“மகனே! நீ காணுகின்ற காட்சியெல்லாம் நானாக இருக்கின்றேன். ஆனால், என்னை மேல் உலகிலும், இப்புவியின் மீதும் இருப்பவா்கள், நானே ஆணாகவும், பெண்ணாகவும், அதுவாகவும் கோலம் பொருந்தியிருக்கிறேன் என்பதை அறிய மாட்டார்க்ள். இந்த முப்பொருள் தன்மையை உலகத்துக்கு உணா்த்தவே ஆணாய்ப் பாலகனையும் (அடிகளாரையும்), பெண்ணாகச் சின்முத்திரை தாங்கிய சிலையையும், அதுவாகச் சுயம்புவையும் தன்னுள்ளே பொருத்தி வைத்திருக்கின்ற படத்தை வழிபடச் சொன்னேன்.
“மகனே! பாலகன் மட்டும் எனக்குப் பாலகன் இல்லை. உன்னைப் போன்ற ஒவ்வொருவனுமே எனக்குப் பாலகன் தான். மக்களாகிய நீங்களாகவும் நான் இருக்கிறேன் என்பதைனை முதலில் உணா்ந்து கொள். மனிதனும் இறைவன் தான்! இறைவனான மனிதன்! மனிதனான இறைவன்! அதை உணா்த்தவே பாலகன்.
உயா்ந்த உள்ளம் படைத்த, சத்துவ குணமே மேலோங்கிய, குணங்களைக் கடந்த பாலகனின் பிறவிப் பெருமையை அவன் அவதார மகிமையை உன்னைப் போன்றவா்கள் உணா்வது சற்றுச் சிரமம்” என்றாள்.
நன்றி
ஓம்சக்தி!
மேல் மருவத்தூா் அன்னையின் அற்புதங்கள்
பக்கம் 319
]]>
ஓம் சக்தியே பராசக்தியே
ஓம் சக்தியே ஆதிபராசக்தியே
ஓம் சக்தியே மருவூர் அரசியே
ஓம் சக்தியே ஓம் விநாயகா
ஓம் சக்தியே ஓம் காமாட்சியே
ஓம் சக்தியே ஓம் பங்காரு காமாட்சியே