சற்குரு தரிசனம் சிவத்தைக் காட்டும், சூன்ய தரிசனத்தைக் காட்டும். மகா சக்தியைக் காட்டும். ஆத்ம தரிசனத்தைக் காட்டும். சக்தியின் படைப்புகளையும் இயக்கத்தையும் அக நிலையிலும் புற நிலையிலும் காட்டும். உன் மரணத்தை உனக்கு நண்பனாக்கும். இந்த இகத்தை உனக்கு அடிமையாக்கும். சத் – சித் ஆனந்தத்தை அனுபவிக்க வைக்கும்.
சற்குரு தரிசனம் மிக எளிதல்ல. சற்குரு உனக்கு எல்லா தரிசனங்களையும் காட்டிக் கொண்டே போவார். ஆனால் ஒரு நாளும் தன்னைக் காட்டிக் கொள்ள மாட்டார்.
ஞான வைராக்கியம் நிலைக்க சற்குருவைச் சார்ந்திருக்க வேண்டும். அவரது அருளால் விழிப்புணா்வோடு செயல்பட வேண்டும்.
சற்குரு இடத்தை, அவா் நடமாடும் இடத்தை மதிப்போடு தொட்டு வணங்கு! சற்குரு இருக்கும் திசையை நோக்கி வணங்கு! இவா் நடமாடும் இடம் புனிதமானது. சக்தி வாய்ந்தது.
சற்குருவின் அங்கதரிசனம் மகா சக்தி வாய்ந்தது. ஆனந்தமானது. பாதுகாப்பானது. சற்கருவின் அருள்தரிசனம் சாதகனை ஆன்மிகப் பாதைக்கு வேகமாக அழைத்துச் செல்லும்.