ஜோதிக் காட்சி

16.08.1999 அன்று செவ்வாய்க் கிழமை மதியம் 12.00 மணி முதல் 1.00 மணி வரை ஒவ்வொருவரும் தலையில் ஒரு எலுமிச்சம் பழமும், வலது கையில் ஒரு எலுமிச்சம் பழமும் வைத்துக் கொண்டு தியானம் இருக்குமாறு அம்மா எல்லோருக்கும் ஆணையிட்டிருந்தார்கள்.

அவ்வாறு எங்கள் மன்றத்தில் நாங்களெல்லாம் தியானத்தில் அமா்ந்திருந்தோம்.

தியானத்தின்போது எந்த எண்ணமும் இருக்கக்கூடாது. ஆனால் அதற்கு முதல்நாள் சக்தி ஒளியில் அம்மா ஏற்றிய தைப்பூச ஜோதி பற்றிப் படித்ததால், தைப்பூச ஜோதி பற்றிய எண்ணம் வந்தது. மேல்மருவத்தூா் அம்மா ஏற்றும் தைப்பூச ஜோதியை அடுத்த வருடமாவது பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது.

அம்மா! நீ ஏற்றும் ஜோதியைப் பார்க்க வேண்டும், அதற்கு உன் அருள் கிடைக்க வேண்டும்  அம்மா என்று வேண்டுகிறேன்.

அப்போது எங்கள் மன்றத்தில் அம்மாவின் படத்திலிருந்து ஜோதி தெரிந்தது. அது மட்டுமா? நம் ஆன்மிக குருவின் படத்திலிருந்து அம்மாவின் வலது புறம் சிறிய நட்சத்திரம் போல அழகான ஒரு ஜோதி தெரிந்தது.

கண்களைத் திறந்தபடியே தியானம் செய்யலாம் என்று அம்மா சொல்லியிருந்தார்கள். அவ்வாறு தியானம் இருந்தால் இந்த ஜோதிக் காட்சி கிடைத்தது.

தொண்டுக்குப் போ!

17.03.1999 அன்று புதன்கிழமை அமாவாசை நாள்! அன்று வீட்டில் பூஜையெல்லாம் முடித்துவிட்டு, சக்திக் கவசம் பாடலைக் கேட்கலாம் என்று, கேசட் போட்டுப் பாடலைக் கேட்கத் தொடங்கினேன்.

அப்போது எங்கள் மன்றத்திலிருந்து ஒரு சக்தி வந்தார். மன்ற வழிபாட்டுக்குத் தொண்டு செய்ய வாருங்கள் என அழைத்தார்.

இந்தப் பாட்டை மட்டும் கேட்டுவிட்டு வருகிறேன். நீங்கள் போய்க்கொண்டிருங்கள் என்று அவரை அனுப்பிவிட்டு, ஒரு ஸ்டூலில் உட்கார்ந்து சுவரில் சாய்ந்து கொண்டு பாட்டைக் கேட்டுக் கொண்டு இருக்கிறேன்.

திடீரென்று யாராவது தொட்டால் எப்படி இருக்கும்? அதுபோல எனது வலது தோளில் யாரோ தட்டுவது போல இருந்தது. யார் என்று வேகமாகத் திடுக்கிட்டுப் பார்த்தேன். அங்கே…….

அம்மா (அடிகளார்) தத்ரூபமாக நிற்கிறார்கள்!! எனக்குக் கை கால் ஓடவில்லை…. வார்த்தைகள் வரவில்லை……. உடல் நடுங்குகிறது…….. உள்ளமோ சந்தோஷத்தில் மிதக்கிறது….. அம்மா….. அம்மா………. என்று கூப்பிட வேண்டும் போலிருக்கிறது. வார்த்தைகள் வரவில்லை. அப்படியே அம்மாவைப் பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.

திரும்பித் தோளில் தட்டி, “மகனே! தொண்டுக்குப் போ! போய்விட்டு வந்த பிறகு இந்தப் பாடலைக் கேள்!” என்று சொல்லிவிட்டு அப்படியே நின்ற இடத்திலேயே மறைந்து விட்டார்கள்.

வேகமாக டேப்பை அமா்த்திவிட்டு, அவசர, அவசரமாக மன்றத் தொண்டுக்குப் பறந்தேன்.

ஏன் இப்படிப் பறக்கிறாய்! என்று வீட்டிலிருந்தவா்கள் கேட்டார்கள். வந்து சொல்கிறேன் எனக் கூறிவிட்டு விரைந்தேன்.

அம்மா காட்சி கொடுத்த அனுபவத்தை வீட்டுக்கு வந்து என்னை அழைத்த சக்தியிடம் சொல்லி ஆனந்தப் பட்டேன்.

அகண்ட தீபம் ஏற்றும் காட்சி

அன்று புதன்கிழமை. அமாவாசை! அம்மா சொல்லியிருந்தபடி அன்று 12.00 மணியிலிருந்து 1.00 மணிவரை தலையில் எலுமிச்சம் பழம் வைத்துக் கொண்டு எங்கள் மன்றத்தில் தியானம் இருந்தேன். ஈரச் செவ்வாடையில் இருந்ததால் குளிர் தாங்கவில்லை. கை கால் உடம்பெல்லாம் நடுங்கியது.

அம்மா! என்னம்மா இது சோதனை! தலையில் உள்ள பழம் ஒரு நிமிடம் கூட நிற்காது போல் இருக்கிறதே…. கருணை காட்டம்மா! என்று வேண்டினேன்.

அம்மாவின் படத்தின் அருகே உட்கார்ந்திருந்தேன் அப்பொழுது அம்மா படமே தெரியவில்லை. ஆம்! அம்மாவே நேரில் வந்து காட்சி கொடுத்தார்கள். அதுவும் எப்படி………?

அம்மாவே நேரில் வந்து மண்டியிட்டு அகண்ட தீபம் ஏற்றுகிறார்கள். அது கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது.

அதன்பின் அம்மா மறைந்து விட்டார்கள். அம்மா ஏற்றிவைத்த அகண்ட தீபம்தான் தெரிகிறது.

அந்த அகண்ட தீபத்தைப் பார்த்தவுடன் ஒரு பரவசம்! அதிலிருந்து வெதுவெதுப்பாக ஒரு சக்தி பாய்வது போல என் உடலில் பாய்ந்தது. அதன்பின் உடம்பில் குளிரோ நடுக்கமோ இல்லை. அணிந்திருந்த செவ்வாடையில் சொட்டச் சொட்ட இருந்த ஈரமெல்லாம் போய்விட்டது. தெளிவாக இருந்தேன்.

அம்மா அருளால் கிடைத்த காட்சி இது!

பக்தி வளா்வது அமாவாசையில்தான் என்று அம்மாவின் அருள்வாக்கு, சக்தி ஒளியில் வந்தது. மேற்கண்ட மூன்று ஆன்மிக அனுபவங்களும் எனக்கு அமாவாசை நாட்களில் கிடைத்தன.

எல்லோரும் அம்மாவின் அருளைப் பெறுவோமாக!

குருவடி சரணம்! திருவடி சரணம்!

நன்றி!

ஓம் சக்தி!

சக்தி. புவனேஸ்வரி, சா்வேயா் காலனி மன்றம், மதுரை – 7

அவதார புருஷா் அடிகளார், பாகம் 13, (பக்கம் 35 – 37)

 

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here