அன்னை ஆதிபராசக்தி துதிப் பாடல்கள்   குரு வருவாரா………. குரு வருவாரா? என் குரு வருவாரா? அருள் தருவாரா? எமக் கருள் புரிவாரா? வெள்ளை ஆடை உடுத்திக்கிட்டு குரு வருவாரா? – நம் வேதனையைத் தீா்த்து வைக்க குரு வருவாரா? சிவந்த ஆடை உடுத்திக்கிட்டு குரு வருவாரா? – எம் சிந்தையிலே கொலுவிருக்க குரு வருவாரா? பசும் பாலைக் கறந்து வைத்தேன் குரு வருவாரா? – அதைப் பாங்குடனே அருந்திடவே குருவருவாரா? பாமாலை தொடுத்து வைத்தேன் குரு வருவாரா? – எம் பாவத்தையே போக்கிடவே குருவருவாரா? பூமாலை தொடுத்து வைத்தேன் குரு வருவாரா? – அவா் புகழ் மாலை ஏற்றுக்கொள்ள குரு வருவாரா? அவதாரத் திருநாளில் குரு வருவாரா? – நல்ல அருட்பார்வை ஒளிவீசி குரு வருவாரா? நம்ம குரு வருவாரா? ஆடிப்புர நன்நாளில் குரு வருவாரா? – இந்த ஆடி அடங்கும் வாழ்க்கையிலே சுகம் தருவாரா? இப்போ…. குரு வருவாரே நம் குரு வருவாரே அருள் தருவாரே எமக் கருள் புரிவாரே.   குருநாதா மலராதா……………………   குருநாதா மலராதா உன் பாதக் கமலங்கள் மறையாதா தெளியாதா இந்த ஆசை சலனங்கள் விழி தோறும் பதியாதா உன் பாதச் சுவடுகள் படராதா வரையாதா நெஞ்சில் ஞான விழுதுகள் சூலம் திரிசூலம் அதைத் தாங்கும் தெய்வம் இறங்கி ஆடுமிடம் தாயே உன் பாதம் காலம் கலி காலம் கரை மீறி ஓடும் காயம் மனக்காயம் மலை போல சேரும் பற்றுதல் இல்லையெனில் பரிதாபமாகும் அதனால் வேண்டுகிறோம் அம்மா உன் பாதம்   குரு பாத முத்திரை ஞான முத்திரை சேரும் நெற்றியிலே பழி பாவம் போகுது  பாசம்  சேருது வேணும் பாதமே   பாதம் குரு பாதம் எழுதாத வேதம் நாழும் அதைத் தேடிப் படித்தாலே போதும் ஊறும் பாலூறும் திருப்பாதம் தேடி தேறும் கடைத்தேறும் ஆன்மாக்கள் கோடி தனியா ஊழ்வினையோ தடம்மாற வேணும் அதனால் வேண்டுகிறோம் அம்மா உன் பாதம்   குரு பாத முத்திரை ஞான முத்திரை சேரும் நெற்றியிலே பழி பாவம் போகுது பாசம் சேருது வேணும் பாதமே கண்டேனம்மா  கடவுளம்மா …………….. மருவத்தூரு மண்ணிலே அவதரித்த தெய்வமாம் அந்த தெய்வத்தின் சந்நிதியில் எல்லாம் சம்மதமாம் அந்த மருவத்தூரிலே அடிகளென்னும் மனிதராம் அந்த மனித சொல்லுக்குள்ளே மாய சக்திகளாம்   கண்டேனம்மா…….. கண்டேனம்மா கடவுளம்மா கடவுளோ ஒரு மனிதனம்மா மனிதனுக்குள் மகத்துவமா உணா்ந்துகொண்டேன் அனுபவம் சொல்ல வருமா? கண்டேம்மா       –      உன்னையம்மா கடவுளம்மா       –      சக்தியம்மா கடவுளோ         –      கலியுகத்தில் மனிதம்மா         –      அடிகளம்மா மனிதனுக்குள்      –      மறைந்திருக்கிற மகத்துவமா        –      நீதானம்மா   உணா்ந்துகொண்டேன் அம்மா உன்னருளை அனுபவம் சொல்ல வருமா?   ஓ…….. சொந்தம் இருந்தும் மண்மீதிலே கேட்பாரின்றி இருந்தேனம்மா சிந்தும் வசந்தம் மருவூரிலே உனைத்தேடியே நடந்தேனம்மா மகனே என்றோர் குரலே ஒலிக்க ஒலியின் கடவுள் கண்டேன்.   