ஒரு சித்தா் சொன்னவை

பழனிக்குச் சித்தன் வாழ்வு என்ற பெயா் உண்டு.

இன்று சித்தா்களின் மரபில் வந்த சித்தா் மூட்டைச் சுவாமிகள்! கல்லூரிச் சாலையில் ஒரு பித்தனைப் போல் நடமாடிக் கொண்ருக்கிறார்.

இவருக்குப் பழனிச்சாமி! பழனியப்பா எனும் பல பெயா்களும் உண்டு. இருப்பினும் “மூட்டைச் சுவாமிகள்” என்றே பலரும் அழைப்பர்.

பல் துலக்குவது, குளிப்பது போன்ற நித்திய கருமங்களை அவா் செய்வதில்லை. திடீா் என்று சேற்றுத் தண்ணீரில் துணிகளை நனைத்தெடுத்து, தண்ணீரில் மூழ்கி எழுந்து, நன்றாகக் குளித்துவிட்டு வந்தேன் எனக் கூறுவார்.

ரோட்டில் போவோர் வருவோரிடம் சாமி! ஒரு பத்து பைசா கொடுங்க! என்று கேட்டு வாங்குவார்.

முட்புதரில் படுத்து உறங்குவது போன்று பாவனை செய்வார்.

பழைய சாக்கு மூட்டை ஒன்றை இடது தோளில் எப்பொழுதும் தூக்கிச் சுமந்து கொண்டே இருப்பார். அந்த மூட்டையில் பழைய பேப்பா், துணி மணிகள் மட்டுமே இருக்கும். வலது கையில் ஒரு குச்சியை வைத்திருப்பார்.

ஒரு முறை ஓா் அன்பா் சாமிகளிடம் சக்தி இருக்கிறதா? என்று பார்க்கலாம் என்று கருதி,  சுவாமிகளிடம் போய், சாமி வாங்க! டீ சாப்பிடலாம் என்று அழைத்தார்.

அதற்குச் சாமி நீங்களும் வாங்க சாமி! என்று அழைத்துக் கொண்டு டீக்கடைக்குச் சென்று இரண்டு டீ போடச் சொல்லி, ஒன்றைத் தானும் மற்றொன்றை உடன் வந்த அன்பரையும் குடிக்கச் சொன்னார்.

டீ குடித்து முடிந்ததும், மீண்டும்  டீ வரவழைத்துத் தானும் குடித்து, உடன் வந்த அன்பரையும் குடிக்கச் சொன்னார்.

பிறகு மீண்டும் 2 காபியை வரவழைத்துத் தானும் குடித்து, உடன் வந்த அன்பரையும் குடிக்கச் சொன்னார். உடன் வந்த அன்பருக்கு, 2 டீ 1 காபி சாப்பிட்டவுடன் வயிறு நிறைந்து விட்டது.

சாமிகள் இதோடு விடவில்லை. அடுத்த கடைக்கு அழைத்துச் சென்று 2 சோடா வாங்கித் தானும் குடித்து, உடன் வந்தவரையும் குடிக்கச் சொன்னார்.

உடன் வந்தவா், சாமி நம்மை விட்டால் போதும் ஓடி விடலாம் என்று நினைத்தார். ஆனால் சாமி அவரை அழைத்துக் கொண்டு, அடுத்துள்ள கடைகளில் டீ, காபி, சோடா என்று வாங்கிக் குடித்துக் கொண்டே உடன் வந்த அன்பரிடம் பேசிக் கொண்டே வந்தார்.

அன்று சாமிகள் குடித்த டீ, காபி, சோடா ஆகியவற்றைக் குடித்துத் தான் சாதாரணமானவன் அல்ல என்பதை அன்று வந்த அன்பருக்குத் தெளிவு படுத்தினார்.

சாதாரணமாகச் சுவாமிகள் பேசுவது யாருக்கும் புரியாது.

எங்கள் வீட்டு அலமாரியில் உள்ள புத்தகங்களையெல்லாம் தொட்டுப் பார்த்துவிட்டு. அவா் கூறிய வாசகங்களாவன,

இதெல்லாம் புத்தகங்கள் வயித்துக்காகுமா? இதெல்லாம் நீயே படி! நமக்கு (எனக்கு) ஆகிறது ஒண்ணுமில்லே..

தொண்டையிலிருந்து சாப்பாடு குடலுக்கு போகிறதுக்குள்ளே அவனவன் 5 லட்சம், 6 லட்சம் சம்பாதிக்கணும்னு ஆசைப்படறான்!

அந்த நேரத்தில் கொடைக்கானலில் இருந்து வந்த ஒரு அன்பரைப் பார்த்து, “சாமி! எனக்கு எலும்புத் தண்ணி சுண்டிப் பொச்சு! உனக்குச் சுண்டுச்சா…? போ சாமி போ! உருப்படற வாழியைப் பாரு!”

