“இயற்கையை வழிபடு ! அதனால் பலன் உண்டு!”
“உங்களுக்காகவே இயற்கையைப் படைத்துக் கொடுத்துள்ளேன்”
இயற்கை தனக்காக வாழ்வதில்லை. மனிதன் மட்டுமே தனக்காக வாழ்கிறான். இயற்கைப் பொருள்களையும், ஆடு, மாடு போன்ற உயிரினங்களையும் தனக்காகவே பயன்படுத்திக் கொள்கின்றான். பிறருக்காக வாழ மாட்டேன் என்கிறான்.
சூரியன், சந்திரன், நெருப்பு, காற்று, மழை, மரங்கள்! – இந்த இயற்கைப் பொருள்கள் தனக்காக வாழ்வதில்லை. இவற்றிடம் உள்ள அந்தப் பண்பாடு மனிதனிடம் இல்லை.
இயற்கையும் தெய்வமாகப் போற்றி வணங்கிய பண்பாடு ஆதி காலத்தில் இருந்தது. இன்று அந்தப் பண்பாடு உங்கட்கு வருதல் வேண்டும். அதனால் உங்கட்கு நன்மை உண்டு”
பனியும் -மழையும்
“தற்போது பனியினாலும், மழையினாலும் கூட நோய்கள் உண்டாகின்றன. தற்போதைய பனி சுத்தமாக இருப்பதில்லை. தொழிற்சாலைகளாலும், வாகனங்களாலும் ஏற்பட்டு வரும் தூசுகள் பனியையும் மழையும் மாசு படுத்தி விட்டன. அதனால் உங்கள் உடலுக்குக் கேடுகள் விளைகின்றன்..செயற்கை அழிவுக்கே வழி உண்டாக்கும்.”
பக்தியின் சக்தி
“பக்தியினால் பூகம்பமும் தணியும்”
இயற்கையும்- செயற்கையும்
“இயற்கை சக்தி வாய்ந்தது. செயற்கை சேறு போன்றது.”
நிலையான பயன் இல்லை
“விஞ்ஞானத்தாலும் இன்றைய மருத்துவத்தாலும் நிலைத்த பயன் கிடையாது. அறுவைச் சிகிச்சை செய்தும், மருந்து கொடுத்தும் சில நாட்கள் தான் காப்பாற்ற முடியும்! ஆன்மிகமும், இயற்கையும் தான் நிலைத்த பயன் கொடுக்க வல்லவை”
புதுப்புதுக் கருவிகளைக் கண்டு பிடிக்கும் விஞ்ஞானத்தால் புதுப்புது வியாதிகளும் உண்டாகும்.
விஞ்ஞானத்தை உண்டாக்கியவனுக்கு அந்த விஞ்ஞானத்தாலேயே அழிவு உண்டு.
யாரையும் எந்த அரசியலாலும் காப்பாற்ற முடியாது. விஞ்ஞானத்தால் வேறு வழி ஒன்றைக் கண்டு பிடிக்க முயலலாம். ஆயினும் அது வேரே இல்லாமல் போய்விடும்.
பஞ்சபூதங்களை வணங்கு
“ஜந்து பலன்களை அடக்க வேண்டும். ஜந்து பூதங்களை வணங்க வேண்டும். ஜந்து தருமங்களைச் செய்ய வேண்டும். ஜந்து பாமாலைகளால் சக்தியை வழிபட வேண்டும்”
விஞ்ஞானத்தால் முடியாது
தண்ணீர், பூமி, காற்று, இவற்றையெல்லாம் விஞ்ஞானத்தால் உற்பத்தி செய்ய இயலாது.
“உலகத்தில் உள்ள இயற்கைத் தன்மைகளையெல்லாம் செயற்கைத்தனங்களாக மாற்றிவிட்டதன் காரணமாக இன்று இயற்கைக்கு மதிப்பில்லாமல் போய்விட்டது.செயற்கை சேறாக மாறிவிட்டது.
“சமுதாயத்தில் ஒன்பது பேர் தீயவன்; ஒருவன் நல்லவன். அந்த ஒருவனால் தான் மழை பெய்கிறது. மற்றவர்களால் புயல் அடிக்கிறது”
“இயற்கைக்கு அப்பாற்பட்ட செயற்கையினால் அழிவு உண்டு”
“மழை வேண்டுமானால் தான தருமங்கள் செழிக்க வேண்டும்”
“விஞ்ஞானம் பொய்யாகி விடும். ஆன்மிகம் திரும்பி வரும்”
ஓம் சக்தி
நன்றி
சக்தி ஒளி 1988 ஆகஸ்ட்
பக்கம் 2-3.
]]>