பழனி அன்பர் ஒருவர்க்கு அன்னை கனவில் அருளிய வாசகங்கள் இவை! மன்றங்களில் ஆண்டு விழா கொண்டாடப்படுகிற காலங்களில், ஆன்மிக மாநாடுகளின் போதும் செவ்வாடைத் தோரணங்களில் பொன் வண்ணத்தில் எழுதி மக்களுக்கு உணர்த்த வேண்டிய வாசகங்கள் இவை !இவற்றை மன்றங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டி மீண்டும் ஒருமுறை சக்தி ஒளியில் வெளியிடப்படுகிறது. அவை வருமாறு:

1. “மருவத்தூரைப் புரிந்து கொள்!

மன்றம் தன்னில் சேர்ந்து கொள்”

2. மந்திர நூலைக் கற்றுக் கொள்!

மயக்கம் உனக்கிலை ஒத்துக்கொள்!

3. செவ்வாடை தன்னைக் கட்டுக் கொள்!

செம்மை உளம்தனைப் பெற்றுக் கொள்!

4. சரணம் சரணம் என்றே சொல்

மரண பயமில்லை துணிந்தே நில்!

5. இருமுடி நீயும் கட்டிச் செல்

இருதிரு வடியைப் பற்றிக் கொள்!

6. உருள்வலமாக உருண்டே செல்!

இருள்வினை மருண்டே போகும் சொல்!

7. வேம்பின் இலையைச் சுவைக்கச் சொல்!

பாங்காய் உடலை வளர்க்கச் சொல்!

8. பங்காரு அடிகள் பெயரைச் சொல்!

மங்காப் புகழைப் பெற்றுச் செல்!

9. சாதி சமயப் பேயைக் கொல்!

வீதி முழுதும் விரைந்தே செல்!

10. ஒன்றே குலம் என உயர்த்திச் சொல்!

ஒன்றே தாய் என உணர்த்திச் சொல்!

11. ஏசு பிரானையும் ஏற்றுக்கொள்!

ஏசுவோர் தம்மையும் போற்றிச் செல்!

12. காந்தி வழியைக் கற்றுக் கொள்!

சாந்தி வழியைப் பற்றிக் கொள்!

13. புத்தனின் புனிதப் பெயரைச் சொல்!

நித்தமும் நல்வழி நடந்து செல்!

14. கீதையும் குறளும் கற்றுக் கொள்!

பாதையும் ஒன்றே புரிந்து கொள்!

15. எலுமிச்சம் கனியை சுற்றச் சொல்!

எழும் இச்சைகளை அகற்றச் சொல்!

16. பூசனிக்காயை உடைக்கச் சொல்!

ஆசைப் பேயை விரட்டச் சொல்!

17. மஞ்சள் தண்ணீர் தெளிக்கச் சொல் !

கொஞ்சம் கண்ணீர் சிந்தச் சொல்!

18. மெய்ஞானத்தை உணர்ந்து கொள்!

விஞ்ஞானத்தைப் புரிந்து கொள்!

19. விதவைகள் வாழ்வை மலர்த்தச் சொல்!

பதவிகள் யாவும் மறக்கச் சொல்!

20. பெண்களை யாகம் செய்யச் சொல்!

ஆண்களைத் தியாகம் செய்யச் சொல்!

21. தொண்டு செய்து பழகச் சொல்!

தொண்டரை என்றும் மதிக்கச் சொல்!

22. பூசை முறைகளைக் கற்றுக் கொள்!

ஆசைத் திரையை அகற்றிக் கொள்!

23. இல்லற வாழ்வின் சிறப்பைச் சொல்!

நல்லறம் பலவும் வளர்க்கச் சொல்!

24. ஒருவரை ஒருவர் வணங்கச் சொல்!

இருவரும் நட்பில் நிலைக்கச் சொல்!

25. ‘சக்தி ஒளி ‘ யைப் படிக்கச் சொல்!

பக்தி நெறியைப் பரப்பச் சொல்!