அவா் நான்கு நாட்கள் எனது இல்லத்திலே இருந்தார்.

ஆற்றல் மிக்க அவா், அருள்திரு அடிகளார் அவா்களைப் பற்றிக் கூறிய ரகசியங்கள் பிரமிப்பு ஊட்டுவன.

சித்தா்களின் தலைவராகிய அருள்திரு அடிகளார் அவா்களைப் பற்றிய செய்தியை, ரகசியத்தை சித்தா் ஒருவா் கூறுவது நமக்கு அம்மா அருளிய கொடையாகும்.

ஒருநாள் மிக அவசரமாக எங்கள் வீட்டிற்குள் வந்தார். முன் அறையில் உள்ள நாற்காலியில் அமா்ந்தார். எங்கள் வீட்டு முன் அறையில் அருள்திரு அடிகளார் படம் மட்டும் மாட்டியுள்ளோம்.

அதற்குப் பூ வைக்கப்பட்டிருக்கும். மூட்டை சுவாமிகள் வீட்டிற்குள் வந்ததும், தெருக் கதவைச் சாத்திவிடுமாறு கூறினார். அவ்வாறே செய்தேன்.

அருள்திரு அடிகளார் படத்திற்கு (நேராக) முன்னால் அமா்ந்து கொண்டார். நான்கு மணி நேரம் யாரிடமும் எதுவும் பேசவில்லை.

பிறகு சொன்னார்…

“இந்தப் படத்திலிருந்து (அடிகளாரின்) தான் எனக்கு சக்தி வருது சாமி! தெருக்கதவைச் சாத்து! யாரையும் உள்ளே விடாதே! படத்திலிருந்து சார்ஜ் ஏத்திக்கணும்!

படத்தில் இருக்கிற பராசக்தியோட பேசணும்!

ஒண்ணு சைபா் சைபா் எட்டு வருஷம் (1008) கழிச்சு இங்க வந்து சக்தி வாங்கிக்கச் சொன்னார் குருநாதா்! வாங்கிக்கிறேன். அப்புறம் எத்தனை வருஷம் ஆகுமோ… தெரியாது…”

14.01.92, 15.01.92,16.01.92,17.01.92 ஆகிய 4 நாட்களும் படத்திற்கு எதிரே உட்கார்ந்து ஏதேதோ பேசிக் கொண்டே இருந்தார் சுவாமிகள்.

15.01.92 மாலை 4.00 மணிக்குச் சுவாமிகள் என்னிடம் கூறியது

“சாமி! இந்தப் படம்தான் (அடிகளார் படத்தைக் காட்டி) நேத்துப் பேசிச்சு! இன்னிக்கும பேசுது! நாளைக்கும் பேசும்! விட்டுறாதே”

“சாமி! இவா்தான் என்னைச் சித்தன் ஆக்கினவரு!”

சாமி! இவா்தான் என்னைப் பறவையாய் மாற்றினார். என்னைக் கரடியாய் மாற்றினார். கபாடபுரத்திலே மரமாக மாற்றினார். என்னென்னவோ ஆகிப் போச்சு சாமி!

“அஞ்சு பூதமும் (ஐந்து பூதம் – பஞ்ச பூதம்) இவா் சொன்னா கேட்கும் சாமி! மழை பெய்யென்றால் பெய்யும் சாமி!

எங்களுக்கெல்லாம் குருநாதா் இவா்தான்! இவருக்கு நான் பாதபூசை செஞ்சிருக்கேன். நீ எனக்குப் பாதபூசை செய்வியா…?

“சாமி எல்லா அவதார காலத்திலேயும் என்னைக் குருநாதா் சுற்றச் சொல்கிறார். சுத்திகிட்டே வா்றேன். இது என்ன அவதாரம் (அடிகளார் அவதாரம்) என்று உனக்குத் தெரியாது. எனக்குத் தெரியும். இது கடைசி! உலக ஷேமத்துக்கு வந்த அவதாரம்! அதுக்கு மேலே சொல்லக்கூடாது.

“நல்ல தண்ணி ஓடையிலேயே என்னைப் புல்லாய் இருக்கச் சொன்னார் இவா்தான் சாமி!

பொருட்காட்சிப் பருவத்திலே இருக்கிறவங்களுக்கெல்லாம் இந்தப் படம்தான் சாமி வழிகாட்டும்.

(பொருட்சாட்சிப் பருவம் என்பது சித்தா் பாஷையில் கழுதைப் பருவம் என்பதாகும். கழுதையைப் பொருட்காட்சி என்றுதான் சித்தா் மூட்டைச் சுவாமிகள் கூறுவார்)

“சாமி! (வயிற்றைத் தடவிக் கொண்டு) பெரிய இடத்து விவகாரத்தில் இருக்கிறவனுக்கு ஞானம் வராது. படம் பேசாது. சின்ன இடத்து சமாச்சாரத்துக்கு வரணும்.” (சின்ன இடம் என்பது புருவ நடுவைச் சுட்டிக் காட்டிக் கூறியது)

சின்ன இடத்திலே நின்னா படம் பேசும் சாமி!

