இன்று மாரடைப்பால் காலமான பங்காரு அடிகளாரை ஆன்மீக பாதைக்கு திருப்பிய பாம்பு நிகழ்வு பற்றி உங்களுக்கு தெரியுமா? அவரது வலைதளத்தில் கூறப்பட்டு இருக்கும் கதை. இந்த நிலையில் ஆசிரியர் பயிற்சி பெற்ற இருந்த பங்காரு அடிகளார் எப்படி சாமியராக மாறினார் என்பது தொடர்பான வீடியோவை அவரது ஓம் சக்தி என்ற யூடியூப் சேனலில் வெளியிட்டு உள்ளார்கள். அதில் தெரிவித்து இருப்பதாவது, “கடந்த 1941 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ம் தேதி கோபால நாயக்கர் – மீனாட்சி தம்பதிக்கு 2வது மகனாக பிறந்தார் பங்காரு அடிகளார். சிறு வயதிலேயே கடவுள் பக்தியுடன் வளர்ந்தவர் பங்காரு அடிகளார். அவர் சிறுவயதில் படுத்து உறங்கும் அறையில் பாம்பு ஒன்று தொடர்ந்து சுற்றி வந்து உள்ளது. ஆப்பரில் தங்கத்தை அளிட்டு போங்க.. ரூ.100 கோடி மோசடி புகாரில் பிரணவ் ஜுவல்லரி மேலாளர்கள் கைது! அதிரடி ஒருநாள் பங்காரு அடிகளார் தனது அறையில் படுத்து உறங்கியபோது அந்த பாம்பு அவரது உடம்பில் ஊர்வதை உணர்ந்தார். உடனே விழித்த அவர், அந்த பாம்பு உடம்பை விட்டு இறங்கிச் சென்றதை கண்ட பங்காரு அடிகளார் பெற்றோரை அழைத்து காட்டி உள்ளார். பாம்பை கண்ட பங்காரு அடிகளாரின் தாயார் கத்தி கூச்சலிட்டு உள்ளார். உடனே அக்கம்பக்கத்தின் அங்கு திரண்டனர். ஆனால், அந்த பாம்பு எங்கோ மறைந்து விட்டது. ஆதிபராசக்தி பாம்பு உருவத்தில் தோன்றி பங்காரு அடிகளாரை ஆட்கொண்ட நிகழ்வு இது. ஹமாஸ் முக்கிய தலைவரை கொன்ற இஸ்ரேல் | Oneindia Tamil 5 பங்காரு அடிகளாருக்கு தனலட்சுமி என்ற தங்கை இருந்தார். அவர் மீது பங்காரு அடிகளாருக்கு கொள்ளை பாசம். திடீரென ஒருநாள் தனலட்சுமி உயிரிழந்தார். இதனை ஏற்க முடியாமல் துக்கத்தில் மூழ்கிய பங்காரு அடிகளார் தங்கையை அடக்கம் செய்த இடத்திலேயே அழுதுகொண்டே படுத்து கிடந்து உள்ளார். அப்போது திடீரென ஒரு பெண் பங்காரு அடிகளார் முன் தோன்றி, ஏன் அழுகிறாய் என கேட்டு.. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொடுத்துவிட்டு சென்றார். பங்காரு அடிகளார் மரணம். ஆன்மீகவாதிகளுக்கு கண்டம்.. 6 மாதங்களுக்கு முன்பே கணித்த ஜோதிடர்கள் உடனே பங்காரு அடிகளாருக்கு கேள்வி எழுந்து உள்ளது. தாகத்தால் தவித்த தனக்கு தண்ணீர் கொடுத்த பெண் யார் என யோசித்து பார்த்து உள்ளார் பங்காரு அடிகளார். இந்த கேள்வியோடு அவர் நிமிர்ந்து பார்த்தபோது அங்கு யாருமில்லை. ஆதிபராசக்தி உமாமகேஸ்வரி உருவத்தில் வந்து தண்ணீர் கொடுத்து இருக்கிறார். பள்ளி கல்லூரி படிப்பை முடித்துவிட்டு 1963 – 1965 வரை ஆசிரியர் பயிற்சி பெற்று உள்ளார் பங்காரு அடிகளார். அந்த சமயத்தில்தான் ஆதிபராசக்தி பங்காரு அடிகளார் உடலை ஆட்கொள்ள தொடங்கினார். அப்போதே அவர் பயிற்சி பள்ளியில் உள்ள படியில் உருண்டு செல்லுதல் போன்றவற்றை செய்தார். சுயநினைவின்றியும் அவர் சென்று இருக்கிறார். பெரும்பாலும் தனித்து காணப்பட்ட அவர், தன்னுடைய நண்பர்களிடம் அவர் இதை கூற, அவர்கள் சிரித்து உள்ளார்கள். இப்படி பல தருணங்களில் பங்காரு அடிகளாரை ஆதிபராசக்தி அடைந்து உள்ளார்.” என்று கூறப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here