Home கவிதைகள்

கவிதைகள்

நின்.. திருவடியில் எம்மை சேரு!

மருவூரார்! புழுதியோடு இருந்தாலும்  அழுதுவரும்  குழந்தையினை.. அள்ளிக்கொள்ளும் தாயை போல... புலன்வழியில் ஆடினாலும் உன்னடியே  கதியென்றால் அரவணைப்பாய்  ஆசை தீர..! விழுதெனவே விழும்போது வேதனையை  தீர்த்திடுவாய்.. வேறென்ன  வேணும் கேட்க? விண்ணவரும் மண்ணவரும் வேண்டிதேடும் பரமசுகம்.. விளையாடுதே. நானும் பார்க்க..! எழும்பிரச்சனை எல்லாமும் இருமுடியை  தோள்தாங்க  ஏற்றுதருவாய்.. மாற்றம் நேரும்.. இனியஉனது  திருப்பெயரை.. எழுதிசொல்லி இடைவிடாது.. இன்பங்கொள்வார் ஏற்றம் சேரும்! நழுவவிட மனமில்லை. . நாயகனே இதுபோல்இனி அவதாரம் உண்டா கூறு? நான்'மறந்து நின்றாலும் நீமறவா  எனைதேற்றி..நின்.. திருவடியில்  ?எம்மை சேரு! .....சபா ஸ்ரீமுஷ்ணம். .

உன்னருகில் வந்ததுதான் தெரியும்!

மருவூரார்! உன்னருகில்  வந்ததுதான் தெரியும்!  உணர்வலைகள்  என்ன ஆச்சு. மயக்கம்!  உன்.. விழியை கவனித்தேனா? மொழியை கவனித்தேனா? உதடசைவை  கவனித்தேனா? அங்கு நடப்பதை நினைத்தானா? புரியாத உலகுக்கு  போய் வந்தேன்! புரிந்தாலும் கூறமுடியா ஊமையாய் நின்றேன்! சுற்றி உள்ளவர் கூறுவது உரைக்கவில்லை! சுயநினைவு இல்லையே.. குருநாதா. . என்ன சொன்னாய் நினைவில்லை! பற்றிய பாதத்தில்  மலரிட்டேன்! பரலோக சுகமதில் மிதந்திட்டேன்! சொல்கிறேனா.. உளறுகிறேனா.. புரியவில்லை. . சொல்லவந்த  வார்த்தைகளும்.. வரவுமில்லை! மறுபடியும் மறுபடியும்  உனது மொழி... ஒலிக்குது ஒலிக்கிது.. செவியின் வழி! கருவறையா.. அருட்கூடமா.. புரியவில்லை! கணநேரம் மறந்தநிலை அறியவில்லை! உன்னருகில்...

நின்… திருவடிக்கும் விழி உண்டு!

மருவூரார்! நின்... திருவடிக்கும் விழி உண்டு!  துதிப்போர்க்கு பலன் உண்டு! வானளாவிய இறையை.. மானுடமான மறையை.. நானுடன் இருக்கும்.. நற்பாக்கியம் கண்டு.. ஊனுடல் உள்ளம்.. உருகுதம்மா..நின்று! போதித்தோர்..உண்டு! உன்னைபோல்.. சாதித்தோர் உண்டா? தெய்வமா இருந்தாலும். . மானிடரை மதித்த  மகான்நீ! அரசாங்கம் தந்த பத்மஸ்ரீ. . அங்குகூட பரம்பொருள்.. பக்தர்களுக்காக செய்த அற்புதத்தை கொஞ்சம் கூட காட்டிக்காத.. அமைதியாய் பெற்ற..  ஆதிசக்தி குணாள மகேசன்நீ!மற்றவர்கள் வாங்குவது அவரவர்...

சொல்ல முடியுமா?

மருவூரார்! சொல்ல முடியுமா?  வெளியில்.. சொல்ல முடியுமா? சொல்லமுடியா  துயரங்களை சொல்லாமலே தீர்த்தநிலையை! மானம்போகும் என்றநிலையை மாற்றிமகிழ்வு தந்தமதியை! உன்னிடம்வந்து சொன்னாலும் உன்பெயரை  சொன்னாலும் மனமுருகி நின்றார்க்கு மழைபொழியும்  தன்னாலே! எத்தனையோ செய்துவிட்டாய் எதை சொல்வது? அத்தனையும் சொல்லிஎழுத இடம் உள்ளதா? குருவாக நீவந்த பெருமை சொல்லவா? கொற்றவனே..நீசெய்த மகிமை கொஞ்சமா? மருவத்தூர்  வந்தபின்தான் மாற்றம் வந்தது! மற்றவர்கள்  கேலி எல்லாம்  ஆட்டம் கண்டது! சொல்ல முடியுமா?  உலகில்.. சொல்ல முடியுமா? உனை நம்பாத கூட்டத்தில்  நானிதை சொல்ல முடியுமா? ? ......சபா ஸ்ரீமுஷ்ணம்

மருவத்தூர் மகானே!