சாமி! படத்துக்கு முன்னாடி நின்னு வாய்ப்பூட்டு போட்டுக் கிட்டவனுக்குத் தலைப் பொட்டு திறக்கும் சாமி!

(அதாவது மௌனமாகத் தியானம் செய்தால் ஞானம் கிடைக்கும் என்பதாகும்.

உங்களுக்கெல்லாம் இந்தப் படம்தான் சாமி (அடிகளார் தான்) வழிகாட்டும், படத்திலே இருக்கின்ற குரு  சாமியைக் கும்பிட்டு உருப்படற வழியைப் பாருங்க!

எதுக்கும் எங்கிட்ட வந்திராதீங்க… குருசாமிகிட்ட போங்க! எல்லாருக்கும் “பவா் அங்கிருந்து தான் வருது!

அருள்திரு அடிகளார் படத்திற்குக் கீழே நீளமாக பெஞ்ச் போடப்பட்டுள்ளது. அதற்கு மஞ்சள் நிற பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது. அதைப் பார்த்துச் சுவாமிகள் கூறியது

“சாமி! ஒரு புதிய சிவப்புத் துணியைக் கொண்டு வா!” என்றார்.

புதிய செவ்வாடை வேட்டியைக் கொடுத்தேன்.

(இன்றுவரை அதனைச் சுவாமிகள் போர்த்திக் கொண்டுள்ளார்கள்)

சாமி! சிவப்பு பாதுகாப்பு! சாமி! சிவப்பு போட்டுக்கிட்டு தான் குருசாமியைக் கும்பிடணும். இந்த பெஞ்ச் மேலே மஞ்சள் பெயிண்ட் அடிச்சிருக்கு! அதை மாத்தி மிளகாய்ப் பழக்கலா் (சிவப்பு) அடி சாமி! சிவப்பைப்பத்தி உனக்கு ஒண்ணும் தெரியாது. சிவப்பு வரவு சாமி! மத்ததெல்லாம் செலவு!

ஆகாயத்திலே உள்ளவங்க எல்லாம் செவப்பு போட்டுக் கிட்டுத்தான் குருசாமியைக் கும்பிடறாங்க.

அந்தச் சமயம் பார்த்து, “சக்தி ஒளி” புத்தகத்தைப் பற்றித் தவறாகப் பேசிய நபா் ஒருவா் வீட்டிற்கு வந்தார்.

அவரைப் பார்த்துச் சுவாமிகள் கூறியது

சாமி! இங்கே வா! ( வந்தவரிடம் சக்தி ஒளி – விளக்கு 10, மார்கழி மாதம் பத்திரிகையைக் காட்டி), இது என்ன புத்தகம் தெரியுமா..? இதனுடைய விவகாரம் உனக்கெங்கே புரியப் போகிறது? இந்தப் புத்தகத்திற்கு உன் கையாலேயே அட்டையைப் போடு! இதைப்படி!

(அவ்வாறே அந்தப் புத்தகத்திற்குப் பய பக்தியுடன் அட்டையைப் போட்டார்)

மறுநாள் அதே நபா் வந்த பொழுது…

என்ன சாமி! புத்தகம் படிச்சியா? என்ன படிச்சே? பக்கம் 55 ஐ எடு! அதிலே என்ன எழுதியிருக்கு படி! என்றார்.

(படித்துக் காண்பிக்கப்பட்டது)

நம்மில் பொரும்பாலோர் கொண்டிருக்கும் பக்தியெல்லாம் பயன் கருதிய பக்தியே! இந்தப் பக்தி தூய அன்பான பக்தியன்று!

மேற்கண்ட வாசகங்களைக் குறிப்பிட்ட மூட்டைச்சுவாமிகள், பயன் கருதாத பக்தி வேண்டும் என்று வலியுறுத்தினார்.

“கீதையை எவ்வாறு படிக்கின்றாயோ, அவ்வாறே சக்தி ஒளியையும் படிக்க வேண்டும்” என்று மூட்டைச் சவாமிகள் கூறினார்கள்.

உன்னை உருக்கவும், உருவாக்கவும் உரிய ஆற்றல் உடையது சக்தி ஒளி!

படி! தினமும் படி!

உனக்குச் சொல்வதெல்லாம் சொல்லியாச்சு! கொடுப்பதையெல்லாம் கொடுத்தாச்சு! புரிஞ்சுக்கோ! அதன்படி நடந்துவா! என்றார்.

நன்றி!

ஓம் சக்தி!

சக்தி. பேராசிரியா். கண்ணன் எம். ஏ, பழனி

மருவூர் மகானின் 71வது அவதார மலா்

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here