மகளே! உன் கையில் உயிர்ப்பொருளைப் படைத்துத் தந்திருக்கிறேன். அவனவனும் சித்தி மூலம் பொன்னையும், வைரத்தையும் கூட வரவழைத்துத் தருவான் மகனே! ஆனால் உயிர் உள்ள ஒரு பொருளைப் பரம்பொருளைத் தவிர எவராலும் படைக்க முடியாது.*
*உயிர்ப்பொருளைப் படைத்துக் காக்கும் தாய் வந்திருக்கிறேன்.*
*இன்று எத்தனைபேர் தெரு முனையில் நின்று ஆதிபராசக்தி வந்திருக்கிறேன்! என்று என் வருகையை உள்ளத்தில் உறுதியோடு, உண்மையான நம்பிக்கையோடு, பாசமும் ,பக்தியும் மிகுந்த மனத்தோடு, உலகத்திற்குச் சொல்லியிருப்பீர்கள்? சொன்னதுண்டா மகளே? என்று அன்னை கேட்டாள்.*
*இந்த யுகத்தில் தெய்வத்தை காணவும், வணங்கவும், அது காட்டிய வழியில் வாழவும் எத்தனை பெரிய அரிய வாய்ப்பைத் தந்திருக்கிறேன் மகளே!*
*என்றோ வந்து போனான் ஏசு. இன்றும் இதோ ஏசு வரப்போகிறார்,இதோ வரப்போகிறார் என்று நம்பிக்கையோடு தேவாலய வாசல்களிலும், தெரு ஓரங்களிலும் ஒவ்வொரு நாளும் இளைஞர்களும், பெண்களும் பெரியவர்களும் அச்சடித்த தாளைப் போவோர் வருவோரிடமெல்லாம் தந்து ஏசுவின் வருகையை நம்பிக்கையோடு தெரிவிக்கிறார்களே….? எனக் கேட்டாள் அன்னை.*
இந்தத் தாயின் அருளுக்கும், ஆசிக்கும் நாமெல்லாம் தகுதி உடையவர்கள்தானா? என்ற கேள்வியே என்னுள் மேலோங்கி நிற்கிறது.
*நாமெல்லாம் நம் காரியம் நடந்தால் சரி, அதற்கு அம்மா வேண்டுமென்ற சுயநலத்தோடுதான் ஆன்மிகத்தில் ஈடுபட்டுள்ளோமா???*
நமக்கெல்லாம் நன்றி உணர்ச்சி வற்றி விட்டதா? சிந்தியுங்கள் செயல்படுங்கள்….
சக்திஒளி
மார்ச் 19 பகுதியிலிருந்து