பக்தி வளர வளர ஒழுக்கம் வர வேண்டும். எனக்குப் பொன் வேண்டாம், பொருள் வேண்டாம். உன் அன்பும் அருளும் வேண்டும் என்று உருகுவது பக்தி. இறை நாட்டத்தில் சுவை காண்பவன் பக்தன். பலன் எதிர்பாராத பக்தி வளர வளர இறை அனுபவம் கூடும். திருவருள் கூடினால் பக்தி ஏற்படும். அன்னையிடம் அருள்வாக்கு கேட்க ஓர் அன்பர் வந்தார். “அம்மா? படாத பாடு படுகிறேன். எனக்கு செல்வம் கொடு” என்று கேட்டார். அன்னையோ! “உனக்குப் பக்தியைக் கொடுக்கிறேன். இதுவே பெரிய செல்வம், போய் வா!” என்று அருளியுள்ளாள். பக்தியை எப்படி வளர்த்துக் கொள்வது? பக்தியை வளர்த்துக் கொள்ள உதவும் பண்புகளாக இராமானுஜர் கூறுவதாவது… நேர்மை, இரக்கம், உண்மை உணர்வு, நல்லன செய்யும் எண்ணம், உயிர்களிடம் அன்பு, நாள் முழுவதும் இறைவனின் சிந்தனை, தான தருமம் செய்யும் மனம், உலகத்தில் எது நிலையானது?, எது நிலையற்றது? என்ற தெளிவு, எப்பொழுதும் நல்லன நினைத்து மனதை சந்தோசமாக வைத்திருத்தல். ஒவ்வொரு பக்தனும் இறைவனிடம் முழுமையாகச் சரணாகதி அடைதல், இறைவனை நண்பனாக நினைத்து உறையாடுவது என்ற குறிக்கோள் கொண்டாலே பக்தியிலே திளைக்கலாம். இதனால் எப்பொழுதும் இறைவனின் நினைவாக இருக்கலாம். ஒவ்வொரு உயிருக்கும் செய்யும் தொண்டு கடவுளின் திருவடிக்குச் செய்யும் தொண்டாகக் கருதப்படுகிறது. அருள்திரு அம்மா அவர்கட்குப் பாதபூசை செய்து அருட்தரிசனம் பெறுவதாலும், ஆலயம் வலம் வரும்போது திருவடி தரிசனம் பெறுவதாலும் மேலே கூறப்பட்டுள்ள அனைத்துப் பண்புகளையும் அருள்திரு அம்மா அவர்கள் நமக்கு அருள்கிறார்கள். மேல்மருவத்தூர் அன்னையிடம் சரணடைந்து பக்தன் அமைதி பெற்று ஆன்மிக வளர்ச்சியில் மேம்பாடு அடைகிறான்.

]]>