சமுதாய வளர்ச்சிக்குத் தக்கவாறு
தான் பாலகனின் ஆற்றலை வெளிபடுத்துவேன்.
என்பது அன்னையின் அருள்வாக்கு.
ஒரு சுவையான நிகழ்ச்சி. ஒரு சித்திரா பௌர்ணமி விழாவின்போது அருள்திரு அடிகளார் அவர்கள் ஆலயத்தை வலம்வந்து அன்னையின் கருவறைக்குள் நுழைந்து தீபாராதனை செய்துவிட்டுக் கருவறையை விட்டு வெளியே வரும்வேளை, அப்பொழுது அங்கே இருந்தவர்கள் அன்னையின் மனதில் இடம் பெற்ற தொண்டர்கள்.
ஆன்மிகத்தில் கனிகின்ற நிலையில் இருப்பவர்கள்.எவ்வளவோ புண்ணியம் செய்தவர்கள்.
அவர்கள் எல்லோருக்கும் மனதில் ஒரு எதிர்பார்ப்பு. இந்த விழாவின் போது அன்னை ஏதாவது சித்தாடல் புரியுமே…இந்த முறை அன்னை வந்தால் ஏமாந்து விடக்கூடாது என்கிற உறுதியோடு நின்று கொண்டிருந்தார்கள்.
அவர்களைப் பார்த்து அருள்திரு. அடிகளார்
அவர்கள் அம்மாவோட நெற்றியைப் பாருங்கள் என்று திருவாய் மலர்ந்தவுடன் அவர்கள் அத்தனை பேருமே ஒரு சேரக் கருவறைக்குள்ளே அம்மாவின் சிலையைப் பார்த்தபொழுது, அந்த நெற்றியில் சூரியப்பிரகாசம் போல் ஒளி தோன்றும் திகழ்ந்ததைக் கண்டு ஆனந்தப் பரவசம் அடைந்திருக்கின்றார்கள்.
அப்பொழுது அவர்கள் கருவறையினுள் சிலை அம்மனைப் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையிலேயே அருள்திரு அடிகளார் அவர்களுக்கு நேரெதிரே நின்று கொண்டிருந்தவர்கள் அதே வேளையில் அருள்திரு. அடிகளார் அவர்களின் முகத்தைப் பார்த்தபோது அங்கே அதே ஜொலிப்புடன் நெற்றிக் கண் தெரிந்திருக்கிறது. அதனைப் பார்த்தவர்கள் அனைவரும் அம்மா! அம்மா! என்று ஆனந்தம் மேலிடக் கூறியிருக்கின்றார்கள்.
கருவறையினுக்கு உள்ளேயிருந்து வந்தவர்கள் அம்மா நெற்றியைப் பாருங்கள் என்றவுடன்தான் அம்மாதான் அடிகளார்! அடிகளார்தான் அம்மா! என்ற தத்துவத்தை சதாகாலமும் உணர்ந்திருந்து அம்மா என்றவுடன் அடிகளாரைப் பார்த்திருந்தால் அவர்களுக்கும் நெற்றிக்கண் தரிசனம் கிடைத்திருக்கும்.
அதனால் அவர்களுக்கு என்ன பலன் கிடைத்திருக்குமோ? ஒருவேளை முக்திகூடக் கிடைத்திருக்கலாம்.
எவ்வளவோ பிறவியில் புண்ணியம் செய்திருந்தால்தான் அன்னையிடம் நெருங்கும் வாய்ப்புக் கிடைக்கும்.
அப்படிப் புண்ணியம் செய்தவர்களைக் கூட மாயை மடக்கி விடும். உலகம், மனைவி, மக்கள் இவைகளும் மாயைதான். இவற்றையெல்லாம் விட அகங்காரம்தான் உயிர் என்றே சொல்லலாம்.
பரம்பொருளிடத்திலிருந்து நம்மை வேறுபடுத்திகின்ற, வேறுபடுத்திக் காட்டுகின்ற எதுவுமே ஒரு மாயைதான்.
உடலை தான் என்று நினைப்பது அகங்காரம். அவ்வுடலின் சார்பாக வந்த என் நாடு, என் மனைவி, என் மக்கள், இது எனது, இதை நான் செய்வேன் என்பதெல்லாம் அகங்காரமேயாகும். இவ்வகங்காரம் உள்ளவரை மாயையானது சர்வலோகமும், வியாபிக்க்கும். அந்த வியாபகத்தில் சிக்கி உழன்று கொண்டுதான் மீள முடியாமல் நாம் தவிக்கின்றோம்.
நம்மையெல்லாம் மீட்டுக் கரை சேர்க்க வந்த கலியுக தெய்வம் தான் அடிகளார் என்று நாம் கிஞ்சித்தும் சந்தேகத்திற்கிடமின்றி என்று நினைக்கிறோமோ அன்றே மாயத்திரை நம்மை விட்டு அகல ஆரம்பிக்கும். மாயை என்பது வந்து போவதில்லை. உண்மையில் அது இல்லாத ஒன்று. உண்மையில் அது இல்லாத ஒன்று. உண்மையில் இருப்பதை பரம்பொருளை இல்லாதது போலக் காட்டுவதாகும்.
பரம்பொருள் வரும்போது மாயை கூடவே வரும். அதுதான் அன்னையின் விளையாட்டு.
சக்திஒளி
ஏப்ரல் 17