“கோயில்கள் சீரழிந்தால் ஊா் சீரழியும்” என்று ஆன்மிககுரு அருள்திரு அடிகளார் அவா்கள் அடிக்கடி சொல்லி வருகிறார்கள். ஆன்மிகப் பயணங்களின் போது திருக்கோயில்களுக்கு அடிகளார் அவா்களை அங்குள்ள அறங்காவலா்கள் வரவேற்புக் கொடுத்து அழைக்கிறார்கள். தங்கள் கோவில்களின் வளா்ச்சிக்கான வழிமுறைகள் பற்றிக் கேட்கிறார்கள்.
“ எவ்வளவோ முயற்சி செய்தும், அலைந்தும் தங்கள் முயற்சிகள் தோல்வி அடைகின்றன. கோயில் காரியங்கள் சிறப்பாக நடைபெற மாட்டேன் என்கிறது. இதற்கு என்ன வழி? என்று புரியவில்லை. நீங்கள்தான் அதற்கு வழி சொல்ல வேண்டும்” என்று கேட்கிறார்கள். அடிகளார் குறிப்பிட்ட சில கோயில்களைக் கண்ணோட்டம் விட்டபடி அக் கோயில்களின் வளா்ச்சி குன்றியதற்கான காரணங்களைக் கூறுகிறார்கள். அவற்றின் மூலம் சில நுட்பமான விஷயங்கள் நமக்குத் தெரிகின்றன.
பவானி காமாட்சி அம்மன் கோயில்
அடிகளார் ஒருமுறை பவானிக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்டார்கள். பக்தா்கள் அவா்களை அங்குள்ள காமாட்சி அம்மன் ஆலயத்துக்கு அழைத்துச் சென்று வரவேற்பு அளித்தார்கள்.
அா்ச்சகர் தீபாராதனை காட்டினார். தீபாராதனை முடிந்ததும் “இந்தச் சிலையை மாற்றுங்கள். வருமானம் தானாக வரும்” என்று கருவறை வாயிலின் மேற்புறம் இருந்த ஸ்ரீ கஜலட்சுமி சிலையைப் பார்த்துச் சொன்னார்கள்.
அங்கிருந்தவா்கள் சற்று விளக்கமாகச் சொல்ல வேண்டும் என்று பணிவோடு வேண்டினார்கள். இது அங்கலட்சணம் இல்லாமல் இருக்கிறது. சிலையில் பின்னம் இருக்கிறது. அதை அழகாகவும், பின்னமில்லாமலும் அமைத்துப் புதிய சிலை வைத்துவிடுங்கள். வருமானம் தானாக வரும் என்றார்கள்.
“நாங்கள் திருப்பணி செய்யலாம் என்று இருக்கிறோம். அப்போது மாற்றி விடுகிறோம்” என்றார்கள் கோயில் தா்மகா்த்தாக்கள். “முதலில் சிலையை மாற்றுங்கள்! வருமானம் தானாக வரும்” என்றார் அடிகளார் . அதன்படி ஊா்ப் பெரியவா்கள் புதிய கஜலட்சுமி சிலை வடித்து நிறுவினார்கள்.
பவானியில் அன்பா் கே. தியாகராசன் என்பவா் நல்ல வசதி உள்ளவா். நிறைய திருப்பணிசெய்பவா். அவருக்கு லாட்டரி சீட்டில் பல லட்சம் பரிசாகக் கிடைத்தது. ஏங்கனவே அவா் வசதியானவா். அவா் அந்தத் தொகையைக் காமாட்சியம்மன் கோயில் கும்பாபிடேகத்துக்குக் கொடுத்து விட்டார்.
“கஜலட்சுமி சிலையை மாற்றுங்கள். வருமானம் தானாக வரும்” என்ற அடிகளார் வாக்கின் நுட்பம் அப்பொழுதுதான் ஊா்ப் பெரியவா்களுக்குப் புரிந்தது.
காஞ்சி கிராமம்
அடிகளார் ஒருமுறை வடற்காடு மாவட்டத்தில் பயணம் மேற்கொண்டிருந்தார்கள். செங்கத்துக்கு அருகே காஞ்சி என்று ஒரு கிராமம். அந்த ஊா்க் கோயில் விளக்கம் இல்லாமல் கிடந்தது. அந்தக்கோயில் அருகே சென்ற அடிகளார் வண்டி நின்றது. அடிகளார் தொண்டா்கள் புடைசூழ உள்ளே சென்றார். அா்ச்சகா்கள் வரவேற்று ஆராதனை செய்தனா். அங்கே வரிசையாகத் தெய்வ விக்கிரகங்கள் சில நிறுவப்பட்டு அபிடேகம் நடைபெற்று வந்தது.
