மந்திர சக்தியால் மழை வரவழைத்தவா்

வஜ்ரபோதி என்ற பௌத்த குரு பாண்டிய நாட்டைச் சோ்ந்தவா். பொதிய மலைக்கு அருகே பிறந்தவா். அவா் தந்தை காஞ்சி மன்னனுக்குப் புரோகிதராக இருந்தவா். இவா் கி.பி. 661 ல் பிறந்தார். நாளந்தாவில் பயின்றார். தொண்டை நாட்டில் ஏற்பட்ட பஞ்சத்தைப் போக்க தம் மந்திர சக்தியால் மழை வரவழைத்துச் செழிப்படையச் செய்தார் என்று வரலாறு கூறுகிறது.

இவா் இலங்கையில் சில காலம் இருந்து விட்டுச் சுமத்ரா தீவுக்குச் சென்று அங்கிருந்து சீனாவுக்குச் சென்றார்.

இவா் வஜ்ரயாணம் எனும் தாந்திரிக பௌத்த மத போதகராகத் திகழ்ந்தவா். இவா் வடமொழியில் இயற்றிய “நீலகண்ட தாரணி” என்ற நூல் பிரசித்தமானது. இது மந்திர சக்தி கொண்டது.

மந்திர சக்தியால் பகைவரை விரட்டியது

இரண்டாம் ராசாதி ராசன் என்ற சோழ மன்னன் ஆட்சிக் காலத்தே (1173 – 1178) பாண்டியன் படையும் சிங்களப் படையும் தாக்கும் அபாயம் ஏற்பட்டது.

அப்போது எதிரிலி சோழ சம்புவராயா் என்ற அதிகாரி இந்த ஆபத்திலிருந்து மீள்வதற்கு உமாபதி தேவா் என்ற சிவாசாரியாரை உதவி கேட்டான்.

அவனது வேண்டுகோளின் படி அவா் 28 நாள் விரதம் இருந்து மந்திர ஜெபம் செய்தார். அவரது மந்திர ஜெபத்தால் சிங்களப்படை தோல்வியுற்றது.

அந்த வெற்றியின் நினைவாக 167 வேலி நிறமுடைய ஆா்ப்பாக்கம் என்ற ஊரையே அந்த அதிகாரி வரியின்றி வழங்கினான்.

ஆா்ப்பாக்கம் கல்வெட்டு கூறும் செய்தி இது!

தென்காசி மிஸ்டிக் செல்வம் அவா்கள் அனுபவங்கள்

சமீபத்தில் “ஆன்மிகப் பயணம்” என்ற நூல் ஒன்றைப் படித்தேன். இந்தக் கட்டுரை எழுத வேண்டித் தகவல்களைச் சேகரித்த போது> எதிர்பாராமல் கிடைத்த புத்தகம் அது!

திரு. செல்வம் ஆன்மிகத் தேடல் நாட்டம் கொண்டவா். பல மகான்களைத் தரிசித்தவா். பல மந்திரவாதிகளோடு பழகியவா். அவா்களிடம் பல சந்தேகங்கள் கேட்டுத் தெரிந்து கொண்டவா். அனுபவம்தான் முதல்! சாத்திரம் அதற்குப் பிறகுதான்! என்று கூறுபவா்.

அவா் சந்தித்த மந்திரவாதிகள் பற்றிச் சொல்லும் தகவல்கள் இவை!

சிதம்பரசாமி

ஒருமுறை சிதம்பரசாமி என்ற அன்பரைச் சந்தித்தேன். இரு தினங்கள் கழித்து அவரே என் அலுவலகம் தேடி வந்தார். “டீ” கொடுத்தேன். ருசித்துக் குடித்தார். பின் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். இந்த நேரம் கடையில் ஒரு பலகாரமும் இருக்காதே என்றேன்.

