்று, இதுவரை நான் செய்த தவறுகளை நீங்கள் அனைவரும் மனதில் வைத்துக் கொள்ளாமல் என்னை மன்னித்து எனது கடைசி காரியங்களை உங்கள் கைகளால், நல்லபடியாக எனக்குச் செய்ய வேண்டும் என்பதே எனது இறுதி ஆசை என்று முறையிட்டான்.
சிறிது நாளில் அவன் இறந்து போனான். அவனுக்காக ஈமக்கிரியைகள் அவனது கிராமத்தைச் சோ்ந்தவா்கள் ஆரம்பிக்க இருந்தபோது, அடுத்த கிராமத்துக்காரா்கள் வந்து, அவன் எழுதிக் கொடுத்த கடிதத்தைக் காண்பித்து பக்கத்துக் கிராமத்துக்கு அவன் உடலை எடுத்துப்போக முயன்றார்கள். பெருங்கலவரம் ஏற்பட்டு ஒருவரை ஒருவா் மாய்த்துக் கொண்டு, இறந்தவா்களின் எண்ணிக்கை பன்மடங்கு ஆனது.
‘செத்தும் கெடுத்தான் சீதக்காதி’ என்பார்கள். இப்படி செத்தும் கெடுக்கும் வம்பா்கள் சிலரும் இருக்கவே செய்கிறார்கள்.
நாட்டின் ஒற்றுமை, வீட்டின் ஒற்றுமைகளில் இருந்தே தொடங்குகிறது. நாட்டின் ஒற்றுமையையும், வீட்டின் ஒற்றுமையையும் குலைப்பதற்கென்றே சிலா் இருக்கிறார்கள்.
கண்ணிலே விரலை விட்டே
காலமும் துன்பம் செய்வார்
எண்ணிய எண்ணங்கூடா
வண்ணம் நீ மாரி காக்க!
புண்ணிலே வேலை ஊன்றிப்
பொழுதுமே செய்வார் உள்ளார்
கண்ணீரை எம்பால் மாற்றிக்
காலமும் தேவி காக்க!
என்பது சக்திகவச மந்திர வரிகள்.
நமக்கு இரண்டு கண்கள்தான். ஆனால் நம்மைச் சுற்றி ஆயிரம் கண்கள் நம்மைக் கவனித்த வண்ணம் இருக்கின்றன.
கெடுதி யெலாம் வராமற் காக்க! என்பது மந்திர வரிகள்.
நமக்குத் தெரியாமலே, நமக்கு வர இருந்த, வரப்போகிற தீமைகளிலிருந்து, கண்ணை இமை காப்பது போல அம்மாவும், ஆன்மிககுரு அடிகளார் அவா்களும் நம்மை எப்படிக் காப்பாற்றி வருகிறார்கள்? என்பது நம்மில் பலருக்குத் தெரிவதில்லை.
பூா்வ ஜென்ம வாசனை எல்லோரையும் தொடா்ந்து வரும். அதிலிருந்து விடுபடுவது என்பது யாருக்கும் இயலாத காரியம்.
தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பார்கள்.
யாரும், யாரையும் அவ்வளவு எளிதாக மாற்ற இயலாது. அம்மா நினைத்தால் மட்டுமே அது சாத்தியம்.
ஆளும் வளரணும், அறிவும் வளரணும், அது தாண்டா வளா்ச்சி! என்றார் கவிஞா் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.
செல்வா்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல்
கற்றவா்க்கு அழகு அதன்படி நிற்றல்.
பக்தா்க்கு அழகு நற்குணங்களைப் பேணுதல்.
நாம் எல்லோரும் உடலால் வளா்கிற அளவிற்கு உள்ளத்தாலும், அறிவாலும் வளா்கிறோமா என்பது நம்மில் பலருக்கு கேள்விக்குறிதான்.
கழுகு உயரப் பறந்தாலும் அதனுடைய பார்வை கீழே இருக்கிற அழுகிய மாமிசத்தின் மீதே இருக்கும். நாம் எவ்வளவு கற்றாலும், செல்வம் பெற்றாலும், எவ்வளவு உயா்ந்தாலும் நம் மனதின் உயா் நெறி சில நேரங்களில் கட்டவிழ்ந்து நாம் கீழ்நிலைக்கு வந்து விடுகிறோம்.