26. அனாதைப் பிணத்தை அடக்கம் செய்!

தனாதி மலத்தை அடக்கச் செய்!

27. இலவச மருத்துவம் செய்யச் சொல்!

மருவூர் மருத்துவ மகிமை சொல்!

28. தேடும் பொருளை உண்ணச் செய்!

வீடும் நாடும் ஓங்கச் செய்!

29. மந்தரிப் பாலே பிணியைக் கொல்!

புன் சிரிப்பாலே விதியை வெல்!

30. அன்பும் அறமும் வளரச் செய்!

பாசமும் நேசமும் மலரச் செய்!

31.இன்பமும் துன்பமும் ஒன்றெனக் கொள்!

உண்மையும் பண்பும் நன்றெனக் கொள்!

32. வேற்றுமை உணர்வை வெறுக்கச் செய்!

ஒற்றுமை என்றும் நிலைக்கச் செய்!

33. ஓம் ஓம் என்பது தத்துவச் சொல்!

போம் போம் துயரம் நித்தமும் சொல்!

34. சக்தி சக்தி என்றே சொல்!

முக்தி முக்தி என்றே நில்!

35. அம்மா பெயரைச் சொல்லிப் பார்!

அற்புதம் தன்னை எண்ணிப்பார்!

36. அன்ன தானம் செய்தே பார்!

ஏழ்மை அகன்றிடும் தினமும் பார்!

37. ஏழை எளியவர் முகத்தைப் பார்!

ஏழ்மை அகற்றிடும் வழியை பார்!

38.மூல மந்திரம் சொல்லிப் பார்!

மூலா தாரம் முளைக்கும் பார்!

39. தமிழால் மந்திரம் சொல்லிப் பார்!

தரணி யாவும் போற்றும் பார்!

40. அன்புடன் நீயும் பேசிப் பார்!

அருளாட்சி எங்கும் மலரும் பார்!

41. கலச வேள்வி செய்து பார்!

கலகமும் கலக்கமும் தீரும் பார்!

42. முகமது நபியின் பொன்னுரை பார்!

அகம் அது சிறக்கும் அற்புதம் பார்!

43. ஆன்மிகப் புரட்சி வருகுது பார்!

அமைதிப் புரட்சி வளருது பார்!

44. ஊனம் உற்றோர் துயரைப் பார்!

தானம் செய்து உயரப் பார்!

45. அருள் வாக்கைக் கொஞ்சம் கேட்டுப் பார்!

இருள் வாழ்க்கை பஞ்சாய்ப் போகும் பார்!

46. அரசியல் ஆட்சி மறையுது பார்!

ஆன்மிக ஆட்சி தெரியுது பார்!

47. செவ்வாடைத் தொண்டர் ஊர்வலம் பார்!

செவ்வானம் மாரி பொழியுது பார்!

48. அற்புத நூலைப் படித்துப் பார்!

பொற்பதச் சிறப்புப் புரியும் பார்!

49. விளக்குப் பூசையில் கலந்து பார்!

விளங்கா உண்மைகள் விளங்கும் பார்!

50. சக்தி மாலை வளருது பார்!

சத்தியப் பாதை தெரியுது பார்!

51. மருவூர் அகண்ட சோதியைப் பார்!

பெரும் ஊழ்க் கண்டம் மறையுது பார்!

52. சித்தம் தெளிய வழி தேடு!

சித்தர் உறவை நீ நாடு!

53. மரமும் சுயம்பும் நம் வித்து!

பாம்பும் நோன்பும் நம் சொத்து!

54. குங்குமம் எங்கும் நிறையட்டும்!

மங்கலம் பொங்கி வளரட்டும்!

இரண்டு வாக்கியங்களை எழுதி அடியில் மேல்மருவத்தூர் அன்னை என்று குறிப்பிடவும்.

ஓம் சக்தி

நன்றி

சக்தி ஒளி 1991 நவம்பர்

பக்கம் 56-59.

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here