மேல்மருவத்தூரில் சித்திரா பௌர்ணமி கலச விளக்கு வேள்வி பூஜை 19-04-2019.
அனைவரும் வேள்வியில் கலந்து கொண்டு அம்மாவின் அருளைப் பெற வேண்டுகிறோம்..
*சித்திரா பௌர்ணமி (சித்தர்வனம்)
*ஆதிபராசக்தியின் 108 பீடங்களின் 71 வது பீடமாக சித்தர்வனம் என மச்சபுராணத்தில் கூறப்படுகின்ற மருவத்தூரில் 21 சித்தர்களின் ஜீவசமாதி உள்ளது. இங்கே அன்னை ஆதிபராசக்தி சித்தர்களுக்கெல்லாம் தலைவியாக அமர்ந்து அருளாசி வழங்கிவருகின்றாள். அச்சித்தர்கள் உறைகின்ற மருவத்தூரில் சித்திரா பௌர்ணமி பெருவிழா வேள்வி பூஜையாக சிறப்பாக அனுஷ்டிக்கபடுகிறது.”*
*”பலவகையான சக்கரங்கள் அமைக்கப்பட்டு பலவகையான வேள்வி குண்டங்கள் நிறுவப்பட்டு கலசங்களும் , விளக்குகளும் வைத்து உலகமக்கள் நன்மை வேண்டியும், இயற்கைவளம் செழிக்கவும், தனிப்பட்டவர்களின் பாவ வினைகள் நீங்கவும் சங்கல்பங்கள் செய்யப்பட்டு 1008, 108 தமிழ் மந்திரங்கள் படிக்கப்பட்டு நவசமித்து குச்சிகளும் முக்குட்டு எண்ணையும் விட்டு வேள்வித் தீ வளர்க்கப்படும்.*
*அண்டம் முழுவதும் வியாபித்து இருக்கின்ற ஆதிபராசக்தியே யாக குண்டத்தில் எழுந்தருள வேண்டி யாகத்தில் இடப்படும் ஆகுதிகளை அன்னையிடம் சேர்க்க பஞ்ச பூதங்களாக இருக்கின்ற அன்னையே யாக குண்டத்தில் ஆவாகணம் செய்து அவளிடமே ஆகுதிகளை நேரிடியாக சமர்ப்பிப்பது இங்கு நடைபெறும் ஆதிபராசக்தி வேள்வியின் சிறப்பம்சமாகும்.*
*“ஆலயத்தில் நடைபெறுகின்ற வேள்வியை பார்த்துக்கொண்டு அமைதியாக இருந்தாலே உங்களுக்கு பயனுண்டு. தியானம் செய்த பலன், யோகம் செய்த பலன் உண்டு. இந்த மந்திர ஒலிகள் உங்கள் உடம்பின்மேல் பட்டால் பெரும் பலன் உண்டு”. என்பது அன்னையின் அருள்வாக்கு.”*
மேலும் *” அன்னதானம்தான் சித்தர்களுக்கு உவப்பு, அந்த அன்னதானம்தான் ஆதிபராசக்திக்கு உவப்பு “* என்பது அன்னையின் அருள்வாக்கு.
ஆகவே சித்தர்கள் சிறப்பிக்கும் சித்திரை பௌர்ணமி நன்னாளில் வேள்வியுடன் அன்னதானத்தையும் நாம் செய்வதன் மூலம் சித்தர்களுடைய அருளாசியும் அன்னை ஆதிபராசக்தியுடைய அருளினையும் பெற்றுக்கொள்ளலாம்.
*ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா !*
குருவடி சரணம். திருவடி சரணம்.