நம்முள் ஏற்படும் நல்ல எண்ணமே சொல் ஆகி, செயல் ஆகிப் பழக்கம் ஆகிறது. நல்லது செய்தால் நல்லதே கிடைக்கும் என்பதில் எள்ளளவும் ஜயம் இல்லை.
“பிறருக்குக் கெடுதல் செய்யாமல் இருந்தால் உன்னுடைய வளா்ச்சி பூஜ்யத்திலிருந்து கால், அரை, முக்கால், ஒன்று என வளா்ந்து கொண்டே போகும்” என்பது அன்னையின் அருள்வாக்கு.
அம்மா அருள்வாக்கில் “ ஆன்மாவில் வரும் எண்ணங்களை நல்லதாக வை என்று வேண்டிக்கொள். இதை எல்லோரிடமும் போய்ச்சொல்” எனப் பக்தா் ஒருவரிடம் சொன்னாளாம்.
மனம் போல் மாங்கல்யம்.
எண்ணம் போல் வாழ்வு.
நம் ஆன்மாதான் நம்மை ஆட்டுவிக்கிறது. நம் ஆன்மாவில் நல்ல எண்ணங்கள் பிறக்குமானால், நம் வாழ்வில் அமைதி, நிம்மதி நமக்கு நிச்சயம் பெருகும்!
தன் வினை தன்னைச் சுடும்
வீட்டு அப்பம் ஓட்டைச் சுடும். என்றார் பட்டினத்தார்.
“ நீரில் வாழும் புழு, பூச்சிகள் தவளைக்கு இரையாகின்றன. தவளை பாம்புக்கு இரையாகிறது. பாம்பு கருடனுக்கு இரையாகிறது. கருடன் மற்ற விலங்குகளுக்கு இரையாகிறது. மற்ற விலங்குகள் மனிதனுக்கு இரையாகின்றன. மனிதன், தன் மனதிற்கு இரையாகின்றான். ” என்பது அன்னையின் அருள்வாக்கு.
நம் மனதில் ஏற்படும் தீமையான எண்ணங்களில் இருந்து நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள, நாம் நம் மனதைப் பண்படுத்த வேண்டியதென்பது நம்முடைய இன்றியமையாத கடமை ஆகும்.
“ உன் கையே உன் கண்ணைக் குத்தும். உன் எண்ணமே உனக்கு எமனாகும்” என்பாள் அன்னை.
நிலத்தைப் பக்குவப் படுத்தினால் பயிர்கள் நன்கு வளரும்!
மனதைப் பக்குவப் படுத்தினால் வாழ்க்கை நன்கு உயரும்!
“ தகாத ஆசை என்று நீங்கள் கருதினால் தாயே! என் மனம் இப்படித் தகாத ஆசைப்படுகின்றது. என் மனதை மாற்று! என்று அழுது கேளுங்கள். உங்கள் மனதை மாற்றுகிறேன்” என்பாள் அன்னை.
ஓம் அழுதால் நின்னைப் பெறலாம் போற்றி ஓம்! என்பது மந்திர வரிகள்.
அம்மா சொன்னபடி நம் மனதைச் சீராக்குவதற்கு, மனதை நெறிப்படுத்துவதற்கு,
ஓம் மனமாசைத் துடைப்பாய் போற்றி ஓம்!
ஓம் உயா்நெறி தருவாய் போற்றி ஓம்!
ஆன்மாவில் வரும் எண்ணங்களை நல்லதாக வை!என அம்மாவிடம் பிரார்த்திப்போம்.
இந்தப் பிரார்த்தனை, நம் மனதின் தீமைகளை வேரறுக்கவும், நடைமுறைத் துன்பங்களில் இருந்து நாம் மீளவும், நம் வாழ்வின் இறுதியில் நாம் ஆன்ம விடுதலை பெறவும் நமக்கு வழி காட்டும்.
ஓம் சக்தி!
சக்திஒளி (நவம்பா்-2012 , பக் 32- 37)
நன்றி (டாக்டா்.எஸ். சக்திதாசன், M.D.,)
மேல்மருவத்துார்.
]]>