இருமுடி என்பதற்கு இருள்முடி என்று பொருள். இதயத்தில் உள்ள இருளைப் போக்க அணியும் முடி என்று பொருள். கணவன், மனைவி இருவரின் அகத்தோற்றத்தையும் முடி போடுவது என்று பொருள். மற்றும் மனிதனின் அகமும், புறமும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதையும் இருமுடி குறிக்கும்.

 



என்னிடம் வரமுடியாதபடிப் பல தடைகள் வரும். அவற்றையும் மீறிக்கொண்டு வரவேண்டும். அப்போது என் அருள் உண்டு.இருமுடி எடுத்து வருகிறவன் தன் தலையில் உள்ள இருமுடியை ஒரு கையால் பிடித்துக் கொண்டு மற்றவன் தலையில் இருமுடியை எடுத்து வை! உன் தலையெழுத்தையும் பிடித்துக் கொள்! அவனுடைய தலையெழுத்தையும் எடுத்து வை!

உன் உள்ளத்தில் உள்ள அழுக்கு, உன் குடும்பத்தில் உள்ள அழுக்குகளை நீக்கிக் கொள்ளவே இந்த இருமுடி! ஒழுக்கம், கட்டுப்பாடு இன்றி நீ செலுத்தும் இருமுடியால் பயனில்லை.

இருமுடி அணியும் பொழுது குறைந்தது ஒரு நிமிடமாவது தன்னை மறந்து சந்தோஷமாக இருக்க வேண்டும்.

பிறந்ததிலிருந்து இன்று வரை நீங்கள் வந்த பாதையைத் திரும்பிப் பார்க்க வேண்டும்.

இருமுடி செலுத்துவதற்கு முன்பாக ஆலயத்தில் அரை மணிநேரமாவது மனதை ஒரு முகப்படுத்தி இருக்க வேண்டும். அதுவும் முடியவில்லையென்றால்  கருவறைக்கு முன் அரை நிமிடமாவது மனதை ஒரு முகப்படுத்தினால் கூட அவர்களுக்கு இருமுடிப் பயனை நான் தருகிறேன் (1999-ம் ஆண்டு கூறியது)

உங்கள் குறைகளைப் போக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு மௌனமாக வரிசையில் வர வேண்டும்.

இருமுடி பிரிக்கும் போது பிரிப்பவர்களும் மௌனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். இருமுடி அபிடேகம் செய்யும் போதும் மௌனத்தைக் கடைப் பிடிக்க வேண்டும்.

கருவறையில் வாயிற்படியை மறைக்காமல் நின்றபடி அபிடேகம் செய்ய வேண்டும்.

இங்கே செய்ய வேண்டிய தொண்டுகளையெல்லாம் செய்து முடித்த பிறகு குறைந்நது பத்து நிமிடமாவது தியானம் இருக்க வேண்டும்.

பின்னர் அம்மாவின் சந்நிதி முன்னால் ஓம்சக்தி மேடை அருகே ஒரு நிமிடம் அமர்ந்துவிட்டு எழுந்து செல்ல வேண்டும். இவை அன்னையின் அருள்வாக்கு.

சித்தர் பீடம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை இருமுடி செலுத்த வரும் பொழுது சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

சக்தி மாலை அணிந்து கொண்டு வருகிறபோது தொண்டும் செய்ய வேண்டும்.  ஒரு பத்துப் பைசாவாவது தருமம் செய்ய வேண்டும். அன்னதானம் செய்ய வேண்டும். ஏதோ நன்கொடை கொடுத்தால் மட்டும் போதாது.

ஏதோ செவ்வாடை அணிந்து விட்டோம், இருமுடியும் செலுத்தி விட்டோம், நம் கடமை முடிந்து விட்டதென்று நினைத்துக் கொள்ளக் கூடாது. எதையும் உண்மை உணர்வோடு செய்தால் தான் பலன் கிடைக்கும். 

ஏழை எளிய மக்களிற்கு சக்தி மாலை அணிவித்து இருமுடி போட்டு அழைத்து வருகிறபோது உங்களுக்கும் பயன் உண்டு. அவர்களுக்கும் பயன் உண்டு.

அடிகளாரைக் குருவாக ஏற்று பாதபூசை செய்து குரு காணிக்கை சமர்ப்பித்து குரு ஸ்தானத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து இருமுடியை சிறப்பாக செய்ய வேண்டும்.

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here