“அடிகளாரின் அருள்வாக்கு அருள் மணக்கும், அருள் தமிழ் பா மணக்கும், அறம் இருக்கும், உயர்ந்த தரம் இருக்கும், அன்பிருக்கும், அரிய பண்பு கலந்திருக்கும், பணிவிருக்கும், பக்தி நெறியும் கூட இருக்கும். இனிமை இருக்கும், எளிமை, கடமை, கருணை, கனிவு இருக்கும், கன்னித் தமிழ் இருக்கும், தமிழ் கூறும் நல் உலகிற்குக் கிடைத்த ஓர் ஒப்புயர்வுற்ற கருவூலம்” என்று கூறியதோடு “அடிகளார் நா அசைந்தால் நாடு அசைகிறது, பல்லாயிரக் கணக்கான மக்களின் உள்ளம் நெகிழ்கிறது, பணக்காரர்களின் பைகள் நெகிழ்கின்றன, அதிகார மிடுக்கும், அகங்காரத் துடுக்கும் உள்ளவர்கள் நெகிழ்ந்து போகிறார்கள். கொடுக்காத லோபியும் நல்ல காரியத்துக்குக் கொடுக்க முன்வருகிறான். அடிகளார் ஒருவரால் மட்டுமே இத்தகைய மாபெரும் எழுச்சியை உண்டாக்க முடியும்” என்று கூறினார் நன்றி ஓம்சக்தி! முனைவர். ஆண்டாள் இராமலிங்கம் கல்வியியல் பேராசிரியர் அண்ணாமலை நகர் மருவூர் மகானின் 69வது அவதாரத்திருநாள் மலர்.

]]>