நாம் துன்பப்பட பல காரணங்கள் உண்டு.
அவற்றுள் சில:

நாம் பல பிறவிகளில் செய்த பாவங்களின் ஒரு பகுதி (நம்மிடம் உருவாகும் தீய எண்ணங்களால் சொற்களால் செயல்களால் வருவது.)

நம் ஐந்து தலைமுறையைச் சேர்ந்த முன்னோர்களின் பாவங்களின் ஒரு பகுதி. தாய், தந்தையரை அவமதித்தல், தெய்வ நிந்தனை, தோஷமுள்ள மனையில் வசிப்பது, தர்பணம் செய்யாமை, சாபங்கள், குல தெய்வ வழிபாடு செய்யாமை, பிறர் கண் திருஷ்டி, ஏவல், பில்லி, சூனியம் காரணமாக வரும் துன்பங்கள்.

இந்த துன்பங்களில் இருந்து விடுபட அவதாரமாக வந்துள்ள அன்னை சித்தர் பீடத்திலும், வீட்டில் இருந்த படியும் செய்யக்கூடிய பல எளிய வழிமுறைகளை சாதிமத பேதமின்றி அனைவரும் பின்வருமாறு அருளியுள்ளாள்.

அன்னையை மனதார ஏற்றுக்கொண்டு திடமான முழு நம்பிக்கையுடன் பரிபூரண சரணாகதி அடைந்தால் அன்னையின் அருள்வட்டத்தில் வைத்து நிச்சயம் நம்மை துன்பங்களிலிருந்து பாதுகாப்பாள்.

“நவக்கிரகங்கள் எல்லாம் என்னுடைய கால் பெருவிரலின் கீழே விழுந்து நசுங்கிக் கொண்டிருக்கின்றன. மக்கள் துன்பம் கிரக தோஷங்களாலும் உண்டாகும். அக்கிரகங்களை எல்லாம் கட்டுப்படுத்தி இயக்கும் சக்தி படைத்தவள் நான். அதனால் தான் இங்கே நவக்கிரக கோவில் இல்லை” இது அன்னையின் அருள்வாக்கு

]]>