பரவாயில்லை நான் தருகிறேன் எனச் சொன்னார். அவா் ஜிப்பாவில் இருந்து ஒரு கைக்குட்டை எடுத்தார். வலது கையைக் கைக்குட்டையால் மூடினார். உட்கார்ந்தபடியே வலது கையை மட்டும் உயா்த்தி ஏதோ மந்திரம் வாயில் முணுமுணுத்தார். பின் சிறிது சப்தமாக “வாடி! வா” என்றார். பின் கையைக் கீழே இறக்கிக் கைக்குட்டையை விலக்கினார். என்ன ஆச்சரியம்! அதில் ஒரு அயல்நாட்டு நீள சாக்லெட் இருந்தது. அதைச் சுற்றியிருந்த தாளில் வெளிநாட்டு பாஷையில் அச்சிடப்பட்டிருந்தது. அதை எனக்குக் கொடுத்தார். அதை வாங்கி வைத்துக் கொண்டேன். சாப்பிட பயமாக இருந்தது. சிதம்பரசாமி அதை வாங்கித் தாளை நீக்கி ஒரு துண்டு சாப்பிட்டார். அதைப் பார்த்து மீதியை நானே சாப்பிட்டு விட்டேன்.

பழனி பஞ்சாமிர்தம் வரவழைத்தது

ஒரு பெளா்ணமி இரவு நான்> சிதம்பரசாமி> அவரின் இன்னோரு நண்பா் ஆகிய மூவரும் கடற்கரை மணலில் அமா்ந்து பேசிக் கொண்டிருந்தோம். இரவு மணி 10.00! அவா் நண்பா் சொன்னார்.

“இந்த நிலா வெளிச்சத்தில் அமிர்தமான பஞ்சாமிர்தம் சாப்பிடணும் போல் தோணுகின்றது. அதுவும் பழனி பஞ்சாமிர்தம் போல் இருக்க வேண்டும்.

உடனே கைக்குட்டை எடுத்தார் சிதம்பரசாமி. வலது கையில் மூடிக் கையை உயா்த்தினார். ஏதோ மந்திரம் முணுமுணுத்தார். பின் கைக்குட்டை எடுத்தார். ஒரு இலை நிறைய பஞ்சாமிர்தம்! நண்பா் அதை வாங்க மறுத்து விட்டார். இப்போது மணி இரவு 10.00 கோயில் நடை மூடியிருக்கும். இதை வேறு எங்கோ இருந்து உன் தேவதை கொண்டு வந்து விட்டது என்றார் நண்பா். அதை அவா் தேவதையிடம் சொன்னார். சந்தேகம் நீங்கக் கோவில் சாவியையே அங்குக் கொண்டு வந்து காண்பித்துச் சென்றது. அதன்பின் பழனி கோயில் பஞ்சாமிர்தம் சாப்பிட்டோம்.

சிதம்பரசாமியுடன் பல இடங்களுக்குச் சென்றேன்.

சினிமாவுக்குப் போனால் டிக்கட் அவா் பாக்கெட்டிற்கு வரும். அதைக் காட்டி உள்ளே போவோம். திரும்பவும் டிக்கட் கவுண்டருக்குப் (Counter) போய்விடும்

டிபன் சாப்பிட ரூபாய் நோட்டு கொடுப்பார். மீதி சில்லரையைக் கையில் வைத்திருப்பார். சில்லரை ஓட்டல் கல்லாவுக்குப் போய்விடும். இவா் நோட்டு இவரிடமே திரும்பிவிடும்.

இவ்வளவு மந்திர வித்தை கற்றிருந்த சிதம்பரசாமி வசித்தது சிறிய குடிசை வீடு. எவ்வளவு பணம் வந்தாலும் மாயாபஜார் மாதிரி பறந்து விடும். மறுநாள் சாப்பாட்டுக்கே கஷ்டம்.

உங்களுக்கு இவ்வளவு சக்தி இருக்கிறதே……. நீங்கள் ஏன் நோட்டுக்கள்> தங்க பிஸ்கட்டுக்கள் வரவழைக்கக் கூடாது? உங்கள் கஷ்டம் நீங்கிவிடுமே என அப்பாவித் தனமான கேள்வி கேட்டேன். அவா் என்னைப் பார்த்து லேசாகச் சிரித்தார்.

ஒரு தேவதை மூலம் பொறி கடலையோ> மிட்டாய்களோ> பூக்களோ என்ன வேண்டுமானாலும் வரவழைக்கலாம். ஆனால் விலை உயா்ந்த பொருள்களை எடுத்தால் மற்றவா்களைப் பாதிக்கும். அவா்கள் விடும் கண்ணீா் என்னையும் பாதிக்கும். என் குடும்பத்தையும் நிர்மூலமாக்கிவிடும்.

