சக்தி மாலை அணியும் விழா
அகிலாண்ட நாயகி, பிரமாண்டீஸ்வரி, அன்னை ஆதிபராசக்தியானவள், பூமியில் இறங்கிவந்து பங்காரு அடிகளாராக மேல்மருவத்தூரில் அவதாரம் செய்து, மனிதனை மனிதனாக வாழவைப்பதற்காக, மனிதனோடு பேசுகிறது, வாழ்கிறது, வாழ்ந்தும் காட்டுகிறது. சாதி, மதம், மொழி, இனம், நாடு வேறுபாடின்றி அனைத்து ஆன்மாக்களையும் நேசக்கரம் நீட்டி அழைக்கிறார் நம் அம்மா. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கொருமுறை வரும் அவதாரமானது, நம்மை யெல்லாம் வழிநடத்திக் கரைசேர்ப்பதற்காக அம்மா எனும் தெய்வமாக வந்திறங்கி தொண்டு, தர்மம், தியானம், மௌனம், பக்தி, வழிபாடு போன்ற வழிமுறைகளை அன்னை கூறுகிறாள்.
அந்த வகையில் இதயத்தில் உள்ள இருளைப் போக்க அணியும் இருமுடி விரதமான, இருமுடி சக்தி மாலை அணியும் விழா 04.01.13 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு விம்பிள்டன் மன்றத்தில் நடைபெறுகின்றது.
இதில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் கலந்துகொள்ளலாம். விதிமுறைகளை முன்கூட்டியே மன்றத்துடன் தொடர்பு கொண்டு அறிந்துகொள்ளவும்.
பூசை நேரங்கள்:
வெள்ளிக்கிழமைகளில் மாலை 6 மணி தொடக்கம் 10 மணி வரை, மற்றும் அமாவாசை பௌர்ணமி தினங்கள்.
அம்மாவின் அருள்வாக்கு:
ஐம்புலன்களை அடக்கத்தான் விரதம். விரதம் இருந்தால்தான் நோய் வராது. உடலில் சேர்கிற அழுக்கைக் குளித்துப் போக்கிக்கொள்வது போல, துருப்பிடித்த பொருட்களை எண்ணெய் கொண்டு சுத்தப்படுத்துவது போல, உள்ளத்தில் ஏற்படும் அழுக்குகளை நீக்கிக் கொண்டு தூய்மையாக வாழ்வதற்கு விரதங்கள் உதவும்.
Merton Hall, 78 Kingston Road, Wimbledon, London, SW19 1LA Near: South Wimbledon Station ]]>