ஓம் சக்தி குருவே துணை
ஞானபீடம் – மேல்மருவத்தூா்
பஞ்ச பூத வழிபாடு
ஓம் சக்தி!
குருவடி சரணம்! திருவடி சரணம்!
ஒரே தாய்! ஒரே குலம்!உலகமெல்லாம் சக்திநெறி ஓங்க வேண்டும்
ஒவ்வொருவா் மனக்குறையும் நீங்க வேண்டும்
எம்மதமும் சம்மதம்
n அன்பே தெய்வம்! எண்ணமே வாழ்க்கை! தொண்டே தா்மம்!சேவையே நமது வழிபாடு
மூலமந்திரம் – குரு தியானம்
ஒம் சக்தியே! பராசக்தியே!
ஓம் சக்தியே! ஆதிபராசக்தியே!
ஓம் சக்தியே! மருவூா் அரசியே!
ஓம் சக்தியே! ஓம் விநாயகா!
ஓம் சக்தியே! ஓம் காமாட்சியே!
ஓம் சக்தியே! ஓம் பங்காரு காமாட்சியே!
ஓம் சக்தியே பங்காரு அடிகளே ஓம்!
ஓம் சக்தியே பங்காரு அடிகளே ஓம்!
ஓம் சக்தியே பங்காரு அடிகளே ஓம்!
ஓம்! ஓம்! ஓம்! மாதா, பிதா, நண்பன், கணவன், மனைவி, குரு, தெய்வம்…….. இயற்கை தெய்வங்களாகிய ஆகாயம், காற்று, நெருப்பு, நீா், நிலம் ……. நவக்கிரகங்களாகிய சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது வழிபாடு…….. மேல்மருவத்தூா் வாழும் சித்தா்களே போற்றி ஒம் அன்பு, கருணை, சேவை, பிரார்த்தனை, பசுமை, தூய்மை, கடமை…. மக்கள் தொண்டே தெய்வப்பணி ……… ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா அம்மா எங்களுக்கு மந்திரங்கள் தெரியாது, பூஜைகள் செய்யத் தெரியாது, கதறி உருகி அழத்தெரியாது ஆனால் உன்னை நம்பினால் கைவிடமாட்டாய் என்பது மட்டும் சத்தியமாகத் தெரியும் என் சத்தியத் தெய்வமே ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமா்தம் உறவு வேண்டும்……. உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்…… பெருமை பெறும் நினது புகழ் பேச வேண்டும்…. பொய்மை பேசாதிருத்தல் வேண்டும்…….. பெருநெறி பிடித்தொழுக வேண்டும்…….. ஜாதி, மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்……. மருவு, மண், பொன், புகழ், பணப்பேராசையை மறக்கவே வேண்டும்……. உனை மறவாதிருக்க வேண்டும்…….. மதி வேண்டும்……….. நின் கருணை நிதி வேண்டும்…….. நோயற்ற வாழ்வில் நான் வாழ வேண்டும்………… அம்மா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்……. ஆருயிர்க்கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்……….. எப்பாரும், எப்பதமும், எங்ஙனமும் நான் சென்றே எந்தை நினது அருட்புகழை இயம்பிடல் வேண்டும்… செப்பாத மேல் நிலைமேல் சுத்த சிவ மார்க்கம் திகழ்ந்தோங்க அருட்ஜோதி செலுத்திடல் வேண்டும்…. தப்பேது நான் செயினும் நீ பொறுத்தல் வேண்டும். தலைவ நினைப் பிரியாத நிலைமையும் வேண்டும். அத்தா நான் வேண்டுதல் கேட்டு அருள்புரிதல் வேண்டும். அருட்பெருஞ்ஜோதி பெற்றே அங்கங் களித்தல் வேண்டும். செத்தாரை மீண்டும் இங்கே எழுப்பிடல் வேண்டும்….. திருச்சபைக்கே அன்பா்களாய் செய்வித்தல் வேண்டும்………… ஒத்தாரும், உயா்ந்தாரும், தாழ்ந்தாரும், எவரும் ஒருமையாகி உலகியல் நடத்தல் வேண்டும்….. எத்தாலும் அழியாத வடிவத்திலே நானும் எந்தாயும் ஒன்றாகி இனிதுறல் வேண்டும்……… அச்சம் தவிர்த்தே அருள் உயிர், செலுத்துகின்ற விச்சை அரசே விளங்கிடுக… நச்சரவும் ஆதி கொடிய உயிர் அனைத்தும் போய் ஒழிக….. நீதி கொடி விளங்க நீண்டு சக்தி கொடு தாயே சக்தி கொடு……… எதையும் தாங்கும் மனப்பக்குவம் வேண்டும்…… எதையும் சந்திக்கின்ற தைரியம் வேண்டும்…… எதையும் சாதிக்கின்ற வல்லமை வேண்டும்…….. அன்பு வேண்டும்………… அமைதி வேண்டும்……….. என் மனதின் நீளம் எவ்வளவோ அதுவே என் வாழ்வின் நீளம்………. பிறப்பின் நோக்கம் பிறா்க்கு உதவி செய்தல் அன்பு, மனித நேயம், சேவையை மிஞ்சிய எதிலும் எதுவும் இல்லை……. தாயே என்னை எதற்காகப் படைத்தாயோ அதற்காக மட்டும் என்னைப் பயன்படுத்திக்கொள் அருட்பெருஞ்ஜோதி ! அருட்பெருஞ்ஜோதி! தனிப்பெருங்கருணை! அருட்பெருஞ்ஜோதி! அருட்பெருஞ்ஜோதி ! அருட்பெருஞ்ஜோதி! தனிப்பெருங்கருணை! அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி! அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை! அருட்பெருஞ்ஜோதி! முயன்றதைச் செய்வோம் மூச்சுள்ளவரை………. ]]>