மருவூரார்!

எதிலும் மனம்  லயிக்கவில்லை.. இதயம் வலி.. பொறுக்கவில்லை... உண்ண முடியவில்லை.. உறங்க முடியவில்லை.. உனக்கு உடல்நிலையில். . சிறிது தொய்வு என்றால்.. எண்ண இயலவில்லை. . என்ன விளையாட்டு. ??? சித்தர்கள் தலைவனாய்... சித்துக்களின்  முதல்வனாய்... எத்தனை உயிர் காப்பாற்றி... எத்தனை நோய் சீராக்கி.... பித்தங்களை நேராக்கி... பிரிந்த குடும்பம்  ஒன்றாக்கி. ... அளப்பரியா அற்புதங்கள். . அனுதினமும் செய்திட்டு... மகிழ்வித்த மகானே... எங்கள்....

திருபாதம் தருவாயே

இறந்தாலும் , இருந்தாலும்..!! பிறந்தாலும் , மறந்தாலும்..!! துறந்தாலும், சிறந்தாலும்...!! நிறைந்தாலும், உறைந்தாலும்...!! திறந்தாலும் ,மறைந்தாலும்..!! மலர்ந்தாலும், உலர்ந்தாலும்...!! #இறையான_மறையோனை #இனி_யானும் #பிரியேனே....!! குருவான பகவானே....!! நிறைவான திருமாலே...!! குருவான யுகவானே....!! பெருஞான பெரியோனே...!! " பிறைஞான பெருமானே"...!! "பிழையாவும் " "பொறுப்பாயே...!! #திருஞான_மலரோனே...!! #திருபாதம்_தருவாயே...!! ???????????? ...சபா ஸ்ரீமுஷ்ணம். ...

நீ தெய்வமோ சித்தரோ

அம்மா...! நீ_தெய்வமோ.. சித்தரோ...!! எனக்கு_தெரியாது...!! தெளிவானேன் உன்னாலே...!! அதை சொல்லமுடியாது....!!! பயம்.. படபடப்பு நடுக்கம்.. மனகலக்கம்.. எல்லாம் போய் வந்தது... தனி இலக்கம்....!! அவதாரம்....!! பரம்பொருள்_நீ #என்றார்கள்..!! அம்மா_என்று #உன்னிடம்_வந்தேன்....!! அனைவரும் மதித்து வந்தார்கள்....!!! எனக்கென்று முகவரி தந்தார்கள்...!! 'வாங்க சக்தி' கைகூப்பி வணங்குகிறார் உன்னாலே....!!! மதிப்பும் மரியாதையும் கிடைக்கிறது தன்னாலே....!! பதராகி_போயிருப்பேன்", காற்றோடு....!! பதறாதே' #என்றணைத்தாய் உன்னோடு.....!!! எண்ணுமுன்னே...

தெறிப்புகள்

கவிதைகள்