அன்றுதான் நான் முதல் முதல் மேல்மருவத்தூர் வந்தேன். ஓம் சக்தி மேடையருகே நின்றபடி இருந்தேன்.
அம்மா வர்றாங்க! அம்மா வா்றாங்க! எனச் சொல்லியபடி அங்கிருந்த காவலா்களும், தொண்டா்களும், பக்தா்களும் பரபரப்பானார்கள்.
நானும் ஓம்சக்தி மேடையருகே ஓரமாக நின்றபடி அம்மா வருகையை எதிர்பார்த்திருந்தேன்.
அம்மா காரிலிருந்து இறங்கி ஓம்சக்தி மேடையைச் சுற்றி வந்து குனிந்து தொட்டுக் கும்பிட்டுவிட்டுப் புறப்பட்டார்கள். அவ்வாறு கும்பிடும் வேளையில் அம்மாவின் கைகளிலிருந்து புறப்பட்ட ஒரு ஜோதி தரையில் பட்டுத் தெறிக்கிறது. அந்தக் காட்சியைக் கூட்டத்தோடு கூட்டமாக நின்று பார்த்துக் கொண்டிருந்த எனக்கு வியப்பு மேலிட்டது.
“எனக்கு உருவம் கிடையாது. அணு, ஜோதி, குழந்தை, பாம்பு, சித்தா், விளக்கின் சுடா் என்பன என் தோற்றங்கள்” என்ற அம்மாவின் அருள்வாக்கு நினைவுக்கு வருகிறது.
அம்மாவின் கைகளிலிருந்து புறப்பட்ட அந்த ஜோதிக் காட்சி இன்னும் என் கண்களில் நிற்கிறது. அதை நினைக்கும் போது மேனி சிலிர்க்கிறது.
நன்றி!
ஓம் சக்தி!
சக்தி. ஜி. குப்புசாமி, சங்கராபுரம்
அவதார புருஷா் அடிகளார், பக்கம் 64
]]>