எனக்குப் பிடிக்கும்!

அம்மா.! உன் அழகிய முகத்தை பார்த்துக் கொண்டே இருக்கப் பிடிக்கும்! உன் கருணை விழிகள் கனிவுடன் என்னைப் பார்க்கிறதா? என்று ஏங்குவது எனக்குப் பிடிக்கும்! உன் அழகிய உதடுகள் மகளே!என்று அழைக்காதா? என என் மனம் தவிப்பது...

சொல்ல முடியுமா?

மருவூரார்! சொல்ல முடியுமா?  வெளியில்.. சொல்ல முடியுமா? சொல்லமுடியா  துயரங்களை சொல்லாமலே தீர்த்தநிலையை! மானம்போகும் என்றநிலையை மாற்றிமகிழ்வு தந்தமதியை! உன்னிடம்வந்து சொன்னாலும் உன்பெயரை  சொன்னாலும் மனமுருகி நின்றார்க்கு மழைபொழியும்  தன்னாலே! எத்தனையோ செய்துவிட்டாய் எதை சொல்வது? அத்தனையும் சொல்லிஎழுத இடம் உள்ளதா? குருவாக நீவந்த பெருமை சொல்லவா? கொற்றவனே..நீசெய்த மகிமை கொஞ்சமா? மருவத்தூர்  வந்தபின்தான் மாற்றம் வந்தது! மற்றவர்கள்  கேலி எல்லாம்  ஆட்டம் கண்டது! சொல்ல முடியுமா?  உலகில்.. சொல்ல முடியுமா? உனை நம்பாத கூட்டத்தில்  நானிதை சொல்ல முடியுமா? ? ......சபா ஸ்ரீமுஷ்ணம்

நின்… திருவடிக்கும் விழி உண்டு!

மருவூரார்! நின்... திருவடிக்கும் விழி உண்டு!  துதிப்போர்க்கு பலன் உண்டு! வானளாவிய இறையை.. மானுடமான மறையை.. நானுடன் இருக்கும்.. நற்பாக்கியம் கண்டு.. ஊனுடல் உள்ளம்.. உருகுதம்மா..நின்று! போதித்தோர்..உண்டு! உன்னைபோல்.. சாதித்தோர் உண்டா? தெய்வமா இருந்தாலும். . மானிடரை மதித்த  மகான்நீ! அரசாங்கம் தந்த பத்மஸ்ரீ. . அங்குகூட பரம்பொருள்.. பக்தர்களுக்காக செய்த அற்புதத்தை கொஞ்சம் கூட காட்டிக்காத.. அமைதியாய் பெற்ற..  ஆதிசக்தி குணாள மகேசன்நீ!மற்றவர்கள் வாங்குவது அவரவர்...

தெறிப்புகள்

கவிதைகள்