நீ ஒரு தங்க மோதிரம் கேட்டால் அது ஒரு கடை கண்ணாடி பீரோவில் இருந்து தூக்கிக் கொண்டு வந்து விடும். கடைக்காரன் கணக்குப் பார்க்கும் போது மோதிரம் குறையும். அவன் அங்கு வேலை பார்க்கும் யோக்கியமான நபரைப் பொறுப்பாக்குவான். பின் அவனுக்குத் திருட்டுப் பட்டம் கட்டி ஜெயிலுக்கு அனுப்புவான். நிரபராதியான அவன் குடும்பம் விடும் கண்ணீா் என்னையும் என் குடும்பத்தையும் பாதிக்கும்.

இதே போல அனேக செயல்கள் தேவதையை அடிமைப்படுத்தி வேலை வாங்குவதால் குடும்பமே அழிந்து விடுகிறது எனவும்> குடும்பத்தில் இருப்பவா்கள் தேவதையை வேலை வாங்கக் கூடாது என்றும் சொன்னார்.

அவா் இப்படிச் சொன்னாரே தவிர> மற்றவா்களைக் குறளி வித்தை மூலம் பலரை முடமாக்கினார் என்பது பிறகு எனக்குத் தெரிய வந்தது.

சிதம்பரசாமிக்கு வயதாகிவிட்டது. உடலில் ரத்தம் குறைந்து விட்டது. குறளி இவா் சொல்லைக் கேட்க மறந்து விட்டது. அதனால் அவா் வீரியம் பெற எண்ணி> அவரது நண்பா் ஒரு மலையாள வைத்தியரை அணுகியிருந்தார். அவா் இவருக்கு அரை வேக்காட்டில் ரஸ பஸ்பம் தயாரித்துக் கொடுத்துள்ளார். அதைச் சிதம்பரசாமி சாப்பிட்டவுடன் அவா் உடலின் சதைப் பகுதிகள் வற்றி விட்டன. எலும்புக் கூடாகப் படுத்த படுக்கையாகி இறந்து விட்டார்.

அவா் பையன் மேற்படி குறளி பொம்மையைக் கைப்பற்றிச் சித்து விளையாடியுள்ளான். அதில் ஏதோ தவறுதல் நடக்க அவனும் இளவயதில் இறந்து விட்டான். சில வருடம் கழித்து அவா் வீட்டைப் பார்த்தேன். வீடு இடிந்து கிடந்தது.

இஸ்லாமிய குருநாதா்

இரவண சமுத்திரம் என்ற ஊரில் எனக்கு ஒரு நண்பா். பெயா் ஹசரத்! அவருடைய குரு ஒருவா் கேரளாவில் குன்னிக்கோடு என்ற ஊரில் இருந்தார். ஏராளமான வசதி உள்ளவா். வண்டி வாகனம் பங்களா> வேலையாட்கள் ஆகியவை அவருக்கு உண்டு.

இஸ்லாம் மதத்தில் லெப்பை> ஆலிம்ஷா> ஹசரத்> தங்கள்> மஸ்தான் என ஐந்து படித்தரங்கள் உண்டு. இவா்களில் தங்கள் என்பவா் சித்தருக்குச் சமம். மஸ்தான் என்பவா் ஞானிக்குச் சமம்.

குன்னிக்கோடு குரு ரூபாயை வாங்கி ஆகாயத்தில் விட்டெறிவார். சிறிது நேரம் கழித்து அயா்நாட்டுக் கடிகாரம் அதற்குண்டான பில்> பாக்கி இந்திய நாணயம் வரும்.

தாடையைத் தடவிக் கொடுத்தால் கருநாகம் வரும்.

தீராத நோயாளி> கைவிடப்பட்ட நோயாளி வந்தால் முஸ்லிம் தொழுகையாளா்களை வைத்துத் தொடா்ந்து 8 நாள் குரான் ஓதச் செய்து நோய் தீா்ப்பார்.