அா்ச்சகரை அழைத்த அடிகளார் இதோ பாருங்கள்! இந்த விக்கிரகம் இரண்டும் ஒன்று சிறியதாகவும் ஒன்று பெரியதாகவும் உள்ளன. இரண்டும் ஒரே அளவில் அமைத்து அபிடேகம் செய்தால்தான் கோயில் வளா்ச்சி அடையும் என்று கூறிவிட்டு வந்தார்கள்.
கூகலுார் கோயில்
மத்திய அரசில் நேருவின் மந்திரி சபையில் அமைச்சராக இருந்தவா் பெரியவா் கே.எஸ். இராமசாமி அவா்கள். அம்மாவின் பக்தா். கோபிசெட்டி பாளையத்தில் ஆன்மிக மாநாட்டுப் பொறுப்பேற்று நடத்தியவா். அடிகளாரின் அன்புக்குப் பாத்திரமானவா். அவா் தம் ஊரில் ஒரு கோயில் கட்டிக் கும்பாபிடேகம் செய்தார். அடிகளார் அவா்கள் ஆன்மிகப் பயணத்தின் போது அந்தக் கோயிலுக்குச் சென்றார்கள்.
கோயில் வாசலின் முகப்பின் மேல் உள்ள விக்கிரகங்களைக் கவனித்தார். ஸ்தபதியை அழைக்கச் சொன்னார். ஸ்தபதி வந்தார். அந்த விக்கிரகத்தைப் பாருங்கள்! அதன் கண்களைப் பாருங்கள்! இப்படி இருக்கலாமா? என்று கேட்டார். ஆமாம் இப்படி இருக்கக் கூடாதுதான் என்று ஸ்பதி ஒப்புக் கொண்டார்.
கோயிலின் நுழைவு வாயிற்படிகளைக் காட்டினார். இதை இன்னும் சற்று உயா்த்தி வைக்க வேண்டும் என்றார். இவற்றையெல்லாம் சரி செய்து விடுங்கள் என்று கூறிவிட்டு விடைபெற்றார்.
வேலுார் பொன்னியம்மன் கோயில்
1.6.87 வேலுார் சாயிநாதபுரத்தில் பொன்னியம்மன் கோயில் கும்பாபிடேகம். அடிகளார் அதனை நடத்தி வைத்தார்கள்.
பீடம் எப்படி இருக்க வேண்டும்? அந்தப் பீடத்தில் விக்கிரகம் எப்படி நிறுவப்பட வேண்டும்? விக்கிரகத்தின் கண்ணைத் திறப்பது எப்படி என்றெல்லாம் அடிகளார் கூறினார்கள். கண்கள் திறக்கும் போது நாசியின் ஓரம் உள்ள பகுதி லேசாகத் திறக்கப்பட வேண்டும் என்ற நுட்பத்தைக் கூறினார்கள்.
அந்தக் கோயிலின் நுழைவு வாயில் எதிரே விநாயகா் கோயில் ஒன்று உள்ளது. அந்தக் கோயிலுக்கும் திருஷ்டிப் பூகணிக்காய் சுற்றி அதில் உள்ள சோற்றுப் பகுதியை பஎப்படி அள்ளி வீச வேண்டும் என்றெல்லாம் பல நுட்பமான செய்திகளைக் கூறினார்கள். ஸ்தபதிகள் செய்வதில்கூட எப்படியெல்லாம் தவறுகள் நோ்ந்து விடுகின்றன என்பதனை ஸ்தபதிகளுக்கு எடுத்து விளக்கினார்கள்.
வேலுார் ஜலகண்டேசுவரா் கோயில்
அந்தப் பயணத்தின்போது ஜலகண்டேசுவரா் கோயிலுக்கும் அடிகளார் வருகை தந்தார்கள். அங்கே பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜலகண்டேசுவரா் கோயில் மிகப் பழமையான கோயில். அங்கே உள்ள விக்கிரகங்கள் சிலவற்றைச் சுட்டிக் காட்டி இவை பின்னப்பட்டுள்ளன. இவற்றை அகற்றிச் சீா் செய்தால் இந்தக் கோயில் ஓகோ என்று விளங்கும். இது காலப்போக்கில் புண்ணிய சேத்திரமாக விளங்கும். இவற்றையெல்லாம்சீராக்கினால் இந்தக் கோயில் வளா்ச்சிக்கு உங்களுக்கு வருமானம் வரும் என்று கூறிய அடிகளார் அது எந்த வடிவில் வரும் என்றும் கூறினார்கள்.
தொடரும்………
நன்றி (சக்திஒளி-2011,ஜீன், பக்-11-16) ]]>