மருவூரார்! மருவத்தூர் மகானே!  உனை காணாமல்  என்னால் இருக்க  முடியவில்லை!  உனை எண்ணாது நெஞ்சு துடிக்க முடிவதில்லை! உன்னிடம் வந்த.. ஒவ்வொரு நொடியும்.. உன்னதமான  நினைவலையில் ஒவ்வொரு நாளும் விடியும்! மவுனத்தில்  இருந்தாலும் மகத்தான நாடகம்..என மறுபடிதானே புரியும்! அவரவர்க்கு தகுந்த  ஆன்மீக பாதையை.. அள்ளி தந்தாயே.. அனுபவம்தானே  அறியும்! எந்த கோயிலில் ... எங்கு சென்றாலும். . உந்தன் பெயரையே.. சொல்லி வணங்குவதே எந்தன் மனதினில் பதியும்! பாசமே... கிடைக்காத பரிதவித்த நெஞ்சுக்கு.. பாசத்தை  ஊட்டி விட்டாய்! இரும்பினை...

மருவூரார்!

மனமது நினைவினில்.. சுகமதில் மலருது!  தனிவழி உருள்வலம்  வருகிற எழில்மது.. இனிமையில் லயிக்குது! இருந்தாலும். . இறையனே...இதுஇனி.. உனதுடல் அயர்வினை.. உணர்ந்திடில் ஒருபுறம் அளவிலா அழுகையில்.. உளமது. .கதறுதே..! படுகிற மனமினி.. பரம்பொருள் இறைவனே.. இதுஇனி நிறுத்திடு.. எனமனம் உருகுதே! இதுநாள் வரையிலும்.. இடரறு துணையென.. இருந்தெமை  அணைத்தனை.. இனியுனை.. பார்த்தால் போதும்..நீ பார்த்தால் போதும்...! எங்களுடன்..நீ. இருந்தால் போதும்!  உன்னுடன் நாங்கள் இருந்தால் போதும் ..?? குருநாதா! ...சபா ஸ்ரீமுஷ்ணம்....

உருகுதடி நெஞ்சே

மறுபடி மறுபடி ஜனனம் - இந்த மானிட வாழ்வில் சலனம் அம்மா உந்தன் அங்கம் விதி மாற்றிட மண்ணதில் உருளும் எதை நினைத்ததோ உனது நெஞ்சம் ... தரையில் வேகமாக தேகம் உருண்டதே பதை பதைத்ததே எனது நெஞ்சம்  அருமைத்தாயின்...

எனக்குப் பிடிக்கும்!

அம்மா.! உன் அழகிய முகத்தை பார்த்துக் கொண்டே இருக்கப் பிடிக்கும்! உன் கருணை விழிகள் கனிவுடன் என்னைப் பார்க்கிறதா? என்று ஏங்குவது எனக்குப் பிடிக்கும்! உன் அழகிய உதடுகள் மகளே!என்று அழைக்காதா? என என் மனம் தவிப்பது...

மருவூரார்!

எதற்கெம்மை படைத்தனை இடருறும்போ  தணைத்தனை... சிதறாதெமை சேர்த்தனை.. சிறகெனநீ இருந்தனை... உதறிடாதுள நிலையினை. உணர்ந்தபத இறையனே.. பதறவிடா வெள்ளரி.. பழவீடெமெக் கருளனே!... அய்யா... மருவூர் வாழ்.. மகாதேவா.... மருந்தாலும் அன்பாலும் மாறா பழவினை.. இருந்தாலே என்செய்வேன் விழிஒளி எரிஇனி! அருந்தவம் தொண்டுதுதியு ஆற்றா வயதினி.. தரும்வழியு மனமறக்கும் தடுமாறுந் நிலைசனி.. பருந்தாகி வந்தெமை.. பற்றியருள் பரமனே..! ? ....சபா ஸ்ரீமுஷ்ணம். ..

பணம் என்ன செய்யும்

"பணம் என்ன செய்யும்"...? " பதவிதான் என்ன செய்யும்"..?? "பகை என்ன செய்யும்"...?? "பாவிதான் என்ன செய்வான்...??? " பங்காரு பாலகனின் பாதங்களை பற்றிக் கொண்டு...., " பராசக்தி ஆலயத்தில் "..., " தொண்டு செய்யும் அடியவனை".....!!! "விதி என்ன செய்யும்"....? " வேதனைதான்...

தெறிப்புகள்

கவிதைகள்