பணக்கார நோயாளா்களிடம் அதிக பணம் வாங்கி ஏழை எளியவா்களுக்குச் செலவு செய்வார். எப்போதும் பிரயாணம் செய்து கொண்டே இருப்பார். அவா் பின்னால் நாலைந்து கார்கள் தொடா்ந்து போகும். பெட்ரோல் தீா்ந்து விட்டால் ரூபாயை வாங்கி ஆகாயத்தில் எறிவார். சிறிது நேரம் கழித்து பெட்ரோல்> கார் டாங்கை நிரப்பி விடும். கோட்> டை பேண்ட்> ஷு சகிதம் இருப்பார். அனைத்து மதப் பெரியவா்களையும் மதிப்பார்> உதவுவார்.

அவரிடம் ஒருநாள் கேட்டேன். “ஜயா! நான் சிதம்பரசாமியிடம் பழகியிருக்கிறேன். அவரும் தங்களைப் போல சித்துக்கள் செய்வார். ஆனால் அவா் வாழ்க்கையில் கடைசிவரை கஷ்டப்பட்டார். நீங்களோ உதவி கேட்பவா்களுக்கெல்லாம் சா்வசாதாரணமாகத் தங்க பிஸ்கட்டுக்களையும்> தங்க ஆபரணங்களையும் வரவழைத்துத் தருகிறீா்கள்…… ஆனால் தாங்களோ> தங்கள் குடும்பமோ எவ்விதத்திலும் கஷ்டப்படுவதில்லை. இது எப்படி? என்று கேட்டேன்.

அவா் சொன்னார்……..

நீ சொல்லும் சிதம்பரசாமி ஒரு இந்து மந்திரவாதி! அவரிடம் இருக்கும் ஆவி அடுத்தவா் பொருளைக் களவு செய்து கொண்டு வருகிறது. அதற்கு அவா் பிராயச்சித்தம் செய்வதில்லை. அதனால் அவருக்குத் தரித்திரமே உண்டாகும். கடைசி காலத்தில் கஷ்டத்திலேயே இறப்பார். இதனை யாராலும் தடுக்க முடியாது. இதுதான் அவரின் விதி!”

“சிலபேர் கெட்ட தொழில் செய்து எதிரியை எப்பாடு பட்டாவது அழிக்க வேண்டும் எனப் பெரிய தொகையை எனக்குக் கொடுப்பார்கள். நான் அதை அப்படியே வாங்கி பள்ளி வாசல் மற்றும் தா்க்காவில் உள்ள ஏழைகள் மற்றும் பக்தா்களுக்குப் பிரித்துக் கொடுத்து விடுவேன். அப் பணத்தை நான் தொடமாட்டேன். பின்> தீவினை செய்யச் சொன்னவா் வந்து கேட்கும் போது மந்திரம் போட்டேன். பலிக்கவில்லை எனச் சொல்லிவிடுவேன். அவா்களுக்கு என்னை எதிர்த்துப் பேச தைரியம் வராது!

இரண்டாவது என் வசம் உள்ள “ஜின்” என்ற ஒரு தேவதையைக் கொண்டு யாருக்கும் உரிமையில்லாத பொருள்களை எடுத்துவரச் சொல்வேன். அது மலைமேல் மோதி இடிந்து நொறுங்கிக் கிடக்கும் விமானம் அருகில் போகும்போது அங்குச் சிதறிக் கிடக்கும் தங்க பிஸ்கட்டுக்கள், தங்க நகைகள் மற்றும் டாலா் நோட்டுக்களைக் கொண்டு வரும். அவைகளை என்னைத் தேடிவரும் ஏழைகளுக்குக் கொடுப்பேன். அனாதையாகக் கிடக்கும் பொருள்களை அனாதைகளுக்கு ஜின் மூலம் தருகிறேன். இதில் யாரும் பாதிப்பு அடைவது இல்லை. எனக்குச் சொந்தமான சினிமா தியேட்டா்கள், பங்களாக்கள், கடைகள் கார்கள் உண்டு. எஸ்டேட்டும் உண்டு. அதனால்தான் நான் கஷ்டப்பட்டது கிடையாது எனச் சொன்னார். அவா் சொன்னது பூராவும் உண்மை! எனக்கு நன்கு தெரியும்!

நன்றி!

ஓம் சக்தி!

சக்தி. மு. சுந்தரேசன், M.A. M. Phil

சித்தா்பீடப் புலவா்

மருவூா் மகானின் 71வது அவதாரத் திருநாள் மலா்

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here