“மகளே!!. நீ நான் கூறும் முறைப்படி , விரதமிருந்து, முழுமையாக பக்தி செலுத்தி இருமுடி கட்டிக் கொண்டு வா…”*
*”பயணத்தின் இடையில் வேறெங்கும் செல்லாதே..”*
———————————–
*”மன்றத்தில் இருந்து இருமுடியை ஏந்திய பின்பு நேராக ஆலயத்தில் வந்து செலுத்திய பின்னர் நேராக உன் இல்லம் செல்.. இடையில் வேறெங்கும் இறங்கி செல்லாதே…”*
*”தந்ததை சிதறவிடாதே”*
—————————————
*”நான் தந்த இருமுடிப் பலனை வேறெங்கேயாவது இறக்கிவைத்துவிட்டு, சிதறவிட்டு விட்டு பின்னர் அம்மா நான் ஒன்றும் உனக்கு செய்யவில்லை என்று வருத்தப்பட்டு பயனில்லை..”*
*”புரிந்து கொள்..நான் தரத் தயார் என்றாலும் நீ பெறத் தயாராக இருக்க வேண்டும்..”*
— அன்னையின் அருள்வாக்கு.
( நம்மிடையே நிறையபேர் இருக்கின்றனர்..
மன்றத்தில்/சக்தி பீடங்களில் இருந்தும் இருமுடியை ஏந்திய பின்பு நேராக ஆலயம் செல்லாமல், செலுத்திய பின்னர் ஆலயத்தில் இருந்தும் நேராக தங்களது இல்லம் செல்லாமல் வரும் வழியில் எல்லாம் அத்தனை கோயில்களையும் இறங்கி, இறங்கி இடங்களையும் சுற்றிப் பார்த்துவிட்டு பின்னர்தான் தங்களது இருமுடிப் பயணத்தை முடித்துக் கொள்கிறார்கள்..
இது தவறான செயல்..
அவள் தந்த இருமுடிப் பலனை இப்படி வரும் வழியில் சிதறவிட்டு பின்னர் அம்மாவின் மீது வருத்தப்பட்டு என்ன ஆகப் போகிறது..
ஆகவே இனிமேல் இருமுடிப் பயணத்தை
மன்றம்/சக்திபீடம் >>>>>>>> ஆலயம்…
ஆலயம் >>>>>>>>> உங்களுடைய இல்லம்…
முறைப்படி செலுத்தி அன்னையின் அருளை பெற அழைக்கிறோம்..)
குருவடி சரணம்.
திருவடி சரணம்.