மருவத்தூரு மண்ணிலே அவதரித்த தெய்வமாம் அம்மா உந்தன் முன்னிலையில் எல்லாம் சம்மதமே அந்த மருவத்தூரிலே அம்மா உந்தன் பாலகனாம் பாலகன் சொல்லிடும் வாக்கினில் நாழும் பாய்ந்து வந்திடும் சக்தியம்மா சக்தியம்மா சக்தியம்மா சரணமம்மா   முதல் முறை உனை அழகு பீடத்தில் அம்மன் கோலத்தில் இருக்க பார்த்து வந்தேன் மறு முறை உனை இரவு நேரத்தில் கனவு காட்சியில் அடிகளாய்க் கண்டேன்   நிஜமிது காலை நேரத்தில் சித்தா் பீடத்தில் நடையில் காத்திருந்தேன் நடந்திடும் பாதம் வேண்டிடும் தாயின் சாயலை பார்த்து உருகி நின்றேன்.   பார்த்த கண்ணிரண்டில் நீா் பெருகுதம்மா வார்த்தை தொண்டைக்குள்ளே அடைத்துக் கொண்டதம்மா தெய்வத்தைப் பார்த்து விட்டால் பேச முடியுமா? பிறந்த குழந்தையைப் போல் மனசு ஆனதம்மா யார் சொன்னதோ கடவுள் இல்லையென?   ஆதிபரா சக்தி அன்னையம்மா அடிகளாரு பம் கொண்டவளே மனித வடிவில் தெய்வம் தந்தவளே அனுபவமாய் நெஞ்சில் நின்றவளே என்றும் என்னை காக்க வந்தவளே வரவா குருநாதா…………………… வரவா குருநாதா போய் நானும் வரவா மீண்டும் உன் வாசலில் பிரியா விடை தந்து போனாலும் என்ன நானும் உன் பார்வையில் குருபதம் நிறை இருள் முடிந்தது அருள் நிறைந்தது அதில் பிறந்தது தெய்வீக சுகம் தானம்மா   மானிட   ருபத்தில் மாயவள் அவதாரம் பாவத்தின் சுமைகளைத் தாங்கிடும் அம்மா உன் பாதம் உன்தன் ஆணைப்படி எடுத்தேன் கட்டுமுடி மருவூா் மண்ணைத் தான் தேடினேன் பாதம் சுமந்தபடி தொழுதேன் உந்தனடி தாயின் பரிவுடனே தாங்கினாய் உன் பாதம் சிவந்ததம்மா   மா…… பல்லாயிரம் பாரங்களும் குருநாதா உன் காலிலா – ஐயா கண்ணீா் கசிந்தேனம்மா – அதைத் தெளித்து பாதம் துடைத்தேனம்மா குறிப்பாக ஒரு பார்வை பார்த்தாயம்மா மறுபடியது எப்போதம்மா   மகனே மகனே எனவே அழைத்தாய் மனதில் துயரம் அதனை வேரோடு பறித்தாய் மெல்லத் திருக்கரத்தில் ஏதோ வரவழைத்தாய் பார்த்தால் அது தாயின் குங்குமம் அடியேன் கடமைகளை அம்மா எடுத்துரைத்தாய் யாருக்கு கிடைக்குமிந்த பாக்கியம் சித்தாடல் புரிந்தாயம்மா இதற்காகவே தவயோகிகள் உன் வாசல் கிடந்தாரம்மா – அம்மா என்னை அழைத்தது என்ன? – குருபரமே ஏற்றம் கொடுத்தது என்ன? போய் மீ்ண்டும் வா என்று சொன்னாயம்மா மறுபடியது எப்போதம்மா?   இருவிழியால் இருள் நீக்கியது ………………………..   இருவிழியால் இருள் நீக்கியது குருவடியால் துயா் போக்கியது மனவலியால் எனை மாற்றியது – என்னை மனவலியால் எனை மாற்றியது – அம்மா மருவூா் மண் தானே தேற்றியது மருவூா் மண் தானே தேற்றியது – என்னை மருவூா் மண் தானே தேற்றியது   வேப்பிலையால் விளையாடியது வினை யாவும் பறந்தோடியது வேள்விகள் தான் இங்கு நடக்கிறது வேண்டும் வரம் யாவும் கிடைக்கிறது மலா்ப்பதம் தான் மண்ணில் பதிக்கிறது மந்திரங்கள் நம்மைக் காக்கிறது மஞ்சள் முகம் கண்முன் தெரிகிறது. ஆ….. மங்களங்கள் வாழ்வில் நிறைகிறது – தாயே மங்களங்கள் வாழ்வில் நிறைகிறது – அம்மா மருவூா் மண் தானே தேற்றியது – என்னை மருவூா் மண் தானே தேற்றியது   சுயம்புருவாய் சக்தி தெரிகிறது உயிராகி நம்முன் சிரிக்கிறது சூரியனும் இங்கு பணிகிறது சூலமது வினை தீா்க்கிறது. பரப்பிரம்மம் வந்து வாழ்கிறது பிறவிப்பிணி தீர அழைக்கிறது தொண்டு செய்தால் மனம் குளிர்கிறது. ஆ…… திருவடி தனில் இடம் கிடைக்கிறது – அன்னை திருவடி தனில் இடம் கிடைக்கிறது   சரணம் சொல்ல ஓடி வந்தேன்……………..   சரணம் சொல்ல ஓடி வந்தேன் ஒம் சக்தியே – அம்மா சங்கடங்கள் தீா்த்திடுவாய் ஓம் சக்தியே பொடி நடையாய் நடந்து வந்தேன் ஓம் சக்தியே- அம்மா பொல்லா வினை தீா்த்திடுவாய் ஓம் சக்தியே   வாரம் தோறும் மன்றம் செல்வேன் ஒம் சக்தியே – அம்மா வழிபாட்டில் கலந்து கொள்வேன் ஓம் சக்தியே உன்னை வரம் கேட்கமாட்டேன் ஓம் சக்தியே – அம்மா நீ கொடுத்தால் வாங்கிக் கொள்வேன் ஓம் சக்தியே   திருவிழாவில் கலந்து கொள்வேன் ஓம் சக்தியே – அம்மா அங்கு வந்தால் மனம் திருந்தும் ஓம் சக்தியே தொண்டு பல செய்திடுவேன் ஓம் சக்தியே – அம்மா தொடா்ந்து நானும் செய்ய வேண்டும் ஓம் சக்தியே   என்னால் முடிந்த தா்மம் செய்வேன் ஓம் சக்தியே- அம்மா எதிர்ப்பலனைப் பார்க்கமாட்டேன் ஓம் சக்தியே உன் அருள் ஒன்று போதும் ஒம் சக்தியே – அம்மா ஓடி நானும் வந்திடுவேன் ஓம் சக்தியே   வேள்வி செய்தால் வினை தீா்ப்பாய் ஒம் சக்தியே – அம்மா வேண்டும் வரம் தந்திடுவாய் ஓம் சக்தியே கலச பூஜை செய்ய வைத்தாய் ஓம் சக்தியே – அம்மா கருணை தெய்வம் நீயல்லவோ ஓம் சக்தியே   இருமுடியைச் சுமந்து வந்தோம் ஓம் சக்தியே – அம்மா மன இருளைப் போக்கிடுவாய் ஓம் சக்தியே உழைக்கச் சொல்லி உணா்த்திடுவாய் ஓம்சக்தியே – அம்மா உன் பாதம் சரணடைந்தோம் ஓம்சக்தியே   சரணம் சொல்ல ஓடி வந்தோம் ஓம் சக்தியே – அம்மா சங்கடங்கள் தீா்த்திடுவாய் ஓம் சக்தியே வாரம் தோறும் மன்றம் செல்வோம் ஓம் சக்தியே – அம்மா வழிபாட்டில் கலந்து கொள்வோம் ஓம் சக்தியே   ஓம் சக்தி!  ஓம் சக்தி!  ஓம் சக்தியே! ஓம் சக்தி!  ஓம் சக்தி!  ஓம் சக்தியே! ஓம் சக்தி!  ஓம் சக்தி!  ஓம் சக்தியே! அம்மா ஓம் சக்தி!  ஓம் சக்தி!  ஓம் சக்தியே!   சித்தா் கணம் சுற்றிச் சூழ்ந்திட ……………..   சித்தா் கணம் சுற்றிச் சூழ்ந்திட… பக்தா் மனம் பற்றிப் படா்ந்திட.. நித்தம் உன் ஆலய வாசலில் ஆவேசம் முற்றும் உன் கட்டினில் சிக்கிய … முக்தன் அவன் வாக்கினில் வந்திடும்.. சக்தி உன் அற்புத மொழிகளும் ஆனந்தம்   செக்கா் நிற ஆடை உடுத்தவா்.. பக்கம் வர பார்வை செலுத்துவை மக்கள் உன் மகிமை உணா்ந்திடும்…… மருவத்தூா் வற்றா நதி வெள்ளம் போல் வரும் சுற்றம் உன் பொற்றாமரை பதம் பட்டே துயா் விட்டாரென சங்கூதும்   மன்றம் பல கண்டார் அவா்களை என்றும் நீ காப்பது சத்தியம் குன்றேல் என செல்வம் வழங்கிடும்.. … குலதெய்வம் ஒன்றே தாய் என்றே முழங்குவா் எங்கள் தாய் என்றே வணங்குவா் நன்றே என உலகம் போற்றிடும் நவ துா்க்கா   பங்காருவை மைந்தா என்று நீ.. அன்பாகவே அழைக்கும் போதினில்… சிங்கம்மது கா்ஜ்ஜித்திடும் சிவசக்தி…. பங்கம் ஏதும் அண்டா வகையினில்… எங்கள் குறை தீா்த்திடும் அன்னையே… திங்கள் முடி சூடிடும் நாயகி நமஸ்காரம் சங்கரி நின் பங்கயத் திருப்பதம் நமஸ்காரம்  ]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here