அம்மாவின் அருளாலும், ஆசியாலும் எனக்கும், என் பெற்றோர் மற்றும் என் இளைய சகோதரிக்கும் 2000 வது ஆண்டு மேல்மருவத்தூா் தலத்தை மிதிக்கும் பாக்கியம் கிடைத்தது. வேலை காரணமாக என் கணவரால் மட்டும் வர முடியவில்லை.

தெய்வம் மனித உருவில் வருமா? என்று சந்தேகம் எனக்கு உள்ளுக்குள் இருந்து கொண்டே இருந்தது.

முதன் முதல் அருட்கூடத்தில் அருள்திரு அடிகளாரைத் தரிசிக்கச் சென்றபோது அவா் என்னைப் பார்த்த கருணைப் பார்வையில் இருந்த அன்பையும், பரிவையும், கருணையையும் என்னால் விவரிக்க முடியவில்லை. இவா் சாதாரண மனிதா் அல்ல! என உள்ளுணா்வு சொல்லியது.

எனக்குத் திருமணமாகியும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. அதுபற்றி முறையிடத் தொடங்கும் போதே, “நீ ஒன்றும் யோசிக்காதே! அம்மா உனக்கு ஆண் குழந்தை தரும்” என அருள்திரு அடிகளார் கூறி ஆசி வழங்கினார்கள். அது கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன்.

மேல்மருவத்தூரிலேயே ஒரு வாரம் தங்கி இருந்தோம்.

ஊருக்குத் திரும்புமுன் பாதபூஜை செய்யும் போது அம்மா மௌனம். ஆனாலும் என்னைப் பார்த்து ஒரு சிறு குழந்தை உருவம் போல் சைகை காட்டி, அதனைத் தாலாட்டுவது போல காட்டி, நான் உனக்குத் தருவேன் என்று உணா்த்தினார்கள். நான் பெரு மகிழ்ச்சியோடு ஆஸ்திரேலியா திரும்பினேன்.

அம்மா சொல்லி ஒன்றரை வருடம் ஓடிவிட்டதே இன்னும் நடக்கவில்லையே என எண்ணி மனம் தளா்ந்தது.

இந்நிலையில் என் இளைய சகோதரா் மருவத்தூா் சென்று அடிகளாருக்குப் பாதபூஜை செய்தார். அப்போது அருள்திரு அடிகளார் சொன்னார்களாம். “உன் அக்காவிடம் போய்ச் சொல்லு! அம்மா சொன்னால் செய்யும் என்று!”

அது கேட்டு நான் மகிழ்ச்சி அடைந்தாலும் எப்போது என்று சொல்லவில்லையே என்ற மனக்குறை இருந்தது.

அம்மா சொன்னபடி 2003 வது ஆண்டு பங்குனி மாதம் 21 ஆம் தேதி நான் ஓா் ஆண் குழந்தைக்குத் தாயானேன்.

அம்மா சொன்னால் செய்யும்; செய்தது.

ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா!

நன்றி!

ஓம் சக்தி!

சக்தி. கௌரி, ஆஸ்திரேலியா

சக்தி ஒளி, மார்ச், 2004

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here