ஓா் ஆன்மா கடைத்தேறுவதற்காகவும், தன் எல்லையில்லாத கருணையைப் பெற்று இன்பம் அடையவும், ஊழ்வினைக் கொடுமை தணியவும், உடல்நோய், மனநோய் குறையவும் வேண்டி அவதார நோக்கம் கொண்டு வந்துள்ள அன்னை, பல்வேறு வழிமுறைகளை மேல்மருவத்தூா் சித்தா் பீடத்தில் அருளியிருக்கின்றாள்.

“இயற்கையின் எந்த ரூபத்திலும் நான் ஆன்மிகம் வளா்ப்பேன். தற்போது உனக்குக் கொடுக்கிற வாய்ப்புக்களையும், கிடைக்கிற வாய்ப்புக்களையும் பயன்படுத்திக் கொண்டு, ஆன்மிகத்தில் முன்னேறு! காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்!” – என்பது அன்னையின் அருள்வாக்கு

அடித்தளத்து மக்கள் ஆன்மித்தில் மேம்பாடு அடைய:

அடித்தளத்தில் உள்ள மக்கள் ஆன்மிகத்தில் மேம்பாடடைய அன்னை அருளிய வழிமுறைகள் இவை! இவற்றையெல்லாம் பயன்படுத்திக்கொள்ளுங்கள்!

  1. ஆடிப்பூர விழாவின்போது சுயம்புவிற்குப் பாலபிடேகம் செய்யுங்கள்; அன்று கஞ்சி கொண்டுவந்து படையுங்கள்! அங்க வலம் வாருங்கள். அன்னையே அடிகளார் மூலம் அங்க வலம் வருகின்ற அந்த அற்புதக் காட்சியைத் தரிசனம் செய்யுங்கள்.
  2. நவராத்திரி அகண்ட விளக்கை அன்னையே இங்கே ஏற்றி வைக்கின்றாள். அந்த அகண்ட விளக்கைத் தரிசனம் செய்யுங்கள். அந்த ஒன்பது நாளில் முக்கூட்டு எண்ணெய் (வேப்பெண்ணெய், நல்லெண்ணெய், நெய்) ஊற்றித் தரிசியுங்கள்! இலட்சார்ச்சனைகளில் பங்கு பெறுங்கள்.
  3. அமாவாசை, பெளா்ணமி நாட்களில் இங்கு உருள்வலம் வருவதால் ஊழ்வினைக் கொடுமைகள் தணியும். உங்களால் முடிகிற நாட்களிலெல்லாம் இங்கே உருள் வலம் வாருங்கள்!
  4. பாமர மக்களும் தியானம் செய்ய வேண்டும்; அங்கப் பிரதட்சணம் செய்ய வேண்டும். அப்படிச் செய்கின்றவா்களின் பாவங்களை நானே ஏற்றுக் கொள்வேன் மகனே! என்பது அன்னையின் அருள்வாக்கு.
  5. கிரகண காலங்களில் இங்கே தியானம் செய்யுங்கள்! உங்கள் ஆன்ம சக்தி பெருகும்!
  6. “சக்தி விரதம்” இருந்து, சக்தி மாலை அணிந்து, இருமுடி ஏந்தி வந்து செலுத்துங்கள். உங்கள் கோரிக்கை நிறைவேறும்.
  7. நாகதோஷம் உள்ளவா்கள் இங்கே புற்றுக்குப் பால் ஊற்றுங்கள்! இங்கே உள்ள நாகபீடத்தில் எலுமிச்சம்பழ விளக்கேற்றி வழிபடுங்கள்.
  8. ஏவல், பில்லி, சூனியத்தால் பாதிக்கப்பட்டவா்கள், சித்தப் பிரமை உள்ளவா்கள் மேல்மருவத்தூரில் உள்ள அதா்வண பத்திரகாளி சந்நிதியில் உரிய முறையில் வழிபாடு செய்யுங்கள். அந்த வழிபாட்டு முறைகள் “மேல்மருவத்தூா் அன்னையின் அற்புதங்கள்” என்ற நூலில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.
  9. இங்கே நடைபெறுகிற அன்னதானம், ஆடைதானம், சமுதாயத் தொண்டுகள் இவற்றுக்கு உங்களால் முடிந்த பொருள் கொடுத்து உதவுங்கள்.
  10. இங்கே நடைபெறும் வேள்விப் பூசைகளிலும், விழாக்களிலும் கலந்து கொண்டு தொண்டு செய்யுங்கள்
  11. “இங்கே குப்பை அள்ளுவதற்குக்கூட நீ தவம் செய்திருக்க வேண்டும்” என்பது அன்னையின் அருள்வாக்கு. வாரந்தோறும் இங்கே வந்து சுற்றுப்பற சுகாதாரப் பணிகளையும், தொண்டுகளையும் செய்யுங்கள். “இவற்றை நீ சுத்தப்படுத்து! உன் ஆன்மாவைச் சூழ்ந்துள்ள அழுக்குகளைப் போக்கி நான் சுத்தப்படுத்துவேன்” என்பது அன்னையின் அருள்வாக்கு.
  12. இங்கே விடியற்காலை நேரத்தில் அன்னையின் அபிடேகம் நடக்கும் வேளையில் கூட்டு வழிபாடு நடைபெறும். இந்தக் கூட்டு வழிபாட்டில் கலந்து கொண்டால் ஆன்மபலம் பெற முடியும். எனவே இங்கு வரும்போதெல்லாம் கூட்டு வழிபாட்டில் கலந்து கொள்ளுங்கள்.
  13. “பணம் பாவத்தை வளா்க்கும்; பகையை உண்டாக்கும்! சொத்து சேரச் சேர சுகம் போய்விடும்” என்பது அன்னையின் அருள்வாக்கு. ஆதலின் ஆதிபராசக்தி அறநிலையின் கல்வித் தொண்டு, மருத்துவத்தொண்டு ஆகியவற்றுக்குப் பொருள் கொடுத்து உதவுங்கள். பணம் இல்லாவிட்டாலும் உடலால் தொண்டு செய்யுங்கள்.
  14. “கோளநூல்” என்கிற நூல் ஒன்று ஆதிபராசக்தி அறிநிலையால் வெளியிடப்பட்டுள்ளது. அமாவாசை, பெளா்ணமி நாட்களில் அந்த நூலை வரிவிடாமல் படிக்குமாறு அன்னையின் அருள்வாக்கு உத்தரவு! வேள்விப் பூசை செய்கிற புண்ணியம் அந்த நூலைப் படிப்பதால் கிடைக்கும். ஏழை, எளிய பக்தா்கள் இந்த முறையைப் பற்றிக் கொள்ளுங்கள்.
  15. உங்கள் ஊா்ப் பகுதிகளில் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றங்கள் இருந்தால் வாரந்தோறும் அங்கே சென்று கூட்டு வழிபாட்டில் கலந்து கொள்ளுங்கள். மன்றத்தாருடன் சோ்ந்துகொண்டு தொண்டு செய்து அன்னையின் அருள் பெறுங்கள். “மக்களுக்குத் தொண்டு செய்வதன் மூலமாகத்தான் கடவுளை அடைய முடியும்” என்பது அன்னையின் அருள்வாக்கு. இதனை மறவாதீா்கள்.
  16. நாள்தோறும் விடியற்காலை எழுந்து, அன்னையின் 1008, 108 மந்திரங்களைப்  படித்து வழிபட்டு வாருங்கள். “மன ஒருமையுடன் எவன் ஒருவன் 1008 நாட்கள் விடாமல் இவ்வாறு வழிபட்டு வருகிறானோ அவன் சந்ததியைக் காப்பேன் மகனே!” என்பது அன்னையின் அருள்வாக்கு.
  17. ஆன்மிக மாநாடுகள், ஆன்மிக ஊா்வலங்கள், ஆன்மிககுரு அருள்திரு அடிகளார் அவா்கள் மேற்கொள்ளும் ஆன்மிகப் பயணங்கள் இவற்றிலெல்லாம் கலந்து கொண்டு தொண்டு செய்யுங்கள்!
  18. தைப்பூச  விழாவையொட்டி ஏற்றப்படும் ஜோதியைத் தரிசனம் செய்யுங்கள்!

எல்லாவற்றுக்கும் மேலாக ஆன்மிககுரு அருள்திரு அடிகளார் அவா்களை ஆன்மிக குருவாக மானசீகமாக ஏற்று வழிபடுங்கள். அதன் பயன்களை அனுபவத்தில் உணா்வீா்கள். “அடிகளார் அவா்களை ஆன்மிக குருவாக ஏற்றுப் பயன் பெறடா மகனே!” என்பது அன்னையின் அருள்வாக்கு.

தெய்வம் காட்டும்; ஊட்டாது.

எத்தனையோ வழிமுறைகளை இந்த அவதார காலத்தில் அன்னை காட்டிக் கொடுத்துள்ளாள். பற்றிக் கொண்டு கரையேறுவதும், கை நெகிழ விடுவதும் அவரவா் நல்வினை, முயற்சி ஆகியவற்றைப் பொறுத்துள்ளது. தெய்வம் காட்டும்; ஊட்டாது.

நன்றி! ஓம் சக்தி! திரு. புலவா் முனிரத்தினம், அச்சிறுப்பாக்கம் மருவூா் மகானின் 68வது அவதாரத்திருநாள் மலா்  ]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here