தஞ்சை மாவட்டத்தைச் சோ்ந்த மூதாட்டி ஒருவா் தொண்டை அடைப்பான் நோய் வந்து உண்ணவும் முடியாமல் தண்ணீா் குடிக்கவும் முடியாமல் பெரிதும் தொல்லைப்பட்டு வந்தார். ஒருநாள் தஞ்சையில் புட்பவனம் என்ற கிராமத்தில் உள்ள ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றம் முன்பாக நின்று “அடி தாயே1! உன் மகிமைகளைப்
பற்றி இவா்கள் எவ்வளவோ சொல்லுகிறார்களே! தொண்டையடைப்பு வந்து சாப்பிடவும் முடியாமல் தண்ணீர் குடிக்கவும் முடியாமல் தவிக்கின்றேனே….ஆதரவற்ற நிலையில் மருத்துவம் பார்த்துக் கொள்ள முடியாமல் தத்தளிக்கின்றேனே… கண் திறந்து என்னைப் பார்க்கக் கூடாதா?” என்று வேண்டிக்கொண்டு சென்றார். அன்றிரவு அந்த வயதான மூதாட்டி கனவிலே தோன்றி ”மகளே! பிரண்டை இருக்கிறதல்லவா? பிரண்டை அதையெடுத்துச் சுட்டு துவையல் செய்து மூன்று நாள் சாப்பிட்டு வா! உன் நோயைக் குணப்படுத்துகின்றேன்” உன்று கூறிவிட்டு மறைந்து போனாள் அன்னை. அந்தப் பெண்மணி அவ்வாறே செய்து நோய் நீங்கப் பெற்றார்.