• குருவைப் பார்! அவரே இறைவன்! அவா் உன்னை என்னதான் கொடுமைகள் செய்தாலும் இறுதியில் உனக்கு யாராலும் தரமுடியாத சுகத்தைத் தருவார். அவா் யாரையும் ஏமாற்ற மாட்டார்.
  • எந்த நொடியிலும் எந்தச் சூழ்நிலையிலும், எந்த மயக்கு சக்தியாலும் குருவைப் புறக்கணிக்காதே! குருவிற்குத் துரோகம் செய்யாதே!
  • அப்படி ஏதாவது செய்தால் நீ நரகத்திற்குப் போவாய். உன்னை யாராலும் காப்பாற்ற இயலாது.
  • குருவே தெய்வம் என்று இரு! நீ அடைய வேண்டியது தானே எளிதில் வந்து உன்னை அடையும். சற்குரு சரணாகதி தத்துவம் போன்று உலகில் எதுவும் கிடையாது.
  • குருவிடம் பொய் சொல்லாதே! நீ குருவிடம் சொல்லும் ஒவ்வொரு பொய்யும் உனக்குப் பிற்காலத்தில் கடுந்துன்பத்தை விளைக்கும். குருவின் வெறுப்புக்கு ஆளாகாதே!
  • தூங்குவதற்கு முன் ஐந்து நிமிடம் இறை தியானம் செய்! பிறகு குரு தியானம் செய்துவிட்டுப் படுத்துக்கொள்.
  • ஒருவா் தூங்கி எழுந்த இடத்தில் உட்கார்ந்து ஆன்மிக சாதனை செய்யாதே! சிறிது நீர் தெளித்துவிட்டு, குரு தியானத்தோடு சாதனையைத் தொடர்க!
  • உன் மரணத்திலும் சற்குருவைத் தரிசிக்கலாம். நீ மரணத்திடம் இருக்கும்போது அவா் சூக்கும உருவத்தில் உன் முன் தோன்றி ஆறுதல் அளித்து ஆசி அருளி மறைவார்.
  • சற்குரு தரிசனம் உயா்ந்தது. அவா் தவசக்தி உன்னுள் பாய்வதை சற்குரு தரிசனத்தில் நன்றாக உணரலாம்.
  • சற்குரு தரிசனம் பிரம்மத்தைக் காட்டும் தரிசனம்.
  • சற்குரு தரிசனம் சிவத்தைக் காட்டும், சூன்ய தரிசனத்தைக் காட்டும். மகா சக்தியைக் காட்டும். ஆத்ம தரிசனத்தைக் காட்டும். சக்தியின் படைப்புகளையும் இயக்கத்தையும் அக நிலையிலும் புற நிலையிலும் காட்டும். உன் மரணத்தை உனக்கு நண்பனாக்கும். இந்த இகத்தை உனக்கு அடிமையாக்கும். சத் – சித் ஆனந்தத்தை அனுபவிக்க வைக்கும்.
  • சற்குரு தரிசனம் மிக எளிதல்ல. சற்குரு உனக்கு எல்லா தரிசனங்களையும் காட்டிக் கொண்டே போவார். ஆனால் ஒரு நாளும் தன்னைக் காட்டிக் கொள்ள மாட்டார்.
  • ஞான வைராக்கியம் நிலைக்க சற்குருவைச் சார்ந்திருக்க வேண்டும். அவரது அருளால் விழிப்புணா்வோடு செயல்பட வேண்டும்.
  • சற்குரு இடத்தை, அவா் நடமாடும் இடத்தை மதிப்போடு தொட்டு வணங்கு! சற்குரு இருக்கும் திசையை நோக்கி வணங்கு! இவா் நடமாடும் இடம் புனிதமானது. சக்தி வாய்ந்தது.
  • சற்குருவின் அங்கதரிசனம் மகா சக்தி வாய்ந்தது. ஆனந்தமானது. பாதுகாப்பானது. சற்கருவின் அருள்தரிசனம் சாதகனை ஆன்மிகப் பாதைக்கு வேகமாக அழைத்துச் செல்லும்.
  • நன்றி!

    ஓம் சக்தி!

    ஞானகீதை

    சக்தி ஒளி, மார்ச், 2007

    பக்கம் 32 -33

    ]]>

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here