என் நண்பா் ஒருவா் வழக்கறிஞா். அம்மாவின் ஆரம்பகால பக்தா்களில் அவரும் ஒருவா்.

எந்த வழக்களுக்கு வாதாடப் போனாலும், கேஸ் கட்டுக்களை எடுத்துக் கொண்டு காரில் வருவார். கருவறையில் சுயம்புவுக்கு முன்னே வைத்து தீபாராதனை செய்வார். அம்மா எதிரில் வைத்த எலுமிச்சம் பழம் ஒன்றைக் கோட்டுப் பாக்கெட்டில் எடுத்து வைத்துக் கொள்வார்.

கூண்டுக்குள் இருக்கும் சாட்சிகளை விசாரிக்கும்போது, மிகச் சாமாரத்தியமாகக் குறுக்குக் கேள்வி கேட்கும்போது, கோட்டுப் பாக்கெட்டில் உள்ள எலுமிச்சம் பழத்தைக் கையால் உருட்டியபடியே குறுக்குக் கேள்வி கேட்டு மடக்கி, தன் பக்கம் சாதகமாக்கிக் கொண்டு வழக்குகளை ஜெயித்து வந்தார்.

ஒரு முறை முக்கியமான வழக்கு விசாரணை வெளியூர் சென்று திரும்பிய அவசரத்தில் மருவத்தூர் வரமுடியவில்லை. அவசரஅவசரமாக வீட்டிலிருந்து கிளம்ப வேண்டியதாயிற்று. அவங்க ஊா் ரயில்வே ஸ்டேஷன் அருகே ஒரு அம்மன் கோயில்! இதுவும் நம் அம்மா தானே! இவளும் நம் ஆதிபராசக்தி தானே… என்று சமாதானப் படுத்திக் கொண்டு அம்மன் எதிரே கேஸ் கட்டை வைத்துத் தீபாராதனை செய்யச் சொல்லி, அம்மன் எதிரில் இருந்த தட்டில் வைத்த எலுமிச்சம் பழத்தை அர்ச்சகரிடம் கேட்டு வாங்கிக் கொண்டு, நீதிமன்றம் சென்றார்.

சாமா்த்தியமாக வாதாடியதாகத்தான் இவா் நினைப்பு! ஆனாலும்…. அந்த வழக்கில் இவருக்குத் தோல்வி. அருள்வாக்கில் உரிமையோடு சண்டை போடுகிறவா் அவா்!

“அம்மா! எல்லா வழக்கிலும் எனக்கு வெற்றியே கொடுத்து வந்த நீ இந்த முறை என்னை ஏமாற்றி விட்டாயே…. இது நியாயமா…?” என்று கேட்டார்.

“நீ என் உத்தரவு பெற்றா வழக்காடினாய்?” என்று அம்மா கேட்டாள். என்னிடம் வராமல் நீ வேறு .இடம் சென்றாய்! இதற்கு நானா பொறுப்பு? என்று அம்மா திரும்பக் கேட்டாள்.

அங்கிருக்கும் அம்மனும் நீதானே? என்று இவா் மடக்கினார்.

சுயம்பான என் முன் வந்து வேண்டிக் கொண்டு சென்ற போது உனக்கு வெற்றி கிடைத்தது.

என்னுடைய கோடிக் கணக்கான கூறுகளில் ஒன்றான அவளிடம் சென்று வேண்டியபோது உனக்கு வெற்றி கிடைக்கவில்லை.

இதிலிருந்தே எனக்கும் அவளுக்கும் உள்ள வித்தியாசம் புரியலையாடா மகனே? என்றாளாம் அன்னை.

இதைப் படிக்கிற வக்கீல்கள் “அட! நாமும் இதே உத்தியைக் கையாளலாமே!” என்று நினைத்து விடாதீா்கள்.

அன்றைய நிலையில் அந்த ஆன்மாவுக்கு நம்பிக்கை ஏற்படவும், தன்னிடம் உறுதியான பக்தி வரவும் அம்மா காட்டிய சலுகை அது! உங்களுக்கும் அதே பாணியில் வெற்றி கொடுப்பாள் என்று எதிர்பார்ப்பது கூடாது!

ஒவ்வொரு ஆன்மாவையும் அம்மா ஈா்த்துப் பணி கொள்கிற முறைகள் வேறு! வேறு!

இதையெல்லாம் ஏன் எழுத வேண்டி இருக்கிறது தெரியுமா…?

சாபம் பலிக்குமா… என்ற இக்கட்டுரைத் தொடா் நாடி சோதிடம் கேட்க வேண்டும் என்ற ஆா்வத்தைத் தூண்டுகிறது என்று சிலா் குற்றம் சாட்டுகிறார்கள்!

“மனத்தை ஒரு தெய்வத்திடம் வை” – என்கிறாள் அன்னை.

“என்னிடம் வந்து விட்டு அங்கே இங்கே அலையாதே!” என்கிறாள் அன்னை.

“முழுவதுமாக என்னைச் சரண் அடைந்து விடு! உள்ளன்போடும், உண்மை உணா்வோடும் நான் சொல்லும் தொண்டுகளைச் செய்து கொண்டு வா!” என்று சொல்லிக் காட்டுகிறாள்.

அம்மாவின் இந்த அவதார காலத்தே தரிசித்து அனுபவித்த நிகழ்ச்சிகளுள் இவை ஒரு சில!

நன்றி!

ஓம் சக்தி!

மு. சுந்தரேசன், எம்.ஏ., எம். ஃபில்., சித்தா்பீடப் புலவா்

சக்தி ஒளி, ஜுலை 2005, (பக்கம் 27 – 28)

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here