தினமும் அன்னையை வணங்கும்போது அன்னையிடம் என்ன வேண்டிப் பிரார்த்தனை செய்யவேண்டும்?
நம் குருவை வழிபட்டு மந்திரம் சொல்லவும்.
மூலமந்திரம் சொல்லும் போதே அன்னையின் கருவறையில் நிற்பதுபோல மனக் கண்ணில் கொண்டு வாருங்கள். அங்கே அடிகளார், அம்மா,சுயம்பு மூன்றையும் கொண்டு வந்து நிறுத்துங்கள்.
அடிகளார் கருவறை எதிரே பாதபூசை செய்கிற காட்சிகளை பார்த்திருக்கின்றீர்கள் அல்லவா? அந்தக் காட்சியை மனக்கண்ணில் கொண்டு வந்து நிறுத்தி மூலமந்திரம் சொல்லுங்கள்
கிழ்க்கண்ட முறையில் அன்னையைப் பிரார்த்திப்பது அன்னைக்கு மிகவும் பிடித்தமானதாகும்.
1). எல்லையில்லாத கருணைக் கடலே! தாயே! பராசக்தி! நீ எங்கள்மீது காட்டி வருகிற எல்லையில்லாத அன்புக்கு எங்களது இதயங்கனிந்த நன்றிகள் உரித்தாகுக!
2). எங்களை முழுமையாக உன்னிடம் அர்பணித்துவிட்டோம். உன் விருப்படி எங்களை வழிநடத்து!
3). எக்காலத்தும், எவ்வித தடையுமின்றி, ஒருமுகச் சிந்தனையுடன் உன்னை நன்கு வழிபடவும், தருமம் செய்யவும், தொண்டு செய்யவும், தியானம் செய்யவும் எங்களுக்கு ஆற்றலைக் கொடு!
4). நின்னருளை எங்களுக்குத் தந்தருள்க! அவ்வருள் என்றென்றும் எங்களுள் நிலைத்திருக்க அருள்புரிக!
5). ஓம்! சக்தியே! எல்லா ஜீவராசிகளும் நலம்பெற வேண்டும் ஓம்சக்தியே!.
ஓம்! சக்தியே! எல்லா ஜீவராசிகளும் வளம்பெற வேண்டும் ஓம்சக்தியே!.
ஓம்! சக்தியே! எல்லா ஜீவராசிகளும் வளமுடன் நலம்பெற வேண்டும் ஓம்சக்தியே!6). ஓம் தீயன செய்யினும் பொறுப்பாய் போற்றி ஒம்!
ஓம் தாயாய் இருந்தெமைக் காப்பாய் போற்றி ஓம்!
ஓம் மனமாசைத் துடைப்பாய் போற்றி ஓம்!
ஓம் நிம்மதி தருவாய் போற்றி ஓம்!
ஓம் நித்தமும் காப்பாய் போற்றி ஓம்!
ஓம் நேரமும் ஆள்வாய் போற்றி ஓம்!
ஓம் பத்தினி பணிந்தோம் போற்றி ஓம்!
ஓம் பாரமேஉனக்கே போற்றி ஓம்!
ஓம் எல்லாம் நின்செயல் போற்றி ஓம்!(மேற்கண்ட பிரார்த்தணைகளை – தினமும் மூன்று முறை சொல்லவும். காலையில் எழுந்தவுடன் ஒருமுறை. குளித்து முடித்த பின்னர் அன்னயை வணங்கும்போது ஒருமுறை, இரவு தூங்குவதற்கு முன்பு ஒருமுறை.)
7). எந்நேரமும் மனதில் உச்சரிக்க வேண்டிய பிரார்த்தைனை:
“ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா”
தியானம்: தினமும் 40 நிமிடம் – ஒருவேளை அல்லது இருவேளைகளில்
காலை 20 நிமிடம்
மாலை 20 நிமிடம
ஒருமுறைக்கு இருமுறை இந்தச் சங்கல்பங்களைப் படியுங்கள்!
இன்றைய நாட்டு நடப்பு,உலக நடப்புக்கு இந்தக் கோரிக்கைகளின் அவசியம் எவ்வளவு முக்கியம் என்பது தெரியும் அவற்றின் ஆழமும் புரியும்